Tuesday, May 31, 2011

செத்தது 10 கோடி; சாகப்போவது 100 கோடி!


புகையிலையினால் மனித குலத்திற்கு ஏற்படும் அகால மரணங்களைத் தடுக்க கடுமையான சட்ட அமலாக்கங்கள் தேவை என உலகச் சுகாதார நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.
ஆண்டொன்றுக்கு புகையிலை நோயால் 60 இலட்சம் பேர் மரணமடைவதாக உலகச் சுகாதார நிறுவன புள்ளி விவரம் கூறுகிறது.
“இருதய நோய், வாதம், புற்றுநோய், உயர்ந்த இரத்த அழுத்தம் ஆகிய நோய்கள் புகையால் ஏற்படுகின்றன. தொற்றா நோய்களில் 63 விழுக்காடு புகையிலையால் ஏற்படுகிறது எனப் புள்ளி விபரம் கூறுகிறது. அதோடு புகையிலையைப் பயன்படுத்துவோரினால் அதன் அருகிலிருப்போருக்கு எற்படும் மரணங்கள் 6 இலட்சம் எனவும் அது விவரிக்கிறது.
உலக சுகாதார நிறுவனத்தின் சீனப்பிரதிநிதி டாக்டர் மைக்கல் ஓ வியரி இதுபற்றிக் கூறும்போது, “தடுக்கப்பட்டிருக்கக்கூடிய மரணங்களில் பெரும்பான்மையானவை புகையிலையால் ஏற்படும் மரணங்களே” என்கிறார்.
எதிர்வரும் 2030இல் புகையிலை மரணங்கள் 80 இலட்சத்தை எட்டும். 20 ஆம் நூற்றாண்டில் புகையிலை 10 கோடி பேரைக் கொன்றிருக்கிறது. 21 ஆம் நூற்றாண்டில் இது 100 கோடிப் பேரைக் கொல்லும் என மதிப்பிடப்படுகிறது.
“வேண்டாம் புகையிலை” நாளான இன்று உலக நாடுகளுக்கு உலக சுகாதார அமைச்சு விடுக்கும் கோரிக்கை; வீடுகளுக்குள்ளும், அலுவலகங்களுக்குள்ளும் புகைப்பதைத் தடைசெய்யுங்கள். புகைப்பதை மேம்படுத்தும் முயற்சிகளுக்கு அதிகமான வரியை விதியுங்கள்” என்பதுதான் என சுகாதார நிறுவனம் கோருகிறது.

0 comments:

Post a Comment