Thursday, June 9, 2011

போலீசாரை எதிர்கொள்ள ஆயுத படை:ராம்தே​வின் பயங்கரவாத பேச்சு-அரசி​ன் நடவடிக்கை என்ன?

டெல்லியில் தனது போராட்டத்திற்கு எதிராக போலீஸ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட சூழலில் காவல்துறையினரை எதிர்கொள்ள தற்காப்பு படை ஒன்று உருவாக்கப்படும் என அவர் தெரிவித்தார். ஊழலுக்கு எதிராக தனது போராட்டத்தை தடுத்து நிறுத்த முயலும் போலீஸ் மற்றும் சமூக விரோதிகளை (?) எதிர்கொள்ள 11 ஆயிரம் உறுப்பினர்களை கொண்ட பெண்களும், ஆண்களும் அடங்கும் வலுவான ஆயுத படை உருவாக்கப்படும் என ஹரித்துவாரில் உண்ணாவிரத போராட்டம் நடத்தும் ராம்தேவ் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறியதாவது: ஒவ்வொரு மாவட்டத்திலும் 20 பேர் வீதம் இளைஞர்களை உட்படுத்தி அவர்களுக்கு வேதமும், ஆயுத பயிற்சியும் பயிற்றுவிக்கப்படும். இனிமேல் நடக்கும் அத்துமீறல்களில் நாங்கள் தோல்வியுற மாட்டோம். ஆனால் இப்படை எவரின் உயிரையும் பறிக்காது, என அவர் தெரிவித்தார்.
அதே வேளையில், ஆயுத படையை உருவாக்கப் போகிறேன் என ராம்தேவின் அறிவிப்பு குறித்து மத்திய அரசும், காங்கிரஸ் கட்சியும் கடுமையாக விமர்சித்துள்ளன. இந்த அறிக்கையின் மூலமாக ராம்தேவின் உண்மையான நோக்கமும், தனி நிறமும் வெளிவந்துள்ளது. அவர் அதனை செய்யட்டும். சட்டம் தனது கடமையை செய்யும் என மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
ஆயுத போராட்டத்திற்கான ராம்தேவின் அழைப்பு தீவிரமான பிரச்சனை எனவும், அரசு இதற்கு எதிராக கடுமையான நடவடிக்கையை மேற்கொள்ளும் எனவும் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜெயந்தி நடராஜன் தெரிவித்துள்ளார். ஊழலுக்கு எதிராக போராட ஆயுத படை உருவாக்குவது என்ற ராம்தேவின் அறிவிப்பு அரசியல் சட்டத்திற்கு எதிரானது என அவர் சுட்டிக்காட்டினார்.
டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் போலீஸ் நடவடிக்கை மேற்கொண்டதற்கு அரசுக்கு மன்னிப்பு வழங்கியதாக கூறிய ராம்தேவ் திடீரென பல்டியடித்து ஆயுதப்படையை உருவாக்குவேன் என மிரட்டல் விடுத்துள்ளார்.

ராம்தேவின் சொத்துக்களை குறித்து அரசு ஏஜன்சிகள் நேற்று முன்தினம் விசாரணையை துவக்கியிருந்தன. ஆயுத படையை உருவாக்குவேன் என ராம்தேவின் அறிவிப்பு சரியான நடவடிக்கை இல்லை என சமாஜ்வாடி கட்சியின் தலைவர் முஹம்மது அஸம் கான் தெரிவித்துள்ளார்.

ராம்தேவும் ஹிந்துத்வா கொள்கையும்
ஹிந்துத்வா கொள்கை ஜனநாயக விழுமியங்களையும் சமூக நீதியினையும் தூக்கி எறிந்து விட்டு வேத கால ஆட்சி முறையையும் வர்ணாசிரம கொள்கையை ஏற்படுத்தும் நோக்கமுடையது. அது தான் ராம் தேவ்வின் அறிக்கையிலிருந்து வெளிப்பட்டுள்ளது. இந்த கொள்கையுடையவர்கள் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைப்பதே கிடையாது. சமீப காலத்தில் ஹிந்துத்துவா தீவிரவாதம் வெளிச்சத்திற்கு வந்ததிலிருந்தும் நாம் ஹிந்துத்துவாவின் கோர முகத்தை அறியலாம். இந்த ஹிந்துத்துவா தான் தனது கொள்கையென RSS, BJP மற்றும் பிற சங்க பரிவாரங்கள் முழங்கி வருகின்றார்கள். துரதிஷ்டவசமாக முந்தைய அரசுகள் தூங்கிக் கொண்டிருந்ததால் இந்த கொள்கை மக்களுடன் பரவலாக கலந்துள்ளது. இதன் அபாயத்தை மக்கள் இன்னும் உணரவில்லை. இதனை உணர்த்தும் பணியினை அரசு செய்தால் ஒழிய இந்த ஹிந்துத்துவா பயங்கரவாதத்தை எதிர்கொள்ள முடியாது. அது வரை சேது கால்வாய் திட்டமும் பாபரி இடிப்பும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும் என சமூக ஆர்வலர்கள் கருதுகிறார்கள்.

0 comments:

Post a Comment