Tuesday, June 28, 2011

கிழிந்து போன இந்தியாவின் போலி மதச்சார்பின்மை!


JUNE 29, இந்திய அரசியலமைப்புச் சட்டப் புத்தகத்தில் “மதச்சார்பற்ற அரசு” எனும் சொல்லாட்சி இடம் பெற்றுவிட்டது. ஆனால் நடைமுறையில் என்ன? இந்திய அரசு மதச்சார்பற்றதாகத்தான் உள்ளதா? இந்திய அரசியல் வாழ்வு அப்படித்தான் உள்ளதா?

சுதந்திர இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர் ராஜேந்திரபிரசாத்தும் உள்துறை அமைச்சர் வல்லபாய் படேலும் சோமநாதர் ஆலயத்தை அரசு செலவில் அமைக்கும் வேலையில் தீவிரமாக இறங்கினார்கள். நேருகூட பெரும் எதிர்ப்பு காட்டவில்லை, காந்திஜிதான் எதிர்த்தார். ஆலயம் எழுப்ப வேண்டும் என்றால் இந்துக்கள் தங்கள் சொந்தப் பணத்தில் எழுப்ப வேண்டுமே தவிர அரசுப் பணத்தில் அல்ல என்றார்.

ஒரு தனிமனிதர் தன்னளவில் மத நம்பிக்கையாளராக இருப்பதற்கும், ஆட்சியாளர் என்ற முறையில் மதச்சார் பற்றவராக இருப்பதற்கும் இடையில் இருக்க வேண்டிய கண்டிப்பான வித்தியாசத்தைச் சுட்டிக்காட்டினார். ஒர் ஆழ்ந்த மதநம்பிக்கையாளரான காந்திஜியிடமிருந்து வந்த எதிர்ப்பு மிகுந்த அர்த்தபாவமுடையது. இதற்கெல்லாம் சேர்த்துத்தான் அவரது உயிரைப் இந்து தீவிரவாத அமைப்பான ஆர்.எஸ்.எஸ் பலி கொண்டது.

இந்திய அரசு மதச்சார்பற்ற அரசு என்று சட்டப்புத்தகத்தில் இருந்தாலும் அது பெரும்பான்மை மதமாகிய இந்து மதச்சார்பு அரசாகவே உள்ளது என்பதற்கு அதன் வேறு பல செயல்பாடுகளும் எடுத்துக்காட்டுகளாக உள்ளன. அரசு நிகழ்ச்சிகள் பலவும், குறிப்பாகத் திறப்பு விழாக்கள் பலவும் இந்து சாஸ்திர, அதாவது பிராமணிய முறைப்படியே நடைபெறுகின்றன. பல மதத்த- வரும் அல்லது மத நம்பிக்கையற்றவரும் கொடுத்த வரிப்பணத்தில் அரசுத் திட்டங்கள் உருவாக்கப்பட்;டவை என்கிற உணர்வே இல்லை.

அரசு அலுவலகங்களில் இந்து கோவில்கள் இருக்கின்றன, இந்து சாமி படங்கள் இருக்கின்றன. கல்லூரி, பல்கலைக்கழகங்களில் சரஸ்வதி பூஜை நடத்தப்படுகிறது. ஒரு நூலகத்திற்குப் பொறுப்பாளராக ஒரு முஸ்லிம் இருந்தால் அவர் பாடு திண்டாட்டம்தான். அவர் ஏற்காத விக்கிரக ஆராதனை அவர் கண் முன்னாலேயே நடைபெறும். இதனினும் கொடுமை இது தவறு என்கிற உணர்வே அரசு மற்றும் பொதுத்துறை ஊழியர்களிடத்தில் இல்லாதது. அதிகாரிகளைப் பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை.

இதுவெல்லாம் சிறுபான்மை மதத்தவர் உள்ளத்தில் தாங்கள் இரண்டாந்தரக் குடிமக்கள் எனும் எண்ணத்தை உருவாக்குகிறது, அல்லது அரசு அலுவலகங்களில் இந்து மத விழாக்கள் கொண்டாடப்படுவது போலத் தங்கள் விழாக்களும் கொண்டாடப்பட வேண்டும் எனும் கோரிக்கையைக் கிளப்புகிறது. ஆனால் சிறுபான்மையினர் என்கிற காரணத்தாலேயே அது சாத்தியமில்லாமல் போகிறது.

“சகல மதங்களிடமும் அரசு சமத்துவம்” என்பது காரிய சாத்தியமில்லாதது என்பதை இது தெளிவாக உணர்த்துகிறது. ஒரே வழி அரசு நிறுவனங்களிலிருந்து சகல மதங்களையும் ஒதுக்கி வைப்பதுதான். அரசு ஊழியர்கள் அவரவர் வீட்டில் தத்தம் மத அனுஃ;டானங்களைச் செய்ய வேண்டுமே தவிர அவர்கள் பணிபுரியும் இடங்களில் அல்ல.

இந்தியாவில் மதச்சார்பின்மை 1947 பிரிவினையின்போதே படுதோல்வியடைந்த போதிலும், இன்றும் காங்கிரசாலும், கம்யூனிஸ்டுகளாலும் உதாரணமாக முன்வைக்கப் படுகிறது. ஷாபானு வழக்கிலும், ராம ஜென்ம பூமி விவகாரத்திலும், குஜராத் படுகொலையிலும் காந்திய மதச்சார்பின்மை வெங்காயம் மொத்தமாய் உரிந்து போனது. இந்து காவிப் படையின் கொலை வெறியாட்டத்திற்கு சொல்லில் மௌன சாட்சியாகவும், செயலில் நம்பகமான கூட்டாளியாகவும் காங்கிரசு துணை போனது.

0 comments:

Post a Comment