Sunday, February 17, 2013

அறிவுஜீவிகளை கவர அமெரிக்கா திட்டம்

images (1)    அறிவியல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பலதுறைகளில் சிறந்துவிளங்குவோருக்காக ஒரு லட்சத்து 25ஆயிரம் விசாக்களை உருவாக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.பல துறைகளில் சிறந்துவிளங்கும் தொழில் முனைவோருக்கு 75 ஆயிரம் விசாக்களையும், அறிவியல் தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணித பட்டதாரிகளுக்காக 50ஆயிரம் விசாக்களையும் உருவாக்க இந்த மசோதா வழிவகை செய்கிறது.
இதுதொடர்பாக அந்நாட்டு நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் சட்ட மசோதா கொண்டுவந்துள்ளனர்.
     இந்தியா, சீனா உள்ளிட்ட உலகம் முழுவதிலுமுள்ள வல்லுநர்களை ஈர்ப்பதற்காக அமெரிக்க அரசு கொண்டுவரும் இந்த சட்ட மசோதாவுக்கு மைக்ரோசாப்ட், கூகிள் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன.
    சாதனை படைத்த தொழில்முனைவோர்கள் அமெரிக்காவுக்கு வந்தால் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட வாய்ப்பிருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

0 comments:

Post a Comment