27 Feb 2013
லண்டன்:3 வயதான ரோஹித் ஸமானிக்கும், குடும்பத்தினருக்கும் மோதல்கள் நிறைந்த ஆப்கானில் இருந்து தப்பிச் சென்றபொழுது குண்டுச் சத்தமும், துப்பாக்கியின் சீறலும் இல்லாத ஒரு அமைதியான இடம் தேவைப்பட்டது. ஆனால், சிறுவன் ஸமானி, 16 வயது ஆகும் வேளையில் ஒரு புலன்பெயர்ந்தவருக்கு கனவு கூட காணமுடியாத பதவியை எட்டிப் பிடித்துள்ளார்.
குடும்பத்தினர் பிரிட்டனில் புதியதொரு வாழ்க்கைக்கு துவக்கம் குறித்தபொழுது, ரோஹித் ஸமானி பிரிட்டனில் புகழ்பெற்ற ஈட்டன்(eton) கல்லூரியில் முழு ஸ்காலர்ஷிப்பை பெறும் தகுதியுடைய இளம் விஞ்ஞானியாக மாறியுள்ளார்.
ஜலாலாபாத் நகரத்தில் ரோஹித்தின் வாழ்க்கைப் பயணம் துவங்கியது. தாலிபான் ஆட்சிக்கு வந்த பின்னால் உள்ள மோதல் சூழல் நிறைந்த காலம். தாழ்வாக பறக்கும் ஆக்கிரமிப்பு அமெரிக்காவின் போர் விமானங்கள், எந்த நிமிடமும், எங்கிருந்தும் சீறிப்பாயும் வெடிக்குண்டுகள். படுக்கும் கட்டிலின் அடியில் கூட வெடிக்க காத்திருக்கும் குண்டுகள். நோய் பாதித்த தாயார், ஏதோ தேவைக்காக கட்டிலில் இருந்து வெளியே வந்த உடனே குண்டுவெடித்தது. மயிரிழையில் தனது தாயார் அப்பொழுது உயிர் தப்பியதாக ரோஹித் ஸமானி கூறுகிறார்.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து சிவில் எஞ்சீனியரான தந்தை, மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் நாட்டை விட்டு வெளியேற தீர்மானித்தார். ரப்பர் படகில் ரஷ்யாவில் நதிகளை தாண்டிய பயணம். புகலிடம் தேடி இக்குடும்பம் 3500 கடல் மைல்கள் பயணித்தது. எல்லோரும் மூழ்கிவிடுவோம் என்று ஒரு கட்டத்தில் பயந்தனர். கரையை அடைந்த பிறகு ஒரு வேனில் பயணத்தை தொடரும்போது வேன் ப்ரேக் டவுனாகியது. பின்னர் ஓநாய்கள் உள்ளிட்ட கொடூர மிருகங்கள் காடுகளில் நடைபயணம். இறுதியாக பிரிட்டனின் ஹல்லை வந்தடைந்தனர்.
அப்பொழுது ஆங்கில மொழி ரோஹித் ஸமானியின் குடும்பத்தினருக்கு அந்நியமொழியாக இருந்தது. ஆனால், ரோஹித் ஸமானியின் அர்ப்பண உணர்வு காரியங்களை எளிதாக்கியது. படிப்பில்ஆர்வம் காட்டிய ஸமானி, ரக்பியிலும், அத்லடிக்ஸிலும் சிறந்து விளங்கினார். நூற்றுக்கணக்கான மாணவர்களுடன் போட்டியிட்டு ரோஹித் ஸமானி ஈட்டன் கல்லூரியின் நான்கு தின இண்டர்வியூவில் வெற்றிப் பெற்றார்.
வேன் ஓட்டுநராக பணிபுரியும் ஸமானியின் தந்தைக்கு ஈட்டன் கல்லூரியின் கட்டணத்தை தாங்க முடியாது. ஆனால், படிப்பில் திறமையை வெளிப்படுத்திய காரணத்தால் கல்வி கட்டணத்தில் 30 ஆயிரம் பவுண்டும், ஸ்கூல் யூனிஃபார்ம் உள்ளிட்ட இதர செலவுகளுக்கு 1500 பவுண்டும் ஸ்காலர்ஷிப்பாக கிடைக்கும். ஒரு சர்ஜனாக மாறவேண்டும் என்ற நம்பிக்கையில் இருக்கும் ரோஹித் ஸமானியின் கனவுகளுக்கு இப்பொழுது எல்லைகள் இல்லை.
0 comments:
Post a Comment