Wednesday, May 11, 2011

இனி ஸ்கைஃப் மைக்ரோஸாஃப்டுக்கு சொந்தம்

skype
வாஷிங்டன்:இணையதள தொலைபேசி சேவைநிறுவனமான ஸ்கைப்பை மென்பொருள் துறையில் பிரபலமான மைக்ரோஸாஃப் விலைக்கு வாங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.8.5 பில்லியன் டாலர் தொகைக்கு மைக்ரோஸாஃப்ட் ஸ்கைப்பை வாங்கியுள்ளது என அச்செய்தி கூறுகிறது.ஆனால், மைக்ரோஸாஃப்டும், ஸ்கைப்பும் இது குறித்து பதிலளிக்கவில்லை.
லக்ஷம்பர்க்கை தலைமையகமாக கொண்டு செயல்படும் ஸ்கைப்பிற்கு சர்வதேச அளவில் 66 கோடியே 30 லட்சம் பயனீட்டாளர்கள் உள்ளனர். கடந்த ஆண்டு ஆகஸ்டில் ஸ்கைப் பங்குகளை விற்பதாக அறிவித்த போதும் பின்னர் வேண்டாமென முடிவெடுக்கப்பட்டது. இணைய தள ஏல நிறுவனமான இபே 2006-ஆம் ஆண்டு ஸ்கைப்பை 2.6 பில்லியன் டாலர்களுக்கு விலைக்கு வாங்கியது. 2009-ஆம் ஆண்டு 70 சதவீத பங்குகள் இரண்டு பில்லியன் டாலர்களுக்கு விற்றது.
வீடியோ கான்ப்ரன்சிங் வசதியை மேம்படுத்துவதற்காக மைக்ரோஸாஃப்ட் ஸ்கைப்பை விலைக்கு வாங்கியுள்ளதாக வல்லுநர்கள் கூறுகின்றனர்.

0 comments:

Post a Comment