Wednesday, February 20, 2013

சூரிய நமஸ்காரம்:பீகார் சட்டப்பேரவையில் அமளி!

சூரிய நமஸ்காரம்-பீகார் சட்டப்பேரவையில் அமளி!

     பாட்னா:பீகார் மாநிலத்தில் உள்ள பள்ளிக்கூடங்களில் சூரிய நமஸ்காரம் தொடர்பான பிரச்சனை சட்டப்பேரவையில் அமளி, துமளியை உருவாக்கியது.சூரிய நமஸ்காரத்தை எதிர்த்த ராஷ்ட்ரீய ஜனதா தள உறுப்பினர்களை பாகிஸ்தான் ஏஜண்டுகள் என்று ஆட்சேபித்த இரண்டு பா.ஜ.க அமைச்சர்களை ராஜினாமாச் செய்யக்கோரி சட்டப்பேரவையில் அமளி நடந்தது.

     அவையில் ஆளுநர் தேவானந்த் கோன்வார் உரை நிகழ்த்துகையில் பா.ஜ.க அமைச்சர்கள் ராஷ்ட்ரீய ஜனதா தள உறுப்பினர்களை பாகிஸ்தான் ஏஜண்டுகள் என்று கூறி அவமதித்தனர். இதில் கோபமடைந்த ராஷ்ட்ரீய ஜனதா தள உறுப்பினர்கள் அவையின் நடுப்பகுதிக்கு வந்தனர்.பா.ஜ.க அமைச்சர்களின் ஆட்சேபனைக்கு எதிராக முதல்வர் நிதீஷ்குமார் கூட பதில் அளிக்கவில்லை என்று எதிர்கட்சி தலைவர் அப்துல் பாரி சித்தீகி கூறினார்.

    சட்டப்பேரவை விவகாரத்துறை அமைச்சர் விஜேந்திர யாதவ், எதிர்கட்சி தலைவர் ஆகியோரின் முன்னிலையில் அவை
நடவடிக்கைகளை பரிசோதித்து சரியான நடவடிக்கையை எடுப்பதாக அவைத் தலைவர் உதய் நாராயணன் உறுதி அளித்ததை தொடர்ந்ந்து அவை அமைதியானது.

     பள்ளிக்கூடங்களில் சூரிய நமஸ்காரம் ஆர்.எஸ்.எஸ்ஸின் செயல் திட்டம் என்று எம்.எல்.ஏக்கள் கூறியதைத் தொடர்ந்து பா.ஜ.க அமைச்சர்கள் அவர்களை பாகிஸ்தான் ஏஜண்ட் எனக்கூறி ஆட்சேபித்தனர்.

0 comments:

Post a Comment