அணு விபத்து நட்டஈடு ஒப்பந்தத்தில் இந்தியா நேற்று கையெழுத்திட்டது. வியன்னாவில் உள்ள சர்வதேச அணுசக்தி நிறுவன அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் இந்த ஒப்பந்த கையெழுத்தானது.இன்னும் ஒரு வாரத்தில் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா இந்தியா வருவதையொட்டியே இந்த ஒப்பந்தம் அவசர அவசரமாக கையெழுத்திடப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டதை அடுத்து அமெரிக்க நிறுவனங்கள் இந்திய அணுசக்தித் துறையில் முதலீடு செய்ய முன்வரும் என்று தெரிகிறது.மிகவும் சர்ச்சைக்கிடையே நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட அணுசக்தி நட்டஈட்டு சட்ட மசோதா மீது அமெரிக்க அணுசக்தி...