Sunday, May 8, 2011

ஃபலஸ்தீனுக்கான வரி வருவாயினத்தை தடுக்கக்கூடாது-இஸ்ரேலுக்கு ஐ.நா கோரிக்கை


un_logo_israelஐ.நா:ஹமாஸுடன் நல்லிணக்க ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதன் பேரில் பலஸ்தீன் ஆணையத்திற்கான வரி வருவாயினத்தை தடுத்து வைக்க கூடாது என இஸ்ரேலுக்கு ஐ.நா பொது செயலாளர் பான் கீ மூன் கோரிக்கை விடுத்துள்ளார்.
பிராந்தியத்தில் அமைதி நிலைநாட்டுவதற்கு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒப்பந்தத்திற்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் எனவும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் நடந்த தொலைபேசி உரையாடலில் மூன் வலியுறுத்தினார்.
பலஸ்தீன் ஆணையத்திற்கு வரி வருவாயினத்தை ஒப்படைப்பதை இஸ்ரேல் நிறுத்தக்கூடாது.  பலஸ்தீன் ஆணைய அதிபர் மஹ்மூத் அப்பாஸின் தலைமையில் நடந்துவரும் ஐக்கிய முயற்சிகளுக்கு ஐ.நாவின் அனைத்து விதமான ஒத்துழைப்பும் உண்டு.
இஸ்ரேல்-பலஸ்தீன் பிரச்சனைகளை முடிவுக்கு கொண்டு வர இரு நாடுகள் திட்டத்தை உடனடியாக அமுல்படுத்த விரும்புவதாக பான் கீ மூன் தெரிவித்துள்ளார். ஐக்கிய ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கான முயற்சிகள் துவங்கிய வேளையிலேயே பலஸ்தீன் ஆணையத்திற்காக வசூலித்த 10 கோடி டாலரின் கஸ்டம்ஸ் தீர்வை மற்றும் வரிப்பணத்தை இஸ்ரேல் தடுத்து வைத்துள்ளது.

0 comments:

Post a Comment