may 17
எகிப்தில் 30 ஆண்டுகள் அதிபராக இருந்த ஹோஸ்னி முபாரக்குக்கு எதிராக கடந்த பிப்ரவரி 11-ந் தேதி பொதுமக்கள் போராட்டம் தொடங்கினார்கள். இதையடுத்து 17 நாட்கள் போராட்டத்தை தொடர்ந்து அவர் பதவி விலகினார். தற்போது அங்கு ராணுவ ஆட்சி நடந்து வருகிறது.
இந் நிலையில், முன்னாள் அதிபர் முபாரக், அவரது மனைவி சுஷானே முபாரக், மகன்கள் அலா, கமல் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந் நிலையில் முபாரக் குடும்பத்தினர் ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோகத்தின் மூலம் பலகோடி மதிப்புள்ள சொத்துக்கள் மற்றும் பணம் சம்பாதித்து அதை மறைத்து வைத்திருப்பதாக புகார்கள் கூறப்பட்டன.
அவர்களின் சொத்து மதிப்பு ரூ.162 கோடி என தற்போது மதிப்பிடப்பட்டுள்ளது. அவை வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளன. அவற்றை கையகப்படுத்தும் நடவடிக்கையில் ராணுவ ஆட்சி ஈடுபட்டுள்ளது. முபாரக் குடும்பத்தினரின் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன. அவர்களின் வெளி நாட்டு பயணத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பதுக்கி வைக்கப்பட்டுள்ள பணம் மற்றும் சொத்துக்கள் குறித்து கைது செய்யப்பட்டுள்ள முபாரக்கின் மனைவி சுஷானே முபாரக்கிடம் ராணுவ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது அது பற்றிய சில தகவல்கள் கிடைத்தன. அதை தொடர்ந்து முபாரக் மனைவி சுஷானே பாங்கியில் ரூ.15 கோடியே 25 லட்சம் பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. எனவே அவர் அவற்றை எகிப்து அரசிடம் ஒப்படைத்தார். இருந்தும், அவரிடம் தொடர்ந்து விசாரணை நடக்கிறது. அதற்காக அவருக்கு மேலும் 15 நாள் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது
0 comments:
Post a Comment