, May 18 டிரிபோலி: லிபியாவில் தலைநகர் டிரிபோலி மீதான "நேட்டோ' விமானப் , படைகளின் குண்டு வீச்சு வலுத்துள்ளது. கடாபி குடியிருப்பு வளாகத்தின் அருகில் உள்ள இரு அமைச்சகங்கள், குண்டு வீச்சில் தீக்கிரையாயின. இந்நிலையில் கடாபி அமைச்சரவையின் எண்ணெய் வளத்துறை அமைச்சர் தனது பதவியில் இருந்துவிலகி, எதிர்த் தரப்பில் சேர்ந்து கொண்டார்.
லிபியாவில் கடாபி ராணுவத்தின் தாக்குதலைத் தடுக்கும் வகையில், "நேட்டோ' தனது தாக்குதலை விரிவுபடுத்த வேண்டும் என்று சமீபத்தில் பிரிட்டன் கேட்டுக் கொண்டது.இதையடுத்து கடந்த இரு நாட்களாக, தலைநகர் டிரிபோலியின் பல பகுதிகளில் "நேட்டோ' விமானப் படைகள் குண்டுகளை வீசித் தாக்கி வருகின்றன.இந்நிலையில், நேற்று கடாபி குடியிருப்பு வளாகத்தின் அருகில் உள்ள ஊழல் தடுப்பு அமைச்சகம் மற்றும் பொதுப் பணித் துறை அமைச்சகம் ஆகியவற்றின் மீது "நேட்டோ' குண்டுகளை வீசியதில், இரு அமைச்சகங்களும் தீக்கிரையாயின.இச்சம்பவத்தில் ஊழியர்கள் சிலர் காயம் அடைந்ததாகத் தெரிவித்துள்ள லிபிய அரசு, எதிர்த் தரப்புதான் "நேட்டோ'வுக்குத் தவறான வழிகாட்டி வருவதாகக் குற்றம்சாட்டியுள்ளது.இதற்கிடையில், லிபியாவின் தேசிய எண்ணெய் கார்ப்பரேஷன் துறை அமைச்சர் ளஷாக்ரி கனீம்(68) நேற்று தனது பதவியில் இருந்து விலகி, எதிர்த் தரப்பில் சேர்ந்து விட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்காவில் படித்த இவர், எண்ணெய் வளக் கூட்டமைப்பு நாடுகளின் (ஓபெக்) கூட்டத்தில் லிபியா சார்பில் கலந்து கொண்டவர்.அவர் தற்போது எங்கிருக்கிறார் எனத் தெரியவில்லை என்று எதிர்த் தரப்பு தெரிவித்துள்ளது. அவர் டுனீசியாவிற்குச் சென்றிருக்கக் கூடும் என்று தகவல்கள் கூறுகின்றன.அதேநேரம், ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவில் நேற்று லிபிய அரசின் பிரதிநிதிகளுடன், ரஷ்ய அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அதைத் தொடர்ந்து பெங்காசியில் உள்ள எதிர்த் தரப்பு பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்
0 comments:
Post a Comment