Tuesday, May 17, 2011

கடாபியை கைது செய்யும் சூழ்நிலையில் புதிய முடிவு


may.17 டிரிபோலி: கடாபி மற்றும் அவரது மகன்களைக் கைது செய்ய சர்வதேச கிரிமினல் கோர்ட் (ஐ.சி.சி.,)தயாராகிவிட்ட நிலையில், லிபிய அரசு திடீரென உடனடிப் போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.

லிபியாவில் அதன் தலைவர் கடாபிக்கு எதிரான மக்கள் போராட்டம், நான்காம் மாதமாகத் தொடர்கிறது.கடாபித் தரப்பு ராணுவத்தின் போர்க் குற்றங்கள் பற்றிய ஆதாரங்கள் ஏற்கனவே சர்வதேச கிரிமினல் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டன. இதைத் தொடர்ந்து, கடாபி மற்றும் அவரது மகன்களைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளில் ஐ.சி.சி., இறங்கியுள்ளது.இதுகுறித்து நேற்று முன்தினம் பேட்டியளித்த ஐ.சி.சி.,யின் வக்கீல்,"கடாபி மற்றும் அவரது மகன்களைக் கைது செய்வதற்கான முன்னேற்பாட்டு நடவடிக்கைகள் கிட்டத்தட்ட முடிந்து விட்டன' என்றார்.

இந்நிலையில்,நேற்று முன்தினம், ஐ.நா.,வின் சிறப்புத் தூதர் அப்துல் இலா அல் காதிப் லிபியாவுக்குச் சென்று, பிரதமர் பாக்தாதி மஹ்மூதியைச் சந்தித்துப் பேசினார்.இச்சந்திப்புக்குப் பின் பேட்டியளித்த மஹ்மூதி,"லிபிய அரசு உடனடிப் போர் நிறுத்தத்தை விரும்புகிறது. அதோடு, "நேட்டோ'வும் தனது தாக்குதல்களை நிறுத்திக் கொள்ள வேண்டும். ஜனநாயகப் பேச்சுவார்த்தைகள் மூலம், லிபிய மக்கள் தங்கள்உள்நாட்டுப் பிரச்னைகளைத் தீர்த்துக் கொள்வதற்கான உரிமைகளை உடையவர்கள்' என்று தெரிவித்தார்.

0 comments:

Post a Comment