கெய்ரோ/காஸ்ஸா:எகிப்து-காஸ்ஸா எல்லைப் பகுதியில் நடந்த தாக்குதலின் பின்னணியில் மொஸாத் செயல்பட்டுள்ளதாக இஃவானுல் முஸ்லிமீன் குற்றம் சாட்டியுள்ளது. இத்தாக்குதல் எகிப்தின் புரட்சியை சீர்குலைக்கும் நோக்கத்துடன் நடந்துள்ளதாக இஃவான் கூறியுள்ளது.
எகிப்து-காஸ்ஸா எல்லைப் பகுதியில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில்16 பேர் கொல்லப்பட்டனர். காஸ்ஸாவில் இருந்து ஊடுருவிய ஜிஹாதி குழுதான் இத்தாக்குதலை நடத்தியதாக எகிப்தின் அதிகாரப்பூர்வ செய்தி ஏஜன்சியான மெனா கூறியது. ஆனால், இதனை மறுத்துள்ள காஸ்ஸா பிரதமர் இஸ்மாயீல் ஹானிய்யா, இத்தாக்குதலின் பின்னணியில் இஸ்ரேல் செயல்பட்டுள்ளதாக குற்றம் சாட்டினார்.
மேலும் அவர் கூறியது: காஸ்ஸா மீதான தடையை முடிவுக்கு கொண்டுவருவதற்கான எகிப்தின் முயற்சிகளை எல்லையில் பிரச்சனையை உருவாக்கி சீர்குலைக்கும் சியோனிச தந்திரம்தான் ராணுவத்தினர் மீதான தாக்குதலாகும்.
எகிப்தின் பாதுகாப்பிற்கு ஏற்படும் தாக்குதல் ஃபலஸ்தீன் மீதான தாக்குதலுமாகும்.
ஹமாஸின் அவசர கூட்டத்திற்கு பிறகு வெளியிட்டுள்ள அறிக்கையில் ஹானிய்யா மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment