11 May 2011
அஹ்மதாபாத்:சஞ்சீவ் பட்டின் குஜராத் முதலமைச்சர் மோடியை எதிர்த்து நடத்தப்படும் யுத்தம் புதிய பரிமாணத்தை எட்டியுள்ளது. பட் தற்போது பிப்ரவரி 27, 2002 ஆம் ஆண்டின் ஆதார பதிவுகள் உள்ள அறைக்கு தனுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக மாநில காவல்துறை தலைமை இயக்குனரிடம் புகார் அளித்துள்ளார்.
குஜராத்தின் 1998 ஆம் ஆண்டில் தேர்வு பெற்ற பட் பிப்ரவரி 27, 2002 ஆம் ஆண்டு நடைபெற்ற கோத்ரா ரயில் எரிப்புக்கு பின்னர் குஜராத் முதலமைச்சர் மோடி உயர் பதவிகளில் இருக்கும் அதிகாரிகளிடம் முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் போது அவர்களுக்கு உதவக் கூடாது என தெரிவித்திருந்தார் என்று பிரமாண பத்திரம் தாக்கல் செய்திருந்தார்.
இதை வருகின்ற மே பதினாறாம் தேதி நானாவதி-மேத்தா கமிஷன் முன்னிலையில் விளக்க உள்ளார். மேலும் அவர் சிறப்பு புழனாய்வுக் குழுவின் தலைவர் ராகவனுக்கு தான் இதுவரை அளித்த அணைத்து ஆதாரங்களுக்கும் சான்றிதல் வழங்குமாறு
கோரியுள்ளார். மேலும் தான் மோடி பிப்ரவரி 27, 2002 ஆம் ஆண்டு நடத்திய கூட்டத்தில் பங்கேற்றதாக தெரிவித்திருந்தார்.
கோரியுள்ளார். மேலும் தான் மோடி பிப்ரவரி 27, 2002 ஆம் ஆண்டு நடத்திய கூட்டத்தில் பங்கேற்றதாக தெரிவித்திருந்தார்.
ஆனால் சஞ்சீவ் பட் அந்த கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்று மோடியும் மற்றும் பிற அதிகாரிகளும் மறுத்து வந்த நிலையில் காவலர் பிராம்பட், சஞ்சீவ் பாட்டிற்கு ஆதரவாக பேசியுள்ளார். காவலர் பிராம்பட் மேம்நகரில் தலைமை காவலராக பணிபுரிந்தவர். பிப்ரவரி 27, 2002 ஆம் ஆண்டு நடந்த கூட்டத்தில் பங்கு கொள்ள உரிய நேரத்திற்கு சஞ்சீவ் பட் வராததால் காவலர் பிராம்பட் சஞ்சீவின் இல்லத்திற்கு சென்று விசாரித்து வருமாறு அனுப்பப்பட்டுள்ளார்.
காவலர் பிராம்பட் சஞ்சீவின் இல்லத்திற்கு சென்று விசாரித்த போது அவர் முன்னமே சென்று விட்டதாக அவருக்கு தகவல் கிடைத்ததாக தெரிவித்தார். சஞ்சீவ் பட் மோடிக்கு எதிராக செயல்பட்டதை தொடர்ந்து தற்போது பிப்ரவரி 27 ,2002 ஆம் ஆண்டின் ஆதார பதிவுகள் உள்ள அறைக்கு தனுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக மாநில காவல்துறை தலைமை இயக்குனரிடம் புகார் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment