Tuesday, February 19, 2013

எஸ்.ஏ.ஆர்.கிலானிக்கு எதிரான டெல்லி ஸ்பெஷல் பிரிவு போலீசின் அத்துமீறல்: சி.ஆர்.பி.பி கண்டனம்!

sargilani   
     புதுடெல்லி:கமிட்டி ஃபார் தி ரிலீஸ் ஆஃப் பொலிட்டிக்கல் ப்ரிஸனர்ஸ்(சி.ஆர்.பி.பி) தலைவர் எஸ்.ஏ.ஆர்.கிலானிக்கு எதிராக டெல்லி ஸ்பெஷல் போலீசின் அத்துமீறல் நடவடிக்கை கண்டிக்கத்தக்கது என்று அவ்வமைப்பு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.

    நேற்று காலை ஸாக்கிர் நகரில் அவருடைய வீட்டிற்கு வந்த போலீஸார், அவருடைய மொபைல் ஃபோனை பலவந்தமாக பறிக்க முயன்றனர். மொபைல் ஃபோனை பறிக்க ஏதேனும் உத்தரவு உள்ளதா? என்று கேள்வி எழுப்பியபோது, மேலிட உத்தரவு என்று கூறியுள்ளார்கள். அப்ஸல் குருவை தூக்கிலிட்ட நடவடிக்கை மனித உரிமை மீறல் என்று
கூறியதற்காக அவரை 2 நாட்கள் சிறையில் அடைத்தனர்.

    எஸ்.ஏ.ஆர் கிலானி என்ற இந்தியக் குடிமகனுக்கு தனது கருத்தை தெரிவிக்கும் சுதந்திரத்தைக் கூட மறுக்கின்றனர்.இது ஸ்பெஷல் பிரிவின் பாசிச நடவடிக்கை ஆகும். இத்தகைய நடவடிக்கைகள் எல்லையில் உள்ள மக்களின் எதிர்ப்பை வலுப்படுத்தவே உதவும் என்று சி.ஆர்.பி.பியின் பொதுச் செயலாளர் அமித் பட்டாச்சார்யா, துணைத்தலைவர்களான சுஜாதோ பத்ரா, அஜித் புயான், என்.வேணு, கலீம் கோயா, எம்.என்.ராவுண்ணி, பி.ஏ.செபாஸ்டியன், செயலாளர் ரோணா வில்ஸன் ஆகியோர் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தனர்.

0 comments:

Post a Comment