19 Feb 2013
குவட்டா:பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாண தலைநகரான குவட்டாவில் நடந்த குண்டுவெடிப்பில் பலியானவர்களின் உடல்களை அடக்கம் செய்யமாட்டோம் என்று ஷியா முஸ்லிம்கள் அறிவித்துள்ளனர்.தாக்குதல் நடத்திய வன்முறையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வரை இறந்த உடல்களை அடக்கம் செய்யமாட்டோம் என்றும், பாதுகாப்பு படையினரிடம் இருந்து போதிய பாதுகாப்பு கிடைக்கவில்லை எனவும் ஷியா தலைவர் கய்யூம் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
குவட்டாவின் முக்கிய சாலையில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் ஞாயிற்றுக்கிழமை மாலை முதல் அமர்வு போராட்டம் நடத்தி வருகின்றனர். சிறுபான்மையினரான தங்களின் பாதுகாப்பை உறுதிச் செய்யவேண்டும் என்பது போராட்டக்காரர்களின் கோரிக்கை ஆகும்.
தாக்குதலுக்கு பயந்து பலர் புலன் பெயர்ந்துள்ளனர். ஈரான்,ஆப்கான் ஆகிய நாடுகளின் எல்லையில் அமைந்துள்ளது பலுசிஸ்தான் மாகாணம். அதேவேளையில் வன்முறையாளர்களை எதிர்கொள்ள போலீஸ் மற்றும் துணை ராணுவப் படையினருக்கு அளவுக்கதிகமான அதிகாரம் வழங்கியதாக ஆளுநர் சுல்ஃபிகார் மக்ஸி தெரிவித்துள்ளார். வன்முறையாளர்களை எதிர்கொள்வதில் பாதுகாப்பு படையினர் தோல்வியை தழுவியதாக அவர் ஒப்புக்கொண்டார். அதேவேளையில் குண்டுவெடிப்பில் பலியானவர்களின் எண்ணிக்கை 84ஆக உயர்ந்துள்ளது. 170க்கும் மேற்பட்டோருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. கராச்சியில் போராட்டம் தொடருகிறது.
0 comments:
Post a Comment