Tuesday, February 19, 2013

பாப்புலர் ஃப்ரண்ட் தினத்தில் நாகர்கோவிலில் பிரமாண்டமாக கூடிய மக்கள் வெள்ளம்




     பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா துவங்கப்பட்ட தினமான பிப்ரவரி 17ஆம் தேதியை கொண்டாடும் விதமாக இந்தியா முழுவதும் “மக்களின் உரிமைக்காக ஒன்றிணைவோம்” என்ற முழக்கத்தோடு "யூனிட்டி மார்ச்" என்ற பெயரில் மாபெரும் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்த பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய செயற்குழுவில் தீர்மானிக்கப்பட்டது .அதன் அடிப்படையில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் " யூனிட்டி மார்ச் " என்ற பெயரில் மாபெரும் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது . பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் A.முஹம்மது யூசுப் துவக்கவுரை நிகழ்த்தி கொடியசைத்து பேரணியை துவக்கி வைத்தார்.


     பேரணியானது சரியாக 3 மணியளவில் நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் துவங்கி ,பெண்கள் கிறிஸ்தவக் கல்லூரி, வடசேரி பேருந்து நிலையம் வழியாக சென்று அண்ணா விளையாட்டு அரங்கம் முன்பு நிறைவு பெற்றது .தொடர்ச்சியாக பேரணியின் முடிவில் மாபெரும் பொதுக் கூட்டம் நடைபெற்றது.இப்பொதுக் கூட்டத்திற்கு மாநில பொருளாளர் S.பைசல் அஹமது தலைமை தாங்கினார்.மாவட்ட தலைவர் J.ரூஹுல் ஹக் வரவேற்புரை ஆற்றினார் .

      SDPI கட்சியின் மாநில பொதுச்செயலாளர் நெல்லை முபாரக் , மாநில செயலாளர் நாஞ்சில் செய்யது அலி , குமரி மாவட்டத் தலைவர் S.M. ஜாஹிர் ஹுசைன் , குமரி மாவட்ட பொதுச் செயலாளர் A .சுல்ஃபிகர் அலி , குமரி மாவட்ட முஸ்லீம் ஜமாத் கூட்டமைப்பு தலைவர் G.M .ஷா , கோட்டார் இளங்கடை முஸ்லீம் சமுதாய டிரஸ்டின் தலைவர் F. அப்துல் அஜீஸ், மாலிக்தீனார் பைத்துல்மால் முஸ்லீம் ஜமாத்தின் தலைவர் S . அப்துல் கபூர் , இஸ்லாமிய கலாச்சாரக் கழகத்தின் இமாம் M.A .சவுகத் அலி உஸ்மானி , SDTU குமரி மாவட்ட தலைவர் H. நசீர் , மாதவ லாயம் முஸ்லீம் ஜமாத் தலைவர் K.M.ஷா , குளச்சல் முஸ்லீம் முஹல்லம் தலைவர் V.M.கான், வடக்குச் சூரங்குடி முஸ்லிம் ஜமாத் தலைவர் K.M.ஃபாரூக் , KIMS குமரி மாவட்ட செயலாளர் M.ஜமாலுதீன் மற்றும் கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் குமரி மாவட்ட தலைவர் S.A.முஹம்மது முகைதீன் B.A,L.L.B ஆகியோர் முன்னிலை வகித்தனர் .

     பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் A. முஹம்மது யூசுப் மற்றும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில செயற்குழு உறுப்பினர் A .அஹமது ஃபக்ருதீன் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள் .

     நிகழ்ச்சியின் தீர்மானத்தை தூத்துக்குடி மாவட்ட தலைவர் அப்துல் அஜீஸ் வாசித்தார் . நிறைவாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் நெல்லை மாவட்டத் தலைவர் அஹமது நவவி நன்றியுரையாற்றினார் . குமரிமாவட்ட பாப்புலர் ஃப்ரண்ட் செயலாளர் N.அபுதாஹிர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார் .அத்திக் கடை ,ஈத்தாமொழி ,பெருவிளை ,திட்டுவிளை,,கோட்டையடி ஆகிய பகுதிகளை சார்ந்த ஜமாஅத் நிர்வாகிகள் உட்பட பல்லாயிரக்கணக்கான மக்கள் பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டனர் .








ஒற்றுமை கீதம் பாடும் போது

மாநில பொருளாளர் S.பைசல் அஹமது தலைமையுரையாற்றிய போது

மாவட்ட தலைவர் J.ரூஹுல் ஹக் வரவேற்புரையாற்றிய போது

தேசிய செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் A. முஹம்மது யூசுப் சிறப்புரையாற்றிய போது

மாநில செயற்குழு உறுப்பினர் A.அஹமது ஃபக்ருதீன் சிறப்புரையாற்றிய போது


தூத்துக்குடி மாவட்ட தலைவர் அப்துல் அஜீஸ் தீர்மானம் வாசித்த போது

நெல்லை மாவட்ட தலைவர் அஹமது நவவி நன்றியுரையாற்றிய போது


வழக்கறிஞர் A.முஹம்மது யூசுப் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த போது


கூட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் வெள்ளம்

தினகரனில் வந்த செய்தி 

தினத்தந்தியில் வந்த செய்தி 

தினமலரில் வந்த செய்தி 


0 comments:

Post a Comment