Sunday, June 5, 2011

பத்தாம் வகுப்புத் தேர்வில் மகத்தான வெற்றி ! - சவுதி அரேபியாவில்...


சவுதி இன்டர் நேஷனல் இந்தியன் ஸ்கூல் மாணவர்கள் பத்தாம் வகுப்புத் தேர்வில் மகத்தான வெற்றி!

சவுதியில் உள்ள ரியாத், ஜித்தா, தம்மாம் நகரங்களில் இருக்கும் இந்தியப் பள்ளிக் கூடங்களில் பயிலும் 10ம் வகுப்புத் தேர்வு எழுதிய மாணவர்கள் சிறந்த முறையில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இன்டர் நேஷனல் இந்தியன் ஸ்கூல் - தம்மாம் (100 சதவிகிதம் / தேர்வு எழுதியோர் 836 மாணவ, மாணவியர்)

இன்ட்ர்நேஷனல் இந்தியன் ஸ்கூல் / ஜுபைல் (100 சதவிகிதம் / தேர்வு எழுதியோர் 194 மாணவ, மாணவியர்)

இன்ட்ர்நேஷனல் இந்தியன் ஸ்கூல் / ஜித்தா (100 சதவிகிதம் தேர்வு எழுதியோர் 709 மாணவ, மாணவியர் )

இன்ட்ர்நேஷனல் இந்தியன் ஸ்கூல் / ரியாத் (100 சதவிகிதம் 293 +431 மாணவ, மாணவியர்)

அல்வுரூத் இன்டர்நேஷனல் ஸ்கூல் / ஜித்தா (100 சதவிகிதம் தேர்வு எழுதியோர் 53 மாணவ, மாணவியர்)

இன்ட்ர்நேஷனல் இந்தியன் ஸ்கூல் / புரைதா (100 சதவிகிதம்)

அதிரைப் பையன் இர்ஃபானுத்தீன் 10ஆம் வகுப்பு சிபிஎஸ்சி (Central Board of Secondary Education - CBSE ) தேர்வுகளில் முன்னிலை மாணவனாகத் தேர்ச்சி.

அல்வுரூத் இன்டர்நேஷனல் பள்ளியில் 5 மாணவர்கள் 10 மதிப்பீட்டையும், இப்ராஹீம் மஃபாஸ், நபின், சஞ்சய் ராஜேந்திரன், ஜுவைரிய்யா ஃபாருக்கி, ரம்யா, ஷனா சிதிதீகி, முபர்ரா மன்ஸூர், இர்ஃபானுத்தீன், ஸமீர் அப்துல் ஹமீத், ஷீஸான் அஷ்ரஃப், அலெக்ஸ் ஜெர்ரி ஆகீய 9 மாணவ, மாணவியர் 9+ மதிப்பீட்டையும் தரத்தையும் பெற்றுத் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இதில் இர்ஃபானுத்தீன் எனும் மாணவர் அதிரை புலவர் அஹ்மது பஷீர் ஹாஜியார் அவர்களின் சகோதரர் ஹாஜி முஹம்மது முஹ்யித்தீன் அவர்களின் மகன் ஷஃபீ அஹ்மது (ஜித்தா) அவர்களின் மகன் ஆவார்.

அதிரை ஊர் மக்களுக்குப் பெருமை தேடித்தந்த மாணவர் தம்பி இர்ஃபானுத்தீனுக்கு பாராட்டுக்கள்!

இச்செய்தி சஊதி அரேபியா பத்திரிகையான அரப் நியூஸ் ஆங்கில இதழின் இணையதளத்தில் வெளியிடப்பெற்றுள்ளது

0 comments:

Post a Comment