
17 Feb 2013 டெல்லி:இன்று இந்தியா முழுவதும்(பிப்ரவரி 17) பாப்புலர் ஃப்ரண்ட் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
2007-ஆம் ஆண்டு இதே தினத்தில் பெங்களூரில் நடந்த இந்தியா சக்திப்படுத்துதல்(Empower India) மாநாட்டில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தேசிய இயக்கமாக இந்திய மக்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.
தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் செயல்பட்டு வந்த இயக்கங்கள் ஒன்றிணைந்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா என்ற தேசிய இயக்கமாக உருவெடுத்தது. இந்தியா முழுவதும் உள்ள பாப்புலர் ஃப்ரண்டின் உறுப்பினர்கள் மற்றும் நலன் நாடுவோர் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா துவக்கப்பட்ட நாளை பாப்புல ஃப்ரண்ட் தினமாக பல்வேறு நிகழ்ச்சிகள் வாயிலாக பிப்ரவரி 17, 2013 அன்று கொண்டாடுவார்கள். இந்நடைமுறை வரும் ஆண்டுகளில் இதே தினத்தில் கடைப்பிடிக்கப்படும்.
தமிழகத்தில் காஞ்சிபுரம் மாவட்டம் தாம்பரம், திருச்சி, கன்னியாகுமரி மாவட்டத்தின் நாகர்கோவில் ஆகிய நகரங்களில் ‘யூனிட்டி மார்ச்’ மாபெரும் பேரணியும், பொதுக்கூட்டமும் நடைபெறுகிறது. மேலும் இன்று இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் கொடி ஏற்று நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன.
இன்றைய தினம் “Together for People’s Rights” (மக்கள் உரிமைகளுக்காக ஒன்றிணைவோம்) என்ற முழக்கம் முன்னிலைப்படுத்தப்படும்.
0 comments:
Post a Comment