9 May 2011
புதுடெல்லி:பாப்ரி மஸ்ஜித் நில உரிமையியல் வழக்கில் அலகபாத் உயர்நீதிமன்ற லக்னோ பெஞ்ச் அளித்துள்ள தீர்ப்புக் குறித்து உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு நடுநிலையானதாக இருப்பதாக சுன்னி வக்ப் வாரியத்தின் வழக்கறிஞர் ஸஃபர்யாப் ஜீலானி தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஜீலானி கூறியதாவது:இன்றைய உத்தரவு மிகவும் நடுநிலையானதாக, பொதுவானதாக இருக்கிறது. சர்ச்சைக்குரிய இடத்தில் எந்தவிதமான வழிபாடும் நடக்கக் கூடாது. இந்த வழக்கில் இறுதித் தீர்ப்பு வர நெடுங்காலம் என்று பலரும் கருதுகிறார்கள். ஆனால் அவ்வளவு தாமதம் ஆகாது என்றே நாங்கள் கருதுகிறோம்.
பிரச்சினை குறித்தும், அதன் ஆழம் குறித்தும் நீதிபதிகளுக்கு நன்கு தெரியும் என்பதால் தாமதம் தவிர்க்கப்படும் என்று கருதுகிறோம். உயர்நீதிமன்ற தீர்ப்பு யாருக்குமே லாபகரமானதாக இல்லை. குறிப்பாக சுன்னி வக்பு வாரியத்தின் கோரிக்கைகள், அது சமர்ப்பித்த ஆவணங்கள், ஆதாரங்கள் கருத்தில் கொள்ளப்படவே இல்லை. உயர்நீதிமன்ற தீர்ப்பால் நாங்கள் மிகவும் ஆச்சரியமடைந்தோம், கடும் அதிருப்தியும் அடைந்தோம். தற்போது உச்ச நீதிமன்றமும் அதை நிரூபித்துள்ளது என்றார் அவர்.
0 comments:
Post a Comment