Monday, June 20, 2011

ஸ்கூல் சலோ : பள்ளி செல்லும் மழலையர்களுக்கு நெல்லை மேற்கு மாவட்டத்தில் வரவேற்பு



School Chalo Nellai West
பாப்புலர் பிரான்ட் ஆப் இந்தியாவின் ஸ்கூல் சலோ திட்டத்தின் ஒரு பகுதியாக பள்ளி செல்லும் மழலையர்களுக்கு வரவேற்பு நிகழ்ச்சி நெல்லை மேற்கு மாவட்டம் கடையநல்லூரில் ஜூன் 15 அன்று நடைபெற்றது . இந்நிகழ்ச்சியில் புதிதாக பள்ளி செல்லும் குழந்தைகள் நல்ல முறையில் கல்வி கற்க சிறப்பு பிரார்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டு அவர்களை ஊக்குவிக்கும்விதமாக இனிப்புகள் வழங்க மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்தது .
புதிய இந்தியாவை கட்டமைக்கும் முயற்சியில் பாப்புலர் பிரான்ட் ஆப் இந்தியா ஈடுபட்டு வருவதும் தொடர்ந்து பணியாற்றி வருவதும் அனைவரும் அறிந்த விஷயம் . வல்லரசாகப்போகும் இந்தியாவில் அனைத்து சமூகத்தினரும் சீராக வளர்ச்சியடைய வேண்டியது அவசியம் .ஆனால் கல்வியிலும் பொருளாதாரத்திலும் வேலைவாய்ப்புகளிலும் பழன்குடியினரைவிட மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளதாக சச்சார் கமிஷன் அறிக்கையின் மூலம் முஸ்லிம் சமுதாயம் அடையாளப்படுத்தப்பட்ட காரணத்தால் முதல் கட்டமாக அவர்களின் கல்வி வளர்ச்சியில் மேல் அதிக அக்கறையுடன் ஆர்வமூட்டும் பிரசாரமும் உதவிகளும் செய்யப்பட்டு வருகிறது .
சர்வ சிக்ஷா அபியான் முழு கல்வியறிவு பெற்ற கிராமமாக மாற்றுவது என்பது போன்ற அரசாங்க திட்டங்கள் பல இருந்தாலும் அரசாங்கத்தின் பலன் ஏழை எளிய மக்களுக்கு நேரடியாக சென்றடைய அரசாங்கத்திற்கு உதவும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் கல்வியாண்டின் துவக்கத்தில் ஸ்கூல் சலோ பிரச்சாரம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
ஸ்கூல் சலோ திட்டத்தில் கல்வியில் மிகவும் பின்தங்கிய கிராமத்தை கண்டறிவது ,ஆரம்பக் கல்வி பயிலாத குழந்தைகள் பற்றிய கணக்கெடுப்பு நடத்துவது , அவர்கள் கல்வியை தொடர அனைத்து உதவிகளையும் செய்வது,பெற்றோர்களுக்கு ஆலோசனைகள் வழங்குவது ,கல்வி உதவித்தொகை கிடைக்க ஏற்பாடு செய்வது கல்விக்காக ஒரு குழந்தையை செல்வந்தர்கள் தத்தெடுக்க ஏற்பாடு செய்வது போன்ற பல பணிகள் பல்வேறு இடங்களில் நடைபெறுகிறது .
இந்த விழிப்புணர்வு பிரசாரம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது

0 comments:

Post a Comment