பிப் 20/2013: உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து அமெரிக்காவுக்கு விசிடிங், டூரிஸ்ட், ஸ்டூடன்ஸ் விசா மற்றும் மெக்சிகோ பார்டர் கிராசிங் என்று பல்வேறு வழிகளில் நுழையும் வெளிநாட்டினர் அங்கே ஓவர் ஸ்டே ஆகிவிடுகிறார்கள். இப்படி சட்டவிரோதமாகக் தங்கி இருப்பவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியை தாண்டும். இந்நிலையில் சட்ட விரோதமாக 8 ஆண்டுகளுக்கு மேல் தங்கி இருப்பவர்களுக்கு முறையான குடியுரிமை வழங்க, அமெரிக்க அரசு முன்வந்து உள்ளது.
இதற்கான புதிய சட்டம் இயற்றப்பட உள்ளது. இது குறித்த ஆவணங்கள் பல்வேறு அரசு நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்டு உள்ளது. அதன்படி முறையான அமெரிக்க விசா பெற விண்ணப்பிப்பவர்கள், தங்கள் குற்றப்பின்னணி, மற்றும் கைரேகை பதிவு உள்ளிட்ட விவரங்களை சமர்ப்பிப்பதுடன், கட்டண தொகையும் செலுத்த வேண்டும். இவர்களின் விசா அங்கீகரிக்கப்பட்டவுடன், அமெரிக்காவில் சட்டபூர்வமாக வசிக்கவும், பணிபுரியவும் அனுமதி வழங்கப்படும்.
மேலும், தங்கள் சொந்த நாடுகளுக்கு குறுகிய கால பயணம் சென்று வரவும் அவர்கள் அனுமதிக்கப்படுவர். அதன்பின், அவர்களுக்கு வழங்கப்படும் முறையான வசிப்பிட அடையாள அட்டையை வைத்து, எட்டு ஆண்டுகளில், "க்ரீன் கார்டு'க்கு அவர்கள் விண்ணப்பிக்கலாம். ஆனால், அதற்கு ஆங்கிலமும், அமெரிக்க வரலாறும் கற்பதுடன், அரசுக்கு போதுமான அளவு வரியும் செலுத்தி இருக்க வேண்டும். "க்ரீன் கார்டு' பெற்றவர்கள், அமெரிக்கக் குடியுரிமை பெற விண்ணப்பிக்கலாம். இந்த சட்டத்திற்கு அமெரிக்காவின் எதிர்க்கட்சியான குடியரசு கட்சியும் ஆதரவு தெரிவித்து உள்ளது.
0 comments:
Post a Comment