Saturday, June 25, 2011

சம்ஜோதா:குண்டுவெடிப்பில் பங்கு நிரூபிக்கப்பட்ட பிறகும் குற்றவாளியாக சேர்க்கப்படாத ஆர்.எஸ்.எஸ் தலைவர்



சுவாமி அஸிமானந்தா உள்ளிட்ட ஐந்து நபர்களை குற்றவாளிகளாக சேர்த்து தேசிய புலனாய்வு ஏஜன்சி (என்.ஐ.ஏ) நேற்று முன்தினம் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த குற்றப்பத்திரிகையில் பல இடங்களில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் இந்திரேஷ் குமாரின் பெயர் விமர்சிக்கப்படுகிறது. 

பயங்கரவாத செயல்களை குறித்து சதித்திட்டம் தீட்ட சபரிடாமில் நடத்திய ரகசிய கூட்டத்தில் அஸிமானந்தா மற்றும் சுனில் ஜோஷியுடன் இந்திரேஷ் குமாரும் பங்கேற்றுள்ளார்.
சம்ஜோத எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு உள்ளிட்ட குண்டுவெடிப்புகளை நிகழ்த்துவதற்கு 50 ஆயிரம் ரூபாய் நிதியுதவியை அஸிமானந்தா-சுனில்ஜோஷி கும்பலுக்கு இந்திரேஷ் குமார் அளித்தார் என்பதும் குற்றப்பத்திரிகையில் கூறப்படுகிறது. ஆனால் இவ்வழக்கில் அவர் குற்றவாளியாக சேர்க்கப்படவில்லை என்பது அதிர்ச்சியளிக்கிறது. 
குற்றவாளிகளின் வாக்கு மூலமும், சூழ்நிலை ஆதாரங்களும் இருந்த பிறகும் கூட இந்திரேஷ் குமாரிடம் என்.ஐ.ஏ விசாரணை நடத்தவில்லை. 

முன்னர் ஹைதராபாத் மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு வழக்கில் இவரை சி.பி.ஐ விசாரணை செய்ததை என்.ஐ.ஏ புறக்கணித்துள்ளது. ஆர்.எஸ்.எஸ்ஸிற்கு இந்தியாவில் நடந்த குண்டுவெடிப்புகளில் பங்கு வெளியான சூழலில் அவ்வமைப்பின் செய்தித் தொடர்பாளர் ராம்மாதவ் பிரதமர் அலுவலகத்திற்கு சென்றும் கடிதம் அளித்தது குறிப்பிடத்தக்கதாகும். 
இந்தியா முழுவதும் நடந்த பயங்கரவாத தாக்குதல்களில் இந்திரேஷ் குமாரின் பங்கு வெளியான பிறகும் அவர் மீது நடவடிக்கை எடுக்க தயங்குவது அரசின் பகிரங்கமான இரட்டை வேடமாகும். அதே சமயத்தில் இத்தகைய குண்டுவெடிப்புகளில் நிரபராதி என்று விசாரனையில் கண்டறியப்பட்ட டாக்டர் பரூக்கி, சபீர் பேட்டரிவாலா உட்பட பல முஸ்லிம்கள் இன்னும் சிறை கொட்டடியில் பிணை கூட வழங்கப்படாமல் வாடுவது எந்த வகையில் நீதி நியாயம் என்பதை அரசு தான் விளக்க வேண்டும். மேலும் நாட்டின் மிகப்பெரிய பயங்கரவாதியான RSS யின் இந்திரேஷ் குமார் போன்றவர்களை சுதந்திரமாக நடமாடவிட்டுள்ளதன் மூலம் நம் ஆட்சியாளர்களின், நாட்டின் பாதுகாப்பைக் குறித்தோ, நீதியை குறித்தோ உள்ள அக்கறை வெட்ட வெளிச்சமாகிறது.

0 comments:

Post a Comment