
150,000 m3 கண அளவிற்கு 25 மீற்றல் உயரத்தில் 200 மீற்றர் நீளத்திற்கு குப்பைக் கழிவுகளால் ஒரு மலையைக் கற்பனை செய்து பாருங்கள். கற்பனை என்ன, நேரிலேயே நீங்கள் பார்க்கலாம். என்ன மூக்கைப் பொத்திக் கொண்டு கண்களால் மட்டும் தான் பார்க்க வேண்டும்.
Val-de-Marne இலுள்ள Limeil-Brévannes எனும் நகரத்திலேயே சிறிது சிறதாகச் சேர்ந்து இன்று மலைபோல் குப்பைகள் குவிந்துள்ளன. இதனை அகற்றுவதற்கான நடவடிக்கையை செப்டெம்பர் மாதம் முதல் மேற்கொள்ளவிருப்பதாக பிரான்சின சுற்றுப் புறச் சூழல் அமைச்சர்Nathalie Kosciusko-Morizet தெரிவித்துள்ளார். 
முதலில் கடும் வெயில் காலத்தில் தீப்பிடிக்காமல் இருக்க இப்போது அன்றாடம் பாரிய கருவிகள் மூலம் நீர் பாய்ச்சி குப்பை மலை குளிர்விக்கப்படுகின்றது. இந்தக் குளிர்விக்கப்பட்ட குப்பையையே அதற்குரிய இயந்திரங்கள் மூலம் கொஞ்சம் கொஞ்சமாக அகற்றமுடியும். குளிர்விக்காத குப்பையை அகற்றுவது மேலும் சூழலை மாசடையச் செய்யும்.
இருப்பினும் நெடுங்காலமாக தேங்கிநிற்கும் குப்பைகளுக்குள் மெதேன் வாயு பெருமளவில் உற்பத்தியாகியிருக்கக் கூடிய அபாயம் உள்ளது. அதனால் சிறிது சிறிதாக அகற்றப்படும் குப்பைகளும் மீண்டும் மீண்டும் குளிர்விக்க வைக்கப்பட வேண்டிய தேவை உள்ளது.
இத்துறையில் தேர்ச்சி பெற்ற நிறுவனங்கள் அதியுச்சத் திறனாக 2000 m3 குப்பைகளை மட்டுமே குளிர்வித்து வகை பிரிக்க முடியும் எனத் தெரிவித்துள்ளனர். மொத்தமாக150,000 m3 குப்பைகள் அகற்றப்பட வேண்டும்.

0 comments:
Post a Comment