Friday, June 24, 2011

கறுப்புபணத்தை ஒழிக்க இ-மெயில் வாயிலாக பொதுமக்களிடமிருந்து யோசனை



புதுடில்லி: கறுப்புபணத்தை ஒழித்து கட்டுவது தொடர்பாக மத்திய நிதி அமைச்சகத்திற்கு தகுந்த ஆலேசானை வழங்க பொதுமக்களிடமிருந்து ஒரே வாரத்திற்குள் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இ-மெயில்கள் வருகின்றன. வெளிநாட்டு வங்கிகளி்ல் பதுக்கி வைத்துள்ள கறுப்பு பணத்தை கொண்டுவர கோரி, மத்திய அரசு கறுப்பு பணத்தை ஒழித்துக்கட்ட தகுந்த நடவடிக்கை எடுத்து வருகிறது. இது தொடர்பாக சட்டம் கொண்டுவருவதற்கும், வெளிநாட்டு வங்கிகளில் உள்‌ள கறுப்பு பணத்தை இந்தியா கொண்டுவருவதற்கும் , மத்திய நிதி அமைச்சகம் சார்பில், மத்திய அரசின் நேரடி வரி விதிப்பு வாரியத்தலைவரின் கீழ் குழுவை அமைத்துள்ளது. இந்நிலையில் இக்குழுவு பொதுமக்கள் கருத்தினை கேட்டறிய
BM-feedback@nic.in எனும் இ‌-மெயில் முகவரியை வெளியிட்டிருந்தது. ‌முன்னதாக கடந்த ஜூன் 9-ம் தேதியன்று இக்குழுவின் முதல் கூட்டம் நடந்தது. அப்போது கறுப்புபணத்தை ஒழித்து கட்ட பொதுமக்களிடமிருந்து தகுந்த ஆலோசனைகளையும், கருத்துக்களையும் கேட்டறிவது எனமுடிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக மத்திய நேரடி வரிவிதிப்பு வாரியத்தின் தலைவர் பிரகாஷ் சந்திரா கூறுகையில், குழு உறுப்பினர்கள் , அமலாக்கத்துறையினரிடம் தீவிர ஆலோச‌னை நடத்தி வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கியுள்ள கறுப்பு பணத்தை கொண்டுவர தகுந்த சட்டம் கொண்டுவர நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்படும். இதற்கான அடிப்படை கட்டமைப்புகள் பணிகள் இம்மாத இறுதிக்குள் முடிவு செய்யப்படும். அடுத்தக்கூட்டம் ஜூலை இரண்டாவது வாரம் நடைபெறும். மேலும் குழுவினர் நடத்திய முதல் கூட்டத்திற்கு பின் ஒரே வாரத்தில் பொதுமக்களிடமிருந்து 1000 இ-மெயில்கள் வாயிலாக ஆலோசனைகள் குவியத்தொடங்கியுள்ளன.இவ்வாறு பிரகாஷ் சந்திரா கூறினார்.

0 comments:

Post a Comment