Showing posts with label jaffanawin news.. Show all posts
Showing posts with label jaffanawin news.. Show all posts

Monday, June 6, 2011

குழந்தை பிறந்தபின்னர் மொட்டை போடுவது ஏன்?


குழந்தை பிறந்து 30 அல்லது 45 நாட்களில் மொட்டை போடுவது வழக்கம். இது யாவரும் கண்ட உண்மை. ஆனால் ஏன் அப்படி மொட்டை போடுவது என்பது யாருக்காவது உண்மையான விளக்கம் தெரியுமா? அது சும்மா நேர்த்திக்கடனுக்காக என்று நினைத்துக்கொண்டிருப்பவர்கள் தங்களது எண்ணத்தை மாற்றிக்கொள்ளுங்கள்.

அதையும் தாண்டி ஒரு அறிவியல் ரீதியான விளக்கம் இருக்கிறது இதற்கு. அதாவது நாம் அனைவரும் 10 மாதங்கள் தாயின் வயிற்றில் கருவறையில் இருக்கிறோம். அந்த பத்து மாதமும் வயிற்றுக்குள் எம்மை சுற்றி என்ன தேனும் பாலுமா இருக்க போகிறது? இல்லை இரத்தம் சதை மலம் சிறுநீர் என அனைத்தும் இருக்கும்.அதற்குள்ளேதான் நாம் பத்து மாதங்கள் இருக்கிறோம்.

இவையெல்லாம் எமது உடம்பில் எவளவு ஊறியிருக்கும். வெறும் ஐந்து நிமிடம் கடல்நீரில் விரலை வைத்து துடைத்து விட்டு சுவைத்து பாருங்கள் எமது விரல் அப்போதும் உப்பாகத்தான் இருக்கும். 5நிமிடம் உப்பு நீரில் வைத்த விரலே இப்படியென்றால் பத்து மாதம் மலம் சிறுநீர் இரத்தம் சதை இவற்றுக்குள் கிடந்த எமது உடலில் அவை எவ்வளவு ஊறியிருக்கும்.

இதெல்லாம் எப்படி வெளியேறும்?? எமது உடலில் உள்ள கழிவுகள் எல்லாம் மயிர்கால்கள் வழியாக வெளியேறும். தலையில் உள்ள கழிவுகள் வெளியேற வழிகள் குறைவு. இதனால் சிரசில் அந்தக் கழிவுகள் தேங்கி நிற்கும் சந்தர்பங்கள் ஏற்படுகிறது. இதனால் பிற்காலத்தில் பாரிய நோய்கள் ஏற்பட வாய்ப்புக்கள் உண்டு.

எனவேதான் சிரசில் மொட்டை போடுவது நேர்த்திக்கடன் என்ற பெயரில் முன்னோர்களால் பரப்பப்பட்டது. இதைப்போல் மீண்டும் ஒரு தடவை குழந்தைகளுக்கு மொட்டை போடுவார்கள். அது ஏற்கனவே மொட்டை போடும் போது ஏதாவது கிருமிகள் தவறியிருப்பின் இரண்டாவது மொட்டையில் இல்லாமல் போய்விடும் என்பதற்காகவே.

தற்போது புரிகிறதா பிறந்த குழந்தைக்கு தர்காவில்  மொட்டை போடுவது ஏன் என்பது. இது தொடர்பாக அறிவியல் ரீதியாக கூறினால் மக்கள் பின்பற்றமாட்டார்கள் என்பதற்காகத்தான் ஆன்மீகரீதியாக கூறி மக்களை பின்பற்ற வைத்துள்ளனர் முன்னோர்கள்.

ஆனால் அதற்கு ஆன்மிக ரீதியிலான வேறு ஒரு விளக்கத்தினையும் குறிப்பிட்டுள்ளனர். எது எப்படியே ஆன்மிகத்தில் கூறப்பட்ட பல்வேறு காரியங்களுக்கு அறிவியல் ரீதியிலான விளக்கங்கள் இருக்கின்றது என்பதே உண்மை.

அமெரிக்காவின் உயரமான கட்டிடத்தில் இருந்து தலை கீழாகத் தொங்கி சாதனை படைத்த நபர்!


