Tuesday, June 21, 2011

காவி மயமாகி வரும் பீஹார் .


பாட்னா: தேசிய ஜனநாயக கூட்டணிக்கட்சிகளான ஜனதா தளமும் பா.ஜ.கவும் இணைந்து கடந்த 6 வருடங்களுக்கு முன்பு பீஹாரில் ஆட்சியைப்பிடித்தது. அன்றிலிருந்து இன்று வரை சங்கப்பரிவாரங்களின் செயல்பாடுகள் பீஹாரின் கிழக்கு பகுதியில் அதிகரிக்கத்தொடங்கியது. குறிப்பாக முஸ்லிம்கள் அதிகம் வாழும் பகுதிகளில் தங்களின் செயல்பாடுகளை அதிக அளவில் செய்து வருகிறார்கள். ஒரு குறிப்பிட்ட அஜண்டாவை கொண்டு செயல்படும் இத்தகைய பாசிஸ்டுகள் சமுதாயத்தை சீர்த்திருத்துவதற்கான செயல்களை செய்கிறார்கள் என்பது போன்ற ஒரு மாயைத்தோற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இத்தகைய காவி கும்பல்களின் வளர்ச்சி அங்குள்ள காவல்துறையினர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, என பீஹாரில் உள்ள முஸ்லிம் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.


இந்த இடம் ஒரு அமைதியான இடமாகும். பெரும்பாலான மக்கள் ஏழ்மையான நிலையில் வாழ்ந்து வருகிறார்கள். ஆனால கடந்த 6 ஆண்டு காலமாக சங்கப்பரிவார கூட்டங்கள் தங்களுடைய கேடுகெட்ட செய்லபாடுகளை தீவிரப்படுத்தியுள்ளனர். இதன் மூலம் சமூகத்திற்கு மத்தியில் தாழ்வுமனப்பான்மையை ஏறபடுத்தி வருகின்றனர்.

சங்கப்பரிவாரங்களுக்கென்று பழைய செயல் திட்டம் ஒன்று உள்ளது. தற்போது ஆட்சியில் பங்கெடுத்துள்ள இவர்கள் முஸ்லிம்கள் மீது பொய்யான தகவல்களை பரப்பி அதன்மூலம் இனக்கலவரத்தை தூண்டும் கேடுகெட்ட வேலைகளை செய்துவருகிறார்கள். இனக்கலவரத்தை தூண்டுவதற்காக எப்பேற்பட்ட காரியத்தையும் செய்ய துணிபவர்கள்தான் இந்த சங்கப்பரிவாரங்கள் என்பதை நாம் எளிதில் மறந்துவிட முடியாது.

ஜுபைர் ஆலம் என்பவர் கூறும் போது, மக்கள் இங்கே அமைதியாகவும் நிம்மதியாகவும் வாழ்ந்து வருகிறார்கள். இதனை சீர்குழைக்கும் வகையில் ஃபாசிஸ்டுகள் தங்களது செயல்பாடுகளை தீவிரப்படுத்தி வருகிறார்கள் என்று கூறினார்.


அஸார் அஹமது என்னும் உருது பத்திரிக்கையாளர் கூறும்போது, இந்த அரசாங்கம் கூறுவது போல் சிறுபான்மை மக்களின் முன்னேற்றத்திற்கான செயல்திட்டங்கள் எதுவும் இங்கே அமலாக்கப்படவில்லை, மாறாக பா.ஜ.க இந்த அரசாங்கத்தில் ஆதிக்கம் செலுத்து வருவதாகவும் கூறினார்.

நிதிஷ் குமாரின் அரசாங்கம் மெல்ல மெல்ல ஃபாசிஸ அரசாங்கமாக மாறி வருகிறது என்பதை அறிந்து கொள்ளலாம்.

செய்தி: முத்து

0 comments:

Post a Comment