Thursday, August 2, 2012

குஜராத் முஸ்லிம்கள் இப்பொழுதும் பீதியில் வாழ்கின்றார்கள்! அமெரிக்காவின் அறிக்கை!


குஜராத்தில் முஸ்லிம் சமூகம் நரேந்திர மோடியின் ஆட்சியின் கீழ் தற்பொழுதும் வேட்டையாடப்படுவோம் என்ற பீதியில் வாழ்வதாக அமெரிக்காவின் மத சுதந்திரம் குறித்த அறிக்கை கூறுகிறது.

2002 குஜராத் இனப் படுகொலை வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்களை சட்டத்தின் முன்ன்னால் கொண்டு வருவதிலும் தாமதம் ஏற்படுவது குறித்து அவ்வறிக்கை கவலை தெரிவிக்கிறது.

மத்தியில் ஹிந்துத்துவா தேசியவாதத்தை எதிர்க்கும் காங்கிரஸ் கட்சி தலைமையிலான அரசு அதிகாரத்தில் இருந்த போதிலும் பா.ஜ.க ஆளும் பல்வேறு மாநிலங்களில் ஹிந்துத்துவா கொள்கைகள் ஆதிக்கம் செலுத்தி வருவதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் கண்காணிப்பில் தயாரான இவ்வறிக்கை கூறுகிறது.

வெளிநாடுகளின் மத சுதந்திரம் குறித்த இவ்வறிக்கையில் குஜராத் இனப்படுகொலை அதிகமாக விமர்சிக்கப்பட்டுள்ளது.

குற்றவாளிகளை கைது செய்ய தயங்கும் குஜராத் அரசு, உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சிறப்பு புலனாய்வு குழுவில் தமது செல்வாக்கை பயன்படுத்தி வழக்கு விசாரணைகளை சீர்குலைக்க மோடி அரசு முயற்சிகிறது என குற்றம் சாட்டும் அறிக்கை, பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் அமலில் உள்ள பசுவதை தடைச்சட்டம் மற்றும் மதமாற்ற தடைச் சட்டம் குறித்தும் விமர்சிக்கிறது.

அமெரிக்காவின் வெளிநாட்டுக் கொள்கையில் முக்கிய விஷயமாக மத சுதந்திரத்தை இணைத்திருப்பதாக அறிக்கை வெளியான பிறகு வெளியுறவுத்துறை செயலாளர் ஹிலாரி கிளிண்டன் கூறினார்.

0 comments:

Post a Comment