இது தான் அமெரிக்காவின் மிக உயரமான கட்டிடம்.110 மாடிகளைக் கொண்டது.1974ல் நிர்மாணிக்கப்பட்ட இந்தக் கட்டிடம் முன்னர் சியர்ஸ் கோபுரம் என்றும் இப்போது வில்ஸ் கோபுரம் என்றும் அழைக்கப்படுகின்றது. இதுதான் உலகின் ஐந்தாவது உயரமான கட்டிடமாகும்.

இங்கு செல்பவர்கள் 103வது மாடியிலிருந்து கட்டிடத்தின் வெளிப் பகுதியில் இருந்து காட்சிகளைப் பார்ப்பதற்காக கண்ணாடிக் கூடுகளும் அமைக்கப்பட்டுள்ளமை ஒரு சிறப்பம்சமாகும்.


இந்தக் கண்ணாடிக் கூண்டுக்குள் இருந்து சுமார் ஐம்பது மைல் தூர பரப்பளவை மிகத் தெளிவாக எந்தத் தங்குதடையும் இன்றி காணலாம். காரணம் பார்வையை மறைக்கும் அளவுக்கு சுற்றுமுற்றிலும் உயரமான கட்டிடங்கள் எதுவுமே கிடையாது.


இங்கு முற்றிலும் எதிர்ப்பாராத விதத்தில் ஒருவர் ஒரு வித்தையைச் செய்து காட்டியபோது எடுக்கப்பட்டது தான் இந்தப் படம். ஒரு கண்ணாடிக் கூண்டுக்குள் இருந்து கேபிள் ஒன்றின் உதவியோடு வெளிப்பகுதி ஊடாக இன்னொரு கண்ணாடிக் கூண்டை அவர் தொட்டார்.


அதுவும் தலை கீழாகத் தொங்கிக் கொண்டு இந்த நபர் யார் என்பது அடையாளம் காணப்படவில்லை. ஆனால் அவரின் செயல் எல்லோரையும் மெய் சிலிர்க்க வைத்துவிட்டது. சுமார் 1353 அடி உயரத்தில் அவர் அந்தரத்தில் தலை கீழாகத் தொங்கினார்.

Monday, May 2, 2011

புற்றுநோய்க்கு மருந்தாகும் திராட்சை


ஊட்டச்சத்து நிறைந்த பழங்களுள் ஒன்றான திராட்சையில் வைட்டமின்கள் பி1, பி2, பி6, பி12 மற்றும் வைட்டமின் சி சத்துக்கள் உள்ளன. இவைத் தவிர பாஸ்பரஸ், இரும்புச்சத்தும் அதிக அளவில் காணப்படுகின்றன.

இப்பழத்தை சாப்பிட்டால் பித்தம் தணியும், உடல் வறட்சியை நீக்கும். இரத்தத்தை சுத்தப்படுத்தி புதிய ரத்தத்தை ஊறவைக்கும் ஆற்றல் இதற்கு உண்டு. நரம்புகளுக்கு வலுவூட்டுகிறது. அதனால் மூளையும், இதயமும் வலிமை பெறும்.

கல்லீரலின் பலவீனத்தால் உணவு செரிமானமாகாத தொல்லையை நீக்கும். சிறுகுழந்தைகளுக்கு பல்முளைக்கும் காலங்களில் மலச்சிக்கல் உண்டாகும். ஒரு சிலகுழந்தைகளுக்கு வலிப்பு நோயும், உண்டாகும்.

இதற்கு திராட்சைச் சாறு அருமருந்தாகிறது. ஜலதோஷத்தினால் ஏற்படும் நீர்வடிதல், இருமல், தும்மல் போன்றவற்றை திராட்சை பலச்சாறு குணப்படுத்துகிறது. மார்புச்சளியை போக்குகிறது. நுரையீரலை பாதுகாக்கும் ஆற்றல் இதற்கு உண்டு.

ரத்த சோகைக்கும் காமாலை நோய்க்கும் கூட இது சிறந்த மருந்தாகிறது. குடல் மற்றும் உடல்புண்ணையும் ஆற்றும் தன்மை கொண்டது. களைப்பைப் போக்கி ஆழ்ந்த உறக்கத்தைத் தரும். அஜீரணம், பசியின்மை, வயிறு உப்புசம் போன்றவற்றிர்க்கு திராட்சை சிறந்த மருந்து.


