Wednesday, June 22, 2011

5 இந்திய மொழிகளில் தனது மொழிபெயர்ப்பு தேடுதல் சேவையை விரிவுபடுத்த கூகுள் நிறுவனம் தீர்மானம்


 Wed, June 22 வாஷிங்டன் : மேலும் 5 இந்திய மொழிகளில் தனது மொழிபெயர்ப்பு தேடுதல் சேவையை விரிவுபடுத்த கூகுள் நிறுவனம் தீர்மானித்துள்ளது. பெங்காலி, குஜராத்தி, கன்னடம், தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் சேவையை மேம்படுத்தவது தொடர்பாக கூகுள் நிறுவனம் ஆய்வு மேற்கொண்டு வருகிறது. இந்த சேவைகள் இன்று( ஜூன் 22) முதல் தொடங்கப்படுவதாக கூகுள் நிறுவன அறிவியல் ஆய்வாளர் ஆஷிஷ் வேணுகோபால் தெரிவித்துள்ளார். இந்தியா மற்றும் பங்களாதேசில் சுமார் 500 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இந்த ஐந்து மொழிகளை பேசி வருகின்றனர். 2009ம் ஆண்டு 11 மொழிகளில் தொடங்கப்பட்ட இந்த மொழிபெயர்ப்பு சேவை தற்போது 63 மொழிகளாக விரிவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment