Wednesday, February 13, 2013

ஆசிட் வீச்சுக்குள்ளான வினோதினி மரணம்: குற்றவாளியை கடுமையாக தண்டிக்க பாப்புலர் ஃப்ரண்ட் கோரிக்கை!

வினோதினி   
    சென்னை: காரைக்காலைச் சார்ந்த பெண் பொறியாளர் வினோதினியை வாலிபர் ஒருவர் தனது ஒருதலை காதலை ஏற்காததால் ஆசிட் வீசினார்.இதனால் கடுமையாக காயமடைந்து வேதனையால் துடித்த வினோதினி 3 மாத காலமாக மருத்துவமனையில் சிகிட்சை பெற்றுவந்தார். இந்நிலையில் அவர் சிகிட்சை பலனின்றி நேற்று மரணமடைந்தார். இச்சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை
ஏற்படுத்தியுள்ளது.

     இந்த கொடிய சம்பவம் தொடர்பாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

     வினோதினியின் மரணத்திற்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறது. அதேவேளையில் அப்பெண்ணின் மரணத்திற்கு காரணமானவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். மேலும் அப்பெண்ணின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீட்டுத் தொகை வழங்கவேண்டும் என்றும் பாப்புலர் ஃப்ரண்ட் கேட்டுக்கொள்கிறது.

    பெண்களுக்கு எதிரான நடவடிக்கைகள் அதிகரித்து வரும் வேளையில் அதனை தடுப்பதற்கு முறையான நடவடிக்கைகளை அரசாங்கம் உடனடியாக எடுக்கவேண்டும். பெண்களுக்கு பாதுகாப்பும், கண்ணியமும் நிறைந்த ஒரு சூழலை அமைத்துக் கொடுப்பதற்கு அரசாங்கம் துரித நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பாப்புலர் ஃப்ரண்ட் கோரிக்கை விடுத்துள்ளது

0 comments:

Post a Comment