Wednesday, May 5, 2021

நரேந்திர மோதியின் தொகுதியை சிதைக்கும் கொரோனா: கடுஞ்சினத்தில் மக்கள்



ஹிந்துக்களின் புனித நகரமான வாரணாசி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளும் கொரோனா வைரஸின் இரண்டாவது அலையில் சிக்கி மீள முடியாமல் தவித்து வருகின்றன.

இத்தகைய கடினமான தருணத்தில் தங்களது எம்பியான பிரதமர் நரேந்திர மோதி எங்கே போனார் என்று பலர் ஆவேசமாகக் கேட்கத் தொடங்கியுள்ளனர்.

இரண்டாவது அலையின் தீவிரத்தால் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2 கோடியைக் கடந்துவிட்டது. 2.2 லட்சத்துக்கும் அதிகமானோர் இறந்துவிட்டனர். வாரணாசியில் மருத்துவக் கட்டமைப்பு முடங்கிவிட்டது. மருத்துவமனைகளில் இடமில்லை.

ஆக்சிஜன் கிடையாது. அழைத்தால் ஆம்புலன்ஸ்கள் வருவதில்லை. கொரோனா தொற்று இருக்கிறதா என்று பரிசோதனை செய்யவதற்குக்கூட ஒரு வாரம் காத்திருக்க நேரிடுகிறது. கடந்த 10 நாள்களாக விட்டமின், பாரசிட்டமால் போன்ற அடிப்படையான மருந்துகள் கூட மருந்தகங்களில் கிடைப்பதில்லை.

"ஆக்சிஜனும் படுக்கையும் தேவை என்று வரும் அழைப்புகளை எங்களால் சமாளிக்க முடியவில்லை" என்று பெயர்கூற விரும்பாத மருத்துவப் பணியாளர் ஒருவர் தெரிவித்தார்.

"மிகவும் அடிப்படையான மருந்துகளுக்கே தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதால், காலாவதியான மருந்துகளை மக்கள் உட்கொள்கின்றனர். கேட்டால் பலன் குறைவாக இருந்தாலும் பரவாயில்லை. அதுவாவது கிடைக்கிறதே என்கிறார்கள்" என்று கூறுகிறார் அந்த மருத்துவப் பணியாளர்

வேகமான பரவலுக்கு என்ன காரணம்?

மார்ச் மாதத் தொடக்கத்திலேயே பெருஞ்சிக்கலுக்கான அறிகுறிகள் தென்படத் தொடங்கியதாக நகர மக்கள் கூறுகிறார்கள். டெல்லியிலும் மும்பையிலும் கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்ததால், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் ஏராளமானோர் நெரிசல் மிகுந்த ரயில்களிலும் பேருந்துகளிலும் வாரணாசி மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களுக்குத் திரும்பினார்கள்.

மார்ச் 29-ஆம் தேதி ஹோலி பண்டிகையைக் கொண்டாடுவதற்காக பலர் சொந்த ஊருக்கு வந்தார்கள். மேலும் பலர் நிபுணர்களின் அறிவுரையை மீறி ஏப்ரல் 18-ஆம் தேதி நடத்தப்பட்ட கிராமசபைத் தேர்தலில் வாக்களிப்பதற்காக வந்தார்கள்.

மாநிலம் முழுவதும் நடந்த இந்தத் தேர்தலில் பணியாற்றிய 700 ஆசிரியர்கள் கொரோனா தொற்றால் இறந்து விட்டதாக தகவல்கள் கூறுகின்றன. கொரோனா பரவலுக்கு தேர்தலும் முக்கியக் காரணமாக அமைந்திருக்கிறது.

கொரோனா பரவல் அதிகரித்த சில நாள்களிலேயே வாரணாசியில் உள்ள அனைத்து மருத்துவமனைகளும் நிரம்பிவிட்டன. 25 வயதான ரிஷப் ஜெய்னின் அனுபவம் மிகவும் கடினமானது. கொரோனா தொற்று ஏற்பட்ட தனது 55 வயது அத்தைக்காக நாள்தோறும் 30 கிலோ மீட்டர் தொலைவு பயணம் செய்து, 5 மணி நேரம் காத்திருந்து சிலிண்டரில் ஆக்சிஜன் நிரப்ப வேண்டியிருந்ததாக அவர் கூறுகிறார்.

