Wednesday, October 27, 2010

குஜராத் கலவர வழக்குகளில் தீர்ப்புகளை வெளியிட சுப்ரீம் கோர்ட் அனுமதி

டெல்லி: குஜராத் மாநிலத்தில் 2002ம் ஆண்டு நடந்த கலவரங்கள் தொடர்பான வழக்குகளில் தீர்ப்புகளை அறிவிக்க கீழ் நீதிமன்றங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை இன்று உச்சநீதிமன்றம் விலக்கியது. இதையடுத்து கலவரம் தொடர்பான வழக்குகளில் தீர்ப்புகள் வெளியாகவுள்ளன.

இருப்பினும், முன்னாள் காங்கிரஸ் எம்.பி. ஈசான் ஜாப்ரி கொலை தொடர்புடைய வழக்கில் மட்டும் தீர்ப்பை வெளியிடக் கூடாது என சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது. இந்த வழக்கில்தான் சில மாதங்களுக்கு முன்பு முதல்வர் நரேந்திர மோடியை சிறப்பு புலனாய்வுக் குழு விசாரித்தது நினைனவிருக்கலாம்.

ஜாப்ரி கொலை வழக்கில் இன்னும் விசாரணை நடந்து வருகிறது. எஸ்.ஐ.டி. பலரையும் தொடர்ந்து விசாரித்து வருகிறது. எனவே இதில் மட்டும் தீர்ப்பு அறிவிக்கப்படக் கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது.

நீதிபதிகள் டி.கே.ஜெயின், பி.சதாசிவம், அப்தாப் ஆலம் ஆகியோர் அடங்கிய உச்சநீதிமன்ற பெஞ்ச் இந்த உத்தரவைப் பிறப்பித்தது. கடந்த மே 6ம் தேதி தீர்ப்புகளை வெளியிடுவதற்கு இதே பெஞ்ச் தடை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது

0 comments:

Post a Comment