Wednesday, June 29, 2011

மாணவியை கெடுத்த பொருக்கி இன்ஸ்பெக்ட்டர் தப்பி ஓட்டம்!

கேரள மாநிலம் எர்ணாகுளத்தைச் சேர்ந்த சுதீர். இவரது மகள் விஜயா. 14 வயதான இவர் பள்ளியில் படித்து வந்தார். அப்போது விஜயாவை சினிமா நடிகையாக்குவதாக கூறி தந்தையே விபசாரத்தில் தள்ளினார். 

சினிமா பிரபலங்கள், அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள் என பலருக்கும் அந்த மாணவி விருந்தாக்கப்பட்டார்.  பெற்றோரின் பண ஆசையால் செக்ஸ் சித்ரவதைக்குள்ளான மாணவி அவர்களின் பிடியில் இருந்து தப்பி எர்ணாகுளம் போலீசில் தஞ்சம் அடைந்தார்.

தந்தையே தன்னை விபசாரத்தில் ஈடுபடுத்திய கொடுமையை போலீசாரிடம் கூறி கதறி அழுதார்.  200-க்கும் மேற்பட்டோர் பலவந்தப்படுத்தி தன்னை கற்பழித்ததாகவும் அவர் வாக்குமூலம் கொடுத்தார். இந்த விவகாரம் கேரளாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. கேரள சட்டசபையிலும் இது எதிரொலித்தது. 

இதனால் போலீசார் அதிரடி நடவடிக்கையில் இறங்கினர். மாணவியின் பெற்றோர் சுதீர், உடனடியாக கைது செய்யப்பட்டனர்.  தொடர்ந்து மாணவியை கற்பழித்த மலையாள நடிகர் விஜயன், கம்யூனிஸ்டு பிரமுகர் தாமஸ் வர்க்கீஸ் மற்றும் பெண் புரோக்கர்களும் கைது செய்யப்பட்டனர். அந்த மாணவி தமிழகத்தைச் சேர்ந்த அரசு அதிகாரிகளுக்கும் விருந்தாக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. 

முதல் கட்டமாக குமரி மாவட்டத்தைச் சேர்ந்த காண்டிராக்டர் மணிகண்டன் கைதானார்கள். கோவை மாவட்டத்தைச் சேர்ந்த மின் வாரிய அதிகாரி முருகேசன், நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார். மேலும் 9 அதிகாரிகள் மாணவியை கற்பழித்துள்ளது தெரியவந்துள்ளது. அவர்களை பிடிக்க போலீசார் கோவையில் முகாமிட்டுள்ளனர். 

இதற்கிடையே மாணவி கற்பழிப்பு வழக்கில் குமரி மாவட்டத்தில் பணியாற்றிய தமிழ்நாடு சிறப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவருக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. அவர் குமரி - கேரள எல்லையில் உள்ள போலீஸ் நிலையத்தில் பணியாற்றியபோது காண்டிராக்டர் மணிகண்டனுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தார். 

அப்போது மணிகண்டன் மீதான வழக்குகளில் இருந்து அவரை காப்பாற்றி இருக்கிறார். இதற்காக மணிகண்டன் அவருக்கு மாணவியை விருந்தாக்கியுள்ளார். மணிகண்டன் கைதானதும் போலீஸ் இன்ஸ்பெக்டர் பற்றிய விவரத்தை கேரள போலீசாரிடம் தெரிவித்தார்.  இதையடுத்து கேரள போலீசார், குமரி மாவட்ட இன்ஸ்பெக்டரை பிடிக்க அதிரடி நடவடிக்கையில் இறங்கினர். 

ஆனால் இன்ஸ்பெக்டர் அவர்களிடம் சிக்காமல் தலைமறைவானார். இந்த தகவல் பரவியதும் இன்ஸ்பெக்டர், குமரி மாவட்டத்தில் இருந்து வேறு மாவட்டத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இடமாற்றத்துக்கான நியமன ஆணையைகூட அவர் வாங்கவில்லை. கேரள போலீசார் குமரி மாவட்டத்தில் முகாமிட்டு அவரை தேடி வருகிறார்கள்.

0 comments:

Post a Comment