Wednesday, June 22, 2011

லிபியாவில் நேட்டோ படைகள் தாக்குதல் 19 அப்பாவிகள் பலி


Jun 22, 2011 டிரிபோலி:லிபியாவில், நேட்டோ படைகள் நடத்திய தாக்குதலில், குழந்தைகள் உட்பட, அப்பாவி பொதுமக்கள், 19 பேர் பலியானதாக, அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.லிபியா அரசின் உயர்மட்ட கவுன்சிலில் முக்கியமானவர் கோயுல்டி ஹமிதி. தலைநகர் டிரிபோலியில் இருந்து, 70 கி.மீ., தொலைவில் உள்ள சர்மான் என்ற இடத்தில் இவரது வீடு உள்ளது. இவரது வீட்டை குறி வைத்து, நேற்று முன்தினம் காலை, நேட்டோ படைகள் நடத்திய தாக்குதலில், எட்டு குழந்தைகள் உட்பட, 19 அப்பாவி பொதுமக்கள் பலியானதாக அந்நாட்டு அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.லிபியா தலைவர் கடாபியின் மகன்களில் ஒருவருக்கு, ஹமிதியின் மகளை திருமணம் செய்து கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலில், ஹமிதியின் குடும்ப உறுப்பினர்களும் பலியாகி இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
கடந்த இரு தினங்களுக்கு முன், இதேபோல், நேட்டோ படைகள் தாக்கியதில், அப்பாவி பொதுமக்கள், ஒன்பது பேர் பலியானதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment