Showing posts with label thanks to adiraiseithi. Show all posts
Showing posts with label thanks to adiraiseithi. Show all posts

Friday, October 28, 2011

தொடர்மழையால் அதிரையில் பெரும் பாதிப்பு இல்லை!கவலை வேண்டாம்! -adirainews.

சில தினங்களாக அதிரை மற்றும் சுற்றுவட்டாரங்களில் கடும் மழை பேய்ந்து வருகிறது. இதனால் தமிழகத்தில் 10 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கபட்டு உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள பெரும்பாலான ஏரிகள் நிரம்பி வழிகின்றன. கடந்த இரண்டு நாட்களாக பெய்த மழையால் தமிழகத்தில் பெரிய அளவில் சேதாரம் ஏதும் இல்லை. இருப்பினும் தொடர்ந்து கனமழை பெய்யும் வாய்ப்புள்ளதால் அதனால் ஏற்படும் மழை பாதிப்புகளை சமாளிக்க அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். அதேபோல் உள்ளாட்சி நிர்வாகங்களும் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் வங்கக் கடலில் நிலை கொண்டு இருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை அதே இடத்தில் நீடிக்கிறது. இதனால் நாளை வரை தமிழகம், புதுச்சேரியில் கன மழை பெய்யும். குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 13 மாவட்டங்களில் கன மழை பெய்யும்