9 May 2011
பாக்தாத்:ஈராக் நாட்டில் சிறையில் ஞாயிற்றுக்கிழமை நடந்த கலவரத்தில் 16 பேர் கொல்லப்பட்டனர்.ஆறு போலீசாரும் கொல்லப்பட்டவர்களில் அடங்குவர்.சிறையில் போலீசார் மீது அதிகாரம் பிரயோகிக்க முயற்சித்த சிறைக்கைதிகள் அவர்களின் ஆயுதங்களை கைப்பற்ற முயற்சித்தனர்.
உள்துறை அமைச்சகத்தின் வளாகத்தில் அமைந்துள்ள இந்த சிறையில் நாட்டின் மிகப்பெரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.சிறையில் ரோந்துச்சுற்றிக்கொண்டிருந்த சிறைக்காவலரின் துப்பாக்கியை அல்காயிதாவின் மூத்த தலைவர் எனக்கூறப்படும் அபூஹுஸைஃபா அல் பதவி தட்டிப்பறித்து சுட ஆரம்பித்ததும் பிரச்சனைகள் உருவாகின.
இதில் ஏராளமான அதிகாரிகள் கொல்லப்பட்டனர்.இதர சில சிறைக்கைதிகளும் இந்த தாக்குதலில் பங்கேற்றனர்.இதனை தொடர்ந்து பாதுகாப்பு அதிகாரிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் அல்பதவி உள்பட ஒன்பது பேர் கொல்லப்பட்டனர். ஏராளமானோருக்கு காயமேற்பட்டது.
இவர்களை அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிட்சை அளித்தபிறகு ரகசிய இடத்திற்கு அழைத்துச்சென்றனர்
0 comments:
Post a Comment