Sunday, May 1, 2011

தமிழக செக்ஸ் போலீஸ் அதிர வைக்கும் பாலியல் வன்புணர்வுகள்! கதறும் பெண் காவலர்கள்


ஒரு காலத்தில் லண்டனின் ஸ்கொட்லான்ட் யார்ட் போலீஸுக்கு நிகராக பேசப்பட்ட தமிழ்நாடு பொலிஸ் தற்போது செக்ஸ் பொலிஸாக மாறிக் கொண்டிருக்கிறது...

போலீஸ்  நிலையங்களில் மேலதிகாரிகளாலும் சக ஆண் பொலிஸ்காரர்களினாலும் இழைக்கப்படும் செக்ஸ் தொல்லை தாங்க முடியாமல் துணிச்சலுடன் நீதிமன்றம் வரை வந்துவிட்டார் தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டத்தின் நகரப் பகுதி பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த பெண் பொலிஸான வள்ளி...

தமிழக காவல் துறையில் பெண்கள் எவ்வளவு கீழ்மைப் படுத்தப்பட்டுள்ளார்கள் என்பதை பெண் காவலர் வள்ளி சொல்லும் அதிர்ச்சியான விடயங்கள் அப்படியே உங்களுக்காக,


முன்னாடி எல்லாம் பொலிஸ் ஆடையை அணிந்ததும் எவ்வளவு பெருமையாக இருந்தது.. ஆனால் இப்போ ஏன்டா இந்த வேலைக்கு வந்தேன் என்று தினமும் மனதுக்குள் அழுகிறேன்...

அதிகாரிகளின் காம லீலைகளுக்கு நான் உடன்படாததால் வேலை நேரத்தைக் கூட்டியே முறித்து எடுத்து விடுவார்கள்.. போன முறை எனக்கு பீரியட்ஸ் ரைம்.. இருந்தும் ஆறு மணி நேரம் தொடர்ந்து என்னை நிற்க வைத்தார்கள்.. எவ்வளவு நரக வேதனை தெரியுமா..

அது போதாதென்று மறுநாள் காலை 2 நிமிடங்கள் லேட்டாக வந்ததற்கு மைதானத்தில் பத்து ரவுண்டு ஓட விட்டு தண்டனை கொடுத்தாங்க.. என்னோடு வேலை செய்யும் அக்கா ஒருவரின் கணவர் விபத்தில் சிக்கி இறந்து விட்டார். அந்த அக்கா மிகவும் கஷ்டமான சூழ்நிலையில் குடும்பத்தை ஒட்டிக் கொண்டு இருந்த நேரம் ஒரு நாள் அவங்களுக்கு காய்ச்சல் அதால லீவு கேட்டாங்க..

அப்பொழுது உடம்பு சூடா இருக்குதான்னு நான் செக் பன்னுகிறேன் என்று சொன்ன இன்ஸ்பெக்டர்.. அவங்க மேல கண்ட இடத்தில கையை வைத்து துணை இல்லாமல் இருந்தா உடம்பு சூடாத் தான் இருக்கும்.. நீ மட்டும் சரின்னு சொல்லு சூட்டைத் தணிச்சிரலாம் என்று ரொம்ப கொச்சையாகப் பேசினார். அந்த அக்கா லீவே வேண்டாம் என்று தப்பி ஓடி வந்து விட்டாங்க..

ஒரு ஊருக்கு புதுசாக இன்ஸ்பெக்டர் வருகிறார் என்றால் அவரோடு இரவு 2 பெண் பொலிஸ் ஆவது தங்க வேண்டும். ஒருவர் உடல் தேவைக்கு மற்றையவர் உணவுத் தேவைக்கு அதாவது சமைத்துப் பரிமாற... வரும் இன்ஸ்பெக்டர் 50 வயதுகளைக் கடந்தாலும் அவர்கள் அழைப்பது 25, 30 வயதுக்கு உட்பட்ட வாளிப்பான பெண் காவலர்களைத் தான்... இந்த உபசரிப்புக்கள் தமிழ்நாட்டின் பல பொலிஸ் நிலையங்களிலும் பரவலாக நடந்து கொண்டிருக்கின்றன.

இப்படித்தான் ஒருநாள் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் திருவிழாவுக்கு ஒழுங்கு படுத்தும் பணிக்காக 4 பெண் பொலிஸ் காவலர்களை அழைத்துக் கொண்டு போனார் ஒரு இன்ஸ்பெக்டர். அங்கே திடீரென 2 பெண் பொலிஸ் காவலர்களையும் இன்ஸ்பெக்டரையும் காணவில்லை.. திருவிழா முடிந்ததும் மற்ற காவலர்களுடன் அவரது வீட்டுக்குப் போய் பார்த்த போது ஒரு பெண் காவலர் சமையல் செய்து கொண்டிருந்தார்.

லேசாகத் திறந்திருந்த இன்னொரு அறையில் இன்னொரு பெண் காவலர்களிடம் தன் இச்சையைத் தீர்த்துக் கொண்டிருந்தார் காம வெறி பிடித்த அந்த இன்ஸ்பெக்டர். இப்படியாக தமிழ்நாடு பொலிஸின் காம லீலைகள் உச்சத்தைத் தொடுகின்றன.. தமிழக பெண் காவலர்கள் மட்டுமல்ல பல்வேறு பிரச்சினைகளின் நிமித்தம் காவல் நிலையத்துக்கு வரும் பெண்களையும் இவர்கள் விட்டு வைப்பதில்லை என்பது தான் கொடுமையின் உச்சம்...

இது மட்டுமல்ல லஞ்சம் ஊழலும் இங்கு தலை விரித்தாடுகிறது.. பொலிஸ் பதிவுக்கு செல்லும் இலங்கைத் தமிழர்களின் பணத்தைக் கறந்து அவர்களை ஓட்டாண்டியாக தெருவில் அலைய விடுகிறது இந்தக் கேவலம் கெட்ட காவல் துறை.. பெண்களை இப்படி கேவலமாக போகப்பொருளாக நினைத்து வல்லுறவு புரியும் காமப் பிசாசுகளை சம்பவம் நடந்த இடத்தில் வைத்தே துப்பாக்கியால் சுட வேண்டும்..

அவ்வளவு இறுக்கமாக சட்டதிட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும்.. இப்போது இவ்வளவு தகவல்களையும் வெளியில் கொண்டு வந்த வள்ளியின் பாதுகாப்பை யார் உறுதிப்படுத்துவது .. இன்னமும் கூட அவரால் குற்றம் சாட்டப்பட்ட எந்த ஒரு பொலிஸ் அதிகாரியும் கைது செய்யப்படவில்லை.. தண்டிக்கப்படவில்லை..

குறைந்தது பொலிஸ் சேவையிலிருந்தாவது இடை நிறுத்தப்படவில்லை.. இப்படி இருக்கிறது தமிழகத்தின் நீதி நிர்வாகம்.. தமிழகத்தின் முதல்வர் என்று கூறிக் கொள்ளும் கருணாநிதியே உத்தியோகபூர்வமாக 3 பெண்களை வைத்திருக்கும் போது. பொலிஸின் காம வெறியாட்டத்தை எப்படிச் சமாளிப்பது...

தமிழீழத்திலும் ஒரு காவல் துறை இருந்தது.. உறுதியாகச் சொல்வேன் உலகிலேயே அவர்களுக்கு நிகர் எவருமில்லை.. அவர்களைக் கண்டால் காலில் விழுந்து கும்பிடலாம்..


அப்படி இருக்கும் அவர்களின் மனிதநேயப் பண்புகளும் செயற்பாடுகளும்.. அவர்களிடம் லஞ்சமோ ஊழலோ இப்படியான காம வெறியாட்டமோ கிடையாது..

ஒரு பெண் நள்ளிரவிலும் கழுத்து நிறைய தங்க நகைகளுடன் வீதிகளில் வலம் வர முடிந்தது.. தமிழீழ காவல் துறையில் பெண்கள் ஆண்களுக்கு நிகராக மிகவும் கௌரவமாக மதிக்கப்பட்டார்கள்..

அப்படியான தமிழீழ காவல் துறையைப் பார்த்தாவது திருந்த வேணும் இந்த தரம் கெட்ட தமிழக காவல் துறை... தமிழக காவல் துறையின் தரம் கெட்ட காமப் பிசாசு அதிகாரிகள் களை எடுக்கப்பட்டு வரிசையில் நிற்க வைத்துச் சுட்டுக் கொன்றால் ஒழிய ஒரு நாளும் முடிவுக்கு வரப் போவதில்லை இவர்களின் காம வெறியாட்டம்..