Monday, May 9, 2011

கொல்கத்தா பள்ளிவாசலில் உசாமாவிற்காக சிறப்பு தொழுகை நடத்தப்பட்டது


shafi imamகொல்கத்தா:உசாமா இறந்ததை அடுத்து அவருக்கு அமைதி வேண்டி கொல்கத்தாவில் உள்ள திப்பு சுல்தான் பள்ளியில் வெள்ளிகிழமை சிறப்புத் தொழுகை நடத்தப்பட்டது. ஷாஹி இமாம் மற்றும் திப்பு சுல்தான் பள்ளி இமாம் மௌலான பரகதி ஆகியோர் தலைமையில் இந்த சிறப்புத் தொழுகை நடைபெற்றது.
உசாமா இந்த முடிவை தான் எதிர் பார்த்தார், அவர் எதிர் பார்த்தது போலவே அவருடைய முடிவு அமைந்து விட்டது என ஷாஹி இமாமின் மீடியா ஆலோசகர் அஜிஸ் முபாரிகி கூறினார். மே 2-ம் தேதி அல் காயிதாவின் தலைவர் உசாமா பின் லாடின் பாகிஸ்தானில் அவரது மறைவிடத்தில் அமெரிக்க படையினர் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டு அவரது உடல் கடலில் வீசப் பட்டதாக அமெரிக்கா கூறுகிறது.
உசாமாவை குறைந்தது இஸ்லாமிய சடங்குகள் செய்தாவது அடக்கம் செய்திருக்க வேண்டும், அதனை செய்யாததால் அவருக்கு அமைதி வேண்டி சிறப்பு தொழுகை நடத்தினோம் என முபாரிகி கூறினார்.

0 comments:

Post a Comment