Tuesday, May 31, 2011

ஒரே மாதத்தில் 2 சூரிய கிரகணங்கள்-ஒரு சந்திர கிரகணம்!


Antarctic Total Solar Eclipse. Image by Fred Bruenjes
may 31
சென்னை: வரும் ஜூன் 2ம் தேதி முதல் ஜூலை 1ம் தேதிக்குள் ஒரே மாதத்தில் அடுத்தடுத்து 3 கிரகணங்கள் ஏற்படவுள்ளன. இதில் இரண்டு சூரிய கிரகணங்களாகும், ஒன்று சந்திர கிரகணமாகும்.

இதில் இரண்டு சூரிய கிரகணங்களும் இந்தியாவில் தெரியாது. சந்திர கிரகணத்தை மட்டுமே இந்தியாவில் பார்க்க முடியும்.

ஜூன் 2ம் தேதி இந்திய நேரப்படி நள்ளிரவு 12.55 மணி முதல் அதிகாலை 4.37 மணி வரை சூரிய கிரகணம் ஏற்படவுள்ளது. இதை சீனா, சைபீரியா, கிழக்கு ஆசிய நாடுகளில் காண முடியும்.

ஜூன் 15ம் தேதி இரவு 11.52 மணி முதல் அதிகாலை 3.33 மணி வரை சந்திக கிரகணம் ஏற்படும். இதை இந்தியாவிலும், ஆசியா, வளைகுடா நாடுகள், ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, ஐரோப்பா, தென் அமெரிக்கா மற்றும் அட்லாண்டிக் கடல் பகுதியில் காண முடியும்.

ஜூலை 1ம் தேதி மாலை 6.15 மணி முதல் இரவு 9.48 மணி வரை அடுத்த சூரிய கிரகணம் ஏற்படும். இதை இந்தியப் பெருங்கடல் பகுதியிலும், அண்டார்டிகா பகுதியிலும், மடகாஸ்கரிலும் காணலாம். ஆனால், இந்தியாவில் இது தெரியாது.

இந்த மூன்று கிரகணங்களுமே வட அமெரிக்காவில் தெரியாது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தச் செய்தியில் இடம் பெற்றுள்ள படம், 2003ம் ஆண்டு அண்டார்டிகாவில் ஏற்பட்ட நீண்ட சூரிய கிரகணத்தைக் காட்டுகிறது. இதை படம் பிடித்தவர் பிரட் ப்ருயென்ஜெஸ். சூரியனை சந்திரன் மறைக்கும் அந்த கணத்தை மிக அட்டகாசமான படம் எடுத்துள்ளார்.

0 comments:

Post a Comment