இஸ்லாமாபாத், மே 18-
ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் (பன்னாட்டு ராணுவம்) முகாமிட்டுள்ளது. இந்நிலையில் ஆப்கானிஸ்தான் எல்லையில் உள்ள பாகிஸ்தானின் வடக்கு வசிரிஸ்தான் ஆத்மி காட் பகுதிக்குள் நேட்டோ படையை சேர்ந்த 2 ஹெலிகாப்டர்கள் அத்துமீறி நுழைந்து பறந்தன.
இதை கவனித்த பாகிஸ்தான் ராணுவத்தினர் அந்த ஹெலிகாப்டர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தினர். பதிலுக்கு நேட்டோ படையினரும் சுட்டனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்தது.
அதில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் 2 பேர் காயம் அடைந்தனர். இந்த தகவலை பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பாகிஸ்தான் வான்வெளி எல்லைக்குள் நேட்டோ ஹெலிகாப்டர்கள் பறந்ததால் அந்நாட்டு ராணுவத்தினரை ஆத்திரம் அடைய செய்துள்ளது
0 comments:
Post a Comment