Sunday, October 31, 2010

அமெரிக்கா செல்லவிருந்த விமானத்தில் வெடிகுண்டு பொதிகள்!


அமெரிக்காவுக்கு செல்லவிருந்த யேமென் விமானங்களீல் வெடிகுண்டு பொதிகள் கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. யேமன் நாட்டிலிருந்து இவ்விரு விமானங்களும் புறப்பட்டுள்ளன.
பிரித்தானிய புலனாய்வு பிரிவினரின் எம்.ஐ.6 ற்கு கிடைத்த தகவலை அடுத்து,  பிரித்தானியா, மற்றும் டுபாய் நகரங்களில் நிறுத்தப்பட்ட இவ்விமானங்களில் சோதனையிடப்பட்டது. அப்போது விமானத்தில் இருந்த அச்சிடும் இயந்திரங்களில் (பிரிண்டரில்) உபயோகிப்படும் மைநிரப்பும் காட்ரிஜ்ஜினுள் வெடிகுண்டுகள் பொருத்தப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
மேற்படி வெடிகுண்டுகள், அமெரிக்காவில் உள்ள யூத மத வழிபாட்டு தலங்களை குறி வைத்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. காரணம்  இப்பிரிண்டர் பொதிகளில், சிகாகோவில் இருக்கும் யூத வழிபாட்டு தலங்களின் முகவரியே இடப்பட்டுள்ளது. அல்கொய்தா தீவிரவாதிகள் பலம் பொருந்திய முக்கிய நாடுகளில் ஒன்றாக யேமன் கருதப்படுகிறது.இது தொடர்பில் கருத்துரைத்த பிரிட்டன்  உள்துறை செயலரான தெரெசா மே, இது வெட்க்க வைக்க கூடிய உபகரணம் தானா என நிபுணர்கள்
ஆராய்ந்து வருவதாக தெரிவித்துள்ளனர்.

இந்த பொதிகள் பிடிபட்டதற்கு சவுதி அரேபியா கொடுத்த தகவலே காரணம் என அமெரிக்கா கூறியுள்ளது. பிரிட்டனில் டெய்லி கிராப் செய்தி இணையம் வெளியிட்டுள்ள செய்தியில் யெமனுக்கு பொறுப்பான எம்.ஐ.6 அதிகாரிக்கு இந்த பார்சல்கள் குறித்த தகவல்கள் முதலில் கிடைத்துள்ளதாக குற்ப்பிட்டுள்ளது.

இச்சம்பவத்தை அடுத்து யெமனில் இருந்து அனுப்பபப்டும் ஆட்கள் கூட வராத பொதிகளை தனது வான் வெளியில் அனுமதிக்க போவதில்லை என பிரிட்டன்
அறிவித்துள்ளது.

0 comments:

Post a Comment