Friday, June 17, 2011

பெண்களுக்கு எதிரா வன்முறை இந்தியாவுக்கு 4 இடம்!


JUNE 17, புதுடில்லி:பெண்களுக்கு எதிரான வன்முறைகளில், இந்தியா உலகளவில் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது. உலகில் பெண்கள் வாழ்வதற்கு ஆபத்தான நாடுகள் எவை என சமீபத்தில் ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது.

இந்த ஆய்வில், சுகாதாரப் பிரச்னை, பாலியல் வன்முறை, பாலியல் அல்லாத வன்முறைகள், பண்பாடு, மதம் மற்றும் பாரம்பரியத்தின் பேரால் தீங்கு விளைவிக்கும் சடங்குகள், பொருளாதார வளம் சரியாகக் கிடைக்காதது, ஆள் கடத்தல் போன்ற பெண்களுக்கு எதிரான ஆறு பிரச்னைகள் மட்டும் கணக்கில் கொள்ளப்பட்டன.

இந்த ஆய்வில் இந்தியாவுக்கு நான்காவது இடம் கிடைத்துள்ளது . கடந்த 2009ல் சி.பி.ஐ., எடுத்த கணக்கெடுப்பின் படி, ஆட் கடத்தலில் 90 சதவீதம் இந்தியாவிற்குள் நடக்கிறது என்பதும், நாடு முழுவதும் 30 லட்சம் பாலியல் பெண் தொழிலாளர்கள் உள்ளனர்; அவர்களில் 40 சதவீதம் பேர் சிறுமிகள் என்பதும் வெளியுலகுக்குத் தெரிய வந்தது.

அதுபோல் மதத்தின் பெயரால் குழந்தைகள் திருமணம், பெண்கள் மீதான பாலியல் வன்முறை வரதட்சணை கொடுமைகள், பெண் சிசு கொலை இப்படி பெண்களுக்கு எதிரான எல்லாவித கொடுமைகளும் ஒருங்கே நடைபெறும் ஒரு நாடாக இந்தியா திகழ்கிறது. இந்த அறிக்கையின் வாயிலாக இந்தியாவிற்கு சுற்றலா வரும் வெளிநாட்டு பெண்களின் வரவு குறைந்து போகும் என்று நம்பப்படுகிறது

0 comments:

Post a Comment