"80க்கும் கீழே ஆக்சிஜன் அளவு சென்றபோது மிகவும் பயந்தோம். மருத்துவமனைகளில் படுக்கை எதுவும் கிடைக்கவில்லை. ஆக்சிஜன் சிலிண்டர் கேட்டு பல இடங்களுக்கு தொலைபேசியில் அழைத்தோம். 12 - 13 மணி நேரமாக 25 தொலைபேசி எண்களுக்குப் பேசியும் பலன் கிடைக்கவில்லை. கடைசியில் சமூக வலைதளம் மூலம் மாவட்ட நிர்வாகத்தின் உதவியுடன் ஆக்சிஜன் சிலிண்டர் கிடைத்தது. இப்போது அவர் படிப்படியாகக் குணமடைந்து வருகிறார்"

நகரில் நிலைமை மோசமடைவதை அறிந்த அலகாபாத் உயர் நீதிமன்றம், வாரணாசி உள்ளிட்ட மாநிலத்தின் 4 நகரங்களை ஒரு வாரத்துக்கு முடக்குமாறு உத்தரவிட்டது. "நமது மருத்துவக் கட்டமைப்பை கொரோனா சிதைத்துவிட்டது" என நீதிமன்றம் கூறியது. ஆனால் மாநில அரசு கேட்டவில்லை. உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. "மக்களின் உயிரையும் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க வேண்டியது தங்களது பொறுப்பு," என்று வாதிட்டது.

ஆனால் சொன்னபடி மாநில அரசு எதையும் பாதுகாக்கவில்லை என்று விமர்சகர்கள் இப்போது கூறுகிறார்கள். மாவட்ட நிர்வாகம் வார இறுதி முடக்கத்தை அமல்படுத்த, அச்சம் காரணமாக ஏராளமான கடைகளும் நிறுவனங்களும் அடைக்கப்பட்டிருப்பதால் ஆயிரக்கணக்கானோர் தங்களது வாழ்வாதாரத்தை இழந்துவிட்டனர். கொரோனா இன்னும் வேகமாகப் பரவிக் கொண்டிருக்கிறது.

புள்ளி விவரங்கள் மீதான சந்தேகம்

வாரணாசியில் இதுவரை 70,612 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாகவும், 690 பேர் இறந்துவிட்டதாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் ஏப்ரல் 1-ஆம் தேதிக்குப் பிறகு மட்டும் பதிவு செய்யப்பட்ட எண்ணிக்கை 46,280. உயிரிழப்புகளைப் பொறுத்தவரை நாள்தோறும் 10 -11 ஆகிய எண்களைச் சுற்றியே அரசு ஆணவங்களில் பதிவு செய்யப்படுகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று இறந்தவர்கள் எண்ணிக்கை 16 என்கிறது அரசு. ஆனால் நான் பேசிய ஒவ்வொருவரும் இது போலியானது என்று மறுக்கிறார்கள்.

வாரணாசியின் கங்கைக் கரையில் இருக்கும் ஹரீஷ்சந்திரா மற்றும் மணிகர்ணிகா ஆகிய இரு முக்கிய மயானங்களிலும் கடந்த ஒரு மாதமாக சிதைகள் எப்போதும் எரிந்து கொண்டிருப்பதாக அப்பகுதியில் நீண்ட காலம் வசிக்கும் ஒருவர் கூறுகிறார்.

முன்பெல்லாம் இந்த இரு மயானங்களிலும் 80 முதல் 90 உடல்கள் எரிக்கப்படும் என்று கூறும் அவர், இப்போத 300 முதல் 400 உடல்கள் எரிக்கப்படுவதாகத் தெரிவிக்கிறார்.

"இந்த அதிகரிப்புக்கு என்ன காரணம் கூறுவீர்கள்? பெரும்பாலானோர் இதய-நுரையீரல் செயலிழப்பு காரணமாக இறந்துவிட்டதாக அறிக்கைகள் கூறுகின்றன. ஆனால் நலமாக இருக்கும் இளைஞர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு இறப்பது ஏன்" என்று கேட்கிறார் அவர்.

குறுகிய சந்தின் இரு புறங்களிலும் சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவுக்கு உடல்கள் வரிசையாக வைக்கப்பட்டிருந்த காணொளியை வாரணாசியைச் சேர்ந்த ஒருவர் அண்மையில் பகிர்ந்திருந்தார். 10 நாள்களுக்கு முன்பு புதிதாக இரு மயானங்கள் அமைக்கப்பட்டன. ஆனாலும் இரவும் பகலும் அவை இயங்க வேண்டியிருக்கிறது.

கிராமங்களுக்கும் பரவும் தொற்று

இந்தச் சோகம் வாரணாசி நகரத்துடன் நிற்கவில்லை. சிறு நகரங்கள், தூரக் கிராமங்களிலும் தொற்று பரவியிருக்கிறது. சிராய்காவோன் என்று 110 கிராமங்களைக் கொண்ட ஒன்றியத்தின் தலைவரான சுதீர் சிங் பாப்பு பிபிசிடம் பேசினார்.

ஒவ்வொரு கிராமத்திலும் நாள்தோறும் 5 முதல் 10 பேர் இறப்பதாகக் கூறிய அவர் சில கிராமங்களில் 15 முதல் 30 பேர் வரை உயிரிழப்பதாக அவர் தெரிவித்தார்.

"இந்த ஒன்றியத்தில் மருத்துவமனைகளில் இடமே இல்லை. ஆக்சிஜன் கிடையாது. மருந்துகளும் இல்லை. அரசு மருத்துவமனைகள் நிரம்பிவிட்டன.. தனியார் மருத்துவமனைகள் நோயாளியைப் பார்ப்பதற்கு முன்னரே 2 லட்சம் முதல் 5 லட்சம் ரூபாய் வரை முன்தொகை கேட்கின்றனர். நாங்கள் போக இடமில்லை"

நகரத்தைவிட தங்களது கிராமத்தில் நிலைமை மோசமாக இருப்பதாகக் கூறுகிறார் அய்தே என்ற கிராமத்தில் வசிக்கும் கமல் காந்த் பாண்டே என்பவர். "எங்களது கிராமத்தில் அனைவருக்கும் பரிசோதனை செய்தால், பாதி பேருக்கு தொற்று இருக்கும். ஏராளமானோருக்கு இருமல், காய்ச்சல், உடல் வலி, மணம்-சுவை அற்றுப்போதல் போன்ற அறிகுறிகள் இருக்கின்றன" என்கிறார் அவர்.

அய்தே கிராமத்தில் இறந்துபோவோர் கணக்கிலேயே எடுத்துக் கொள்ளப்படுவதில்லை. ஏனென்றால் இங்கு பரிசோதனைகளே நடப்பதில்லையே என்கிறார் பாண்டே.

"இது பிரதமரின் தொகுதி. அப்படியிருந்தும் எங்களால் மூச்சு விடமுடியவில்லை"

"மோதி தலைமறைவு"

கங்கை நதியுடனும் வாரணாசியுடனும் அங்கு வாழும் மக்களுடன் தனக்கு சிறந்த பிணைப்பு இருப்பதாகக் கூறுபவர் பிரதமர் மோதி. ஆனால் கொரோனா வைரஸ் நகரை அழித்து, மருத்துவக் கட்டமைப்புகளை முடக்கியிருக்கும் நிலையில் தொகுதிப் பக்கம் அவர் வரவே இல்லை.

தங்களுடைய எம்.பி. தேர்தல் பரப்புரைக்காக பிப்ரவரி முதல் ஏப்ரல் வரை 17 முறை மேற்கு வங்கத்துக்குச் சென்று வந்ததை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

கிராமப்புறத் தேர்தல்கள் நடப்பதற்கு ஒரு நாள் முன்னதாக வாரணாசியின் நிலைமை குறித்து பிரதமர் மோதி தலைமையில் நடந்த ஆய்வுக் கூட்டும் வெறும் கண்துடைப்பு என்று கோபமாகக் கூறுகிறார் ஒரு உணவக உரிமையாளர்.

வாரணாசி மக்கள் எப்படியாவது போகட்டும் என்று விட்டுவிட்டு பிரதமரும் முதல்வரும் ஒளிந்துகொண்டார்கள் என்கிறார் அவர். "உள்ளூர் பாஜக தலைவர்களும் வரவில்லை. தொலைபேசியை அணைத்து வைத்திருக்கிறார்கள். மருத்துவமனை, ஆக்சிஜன் சிலிண்டர் என பல்வேறு வகையிலும் அவர்கள் உதவ வேண்டