இது தான் அமெரிக்காவின் மிக உயரமான கட்டிடம்.110 மாடிகளைக் கொண்டது.1974ல் நிர்மாணிக்கப்பட்ட இந்தக் கட்டிடம் முன்னர் சியர்ஸ் கோபுரம் என்றும் இப்போது வில்ஸ் கோபுரம் என்றும் அழைக்கப்படுகின்றது. இதுதான் உலகின் ஐந்தாவது உயரமான கட்டிடமாகும்.
இங்கு செல்பவர்கள் 103வது மாடியிலிருந்து கட்டிடத்தின் வெளிப் பகுதியில் இருந்து காட்சிகளைப் பார்ப்பதற்காக கண்ணாடிக் கூடுகளும் அமைக்கப்பட்டுள்ளமை ஒரு சிறப்பம்சமாகும்.
இந்தக் கண்ணாடிக் கூண்டுக்குள் இருந்து சுமார் ஐம்பது மைல் தூர பரப்பளவை மிகத் தெளிவாக எந்தத் தங்குதடையும் இன்றி காணலாம். காரணம் பார்வையை மறைக்கும் அளவுக்கு சுற்றுமுற்றிலும் உயரமான கட்டிடங்கள் எதுவுமே கிடையாது.
இங்கு முற்றிலும் எதிர்ப்பாராத விதத்தில் ஒருவர் ஒரு வித்தையைச் செய்து காட்டியபோது எடுக்கப்பட்டது தான் இந்தப் படம். ஒரு கண்ணாடிக் கூண்டுக்குள் இருந்து கேபிள் ஒன்றின் உதவியோடு வெளிப்பகுதி ஊடாக இன்னொரு கண்ணாடிக் கூண்டை அவர் தொட்டார்.
அதுவும் தலை கீழாகத் தொங்கிக் கொண்டு இந்த நபர் யார் என்பது அடையாளம் காணப்படவில்லை. ஆனால் அவரின் செயல் எல்லோரையும் மெய் சிலிர்க்க வைத்துவிட்டது. சுமார் 1353 அடி உயரத்தில் அவர் அந்தரத்தில் தலை கீழாகத் தொங்கினார்.
0 comments:
Post a Comment