Saturday, May 14, 2011

பாகிஸ்தான்:ராணுவ மையங்களில் குண்டுவெடிப்பு-80 பேர் மரண

bomb plast
இஸ்லாமாபாத்:வடமேற்கு பாகிஸ்தானில் துணை ராணுவ படையினரின் பயிற்சி மையத்தில் நடந்த இரட்டைக் குண்டுவெடிப்பில் 80 கொல்லப்பட்டனர். சர்ஸாதா மாவட்டத்திலுள்ள ஷாப்கதரில் உள்ள பயிற்சி மையத்தில் நடந்த தாக்குதலில் 120 பேருக்கு காயமேற்பட்டது. முன்னரே ஸ்தாபிக்கப்பட்ட குண்டுவெடித்ததாக கருதினாலும், வெடிப்பொருட்களுடன் வந்த நபர்கள் தாக்குதலை நடத்தியதாக போலீஸ் உறுதி செய்துள்ளது.
அல்காயிதா தலைவர் உஸாமா பின் லாடின் கொலை செய்யப்பட்டதற்கு பலத்த பதிலடியை அளிப்போம் என முன்னர் பாக்.தாலிபான் எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. பயிற்சி முடித்த ராணுவத்தினர் சொந்த ஊருக்கு செல்வதற்காக பஸ்ஸிற்காக காத்திருந்த வேளையில் இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது.
பாகிஸ்தானின் பழங்குடியினர் பகுதியோடு ஒட்டிய எல்லைப்பகுதிகளில் இந்த ராணுவத்தினர் நிறுத்தப்படுவர். பைக்கில் வெடிப்பொருட்களுடன் வந்த நபர் ராணுவத்தினரை இடித்து தள்ளிவிட்டு உள்ளேபுகுந்த பொழுது முதல் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இதனைத் தொடர்ந்து காயமடைந்தவர்களை பாதுகாப்பு மையத்திற்கு மாற்றும் பொழுது இன்னொரு பைக்கில் வந்த மற்றொரு நபர் வெடித்துச்சிதறினார்.
66 ராணுவத்தினர் மரணமடைந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏராளமான வாகனங்கள் தகர்ந்தன. காயமடைந்த ராணுவத்தினர் பெஷாவர் மருத்துவமனைக்கு கொண்டுபோகப்பட்டனர். காயமடைந்த 40 ராணுவத்தினரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
உஸாமாவின் இரத்தசாட்சியத்திற்கான முதல் பதிலடி இது எனவும், மேலும் பல தாக்குதல்கள் நடக்கும் எனவும் தாலிபானின் செய்தித் தொடர்பாளர் இஹ்ஸானுல்லாஹ் இஹ்ஸான் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
ஆப்கான் எல்லையுடன் ஒட்டிய ஷாப்கதர், போராளிகளின் செல்வாக்கு மிகுந்த முஹம்மந்திலிருந்து தூரத்தில் இல்லை. உஸாமா பின் லாடினின் கொலைத் தொடர்பாக பாராளுமன்றத்தில் ராணுவத்தலைமை தளபதி அறிக்கை வெளியிடவிருக்கும் வேளையில் இத்தாக்குதல் நடந்துள்ளது.

0 comments:

Post a Comment