MAY 23 சென்னை: பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்பதில் தெளிவான நிலை இல்லாததால் மாணவர்கள் குழப்பத்துடன் காத்துள்ளனர்.
திமுக ஆட்சிக்காலத்தின் கடைசியில் பிளஸ்டூ தேர்வு முடிவுகள் வெளியாகின. இந்த நிலையில் தற்போது அதிமுக ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்துள்ளது. இந்த நிலையில் பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் இன்னும் வெளியாகாமல் உள்ளது. விரைவில் அது வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த மார்ச் 28ம் தேதி தொடங்கி ஏப்ரல் 11ம் தேதி வரை பத்தாம் வகுப்புத் தேர்வுகள் நடைபெற்றன. கிட்டத்தட்ட எட்டரை லட்சம் பேர் தேர்வு எழுதியுள்ளனர்.
விடைத்தாள் திருத்தும் பணி முடிவடைந்து விட்ட போதிலும், மதிப்பெண்களை சரி பார்க்கும் பணிகள் இன்னும் முடியாமல் உள்ளன. எனவே தேர்வு முடிவுகளை வெளியிட தேதி குறிப்பிட முடியாத நிலை ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
அனைத்துப் பணிகளும் முடிவடைந்த பின்னர் தேர்வு முடிவுகள் வெளியிடப்படு் தேதி அறிவிக்கப்படும் என கல்வித்துறை அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.
இருப்பினும் இன்னும் சில நாட்களில் தேர்வு முடிவுகள் வெளியாகக் கூடிய வாய்ப்புகள் இருப்பதாக கருதப்படுகிறது

0 comments:
Post a Comment