Wednesday, May 11, 2011

இலண்டன் வாழ் அதிரைவாசிகளின் சமூகக் கவலை!!


MAY11 அதிரை சகோதர,சகோதரிகளே அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துகு

சமீபகாலமாக நமதூரில் பல்வேறு விபத்துக்கள் ஏற்பட்டு இளைஞர்கள் பலர் உயிரிழந்தனர் என்பதை நாம் அறிவோம். இதற்கு காரணம் நமதூரில் சரியான மருத்துவமனை இருந்தும் நாம் கண்டுக்கொள்ளாத அவலநிலை தான் இதற்குக் காரணம், நம்மில் உள்ள பலகீனம் நாமெல்லாம் அறிவோம். 

அதிரையில் வசித்த சகோதர்களும், மற்றும் வெளிநாட்டில் வசித்த சகோதர்களும் நன்கொடையாக கொடுக்கப்பட்ட நிதியினால் கட்டப்பட்ட (ஷிஃபா) மருத்துவமனை இப்போது (கேட்பாறற்று) கிடக்கின்றது.

நமதூரில் அதிக ஆர்வமுள்ள இளைஞர்கள் இருந்தும் இதை பற்றிக் கண்டுக்கொள்ளாமல் இருப்பது மிகவும் வேதனையாக உள்ளது. நமதூர் வாசிகள் எந்த ஒரு நோயாக இருந்தாலும் பட்டுக்கோட்டைக்கும், தஞ்சாவூருக்கும் அள்ளல் படும் அவல நிலை ஏற்படுகிறது.

இதனால் முதல் சிகிச்சை(FIRST AID)இல்லாமலும் நம் கண் எதிரேயே பல உயிர்கள் பிரிந்துள்ளது.

இதனால் நமதூர் சகோதர, சகோதரிகள் பல சிரமத்துக்கு ஆளாகிறார்கள். இப்பொழுது நாம் செய்ய வேண்டியது அந்த மருத்துவமனையுடைய நிருவாகிகளை நாம் அனுகி மருத்துவர்களை நியமனம் செய்வதிலே மும்முரமாக ஈடுபட வேண்டும்.வெளிநாட்டில் வசிக்கும் அதிரை வாசிகளும்
மருத்துவமனை நிருவாகிகளுடன் இதை பற்றி கலந்து ஆலோசித்து இருக்கிறோம். இதற்காண மருத்துவமனை மறுசீறமைப்பிற்காக நிதி திரட்ட வருகிறோம். அதிலும் நாம் பங்கேற்க வேண்டும். 

குறிப்பாக இந்த மருத்துவமனையைப் பொறுத்தவரை (1) மகப்பெறு மருத்துவர்.
(2) குழந்தை மருத்துவர்.(3) இரவில் பணிபுரிய ஒரு மருத்துவர் மற்றும் இரத்த வங்கி இவை அனைத்தும் அன்றாட தேவைபடும் ஒன்று. இந்த வசதிகள் கூட தற்போது இந்த மருத்துவமனையில் இல்லை.இதில் ஒரு நல்ல விஷயம் என்னவென்றால் சுகாதர வசதிகளுடன் அமைந்துள்ளது. சற்று சிந்தித்து பாருங்கள். இப்போது இந்த மருத்துவமனயை சீரமைத்தால் நமதூரை சுற்றி உள்ள பல கிராமங்கள் நமதூர் ஷிஃபா மருத்துவனையில் பயன் அடைவார்கள்.

நாமெல்லாம் ஒற்றுமையுடன் ஒரு குடையின் கீழ் பணியாற்றினால். இந்த மருத்துவமனையை புதுப் பொழிவுடன் காணலாம். இதனைக் கொண்டு நமதூரில் வணிகமும் பெறுகும்.

இதற்கான முயற்சியை சகோதர்கள் மிக விரைவில் பணியாற்ற வேண்டுமென்று அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

இங்ஙனம்

லண்டன் வாழ் அதிரை வாசிகள்

மற்ற நாடுகளில் வசிக்கும் அதிரை வாசிகளும் இவர்களுடைய கவலையில் பங்கெடுப்போமே.

0 comments:

Post a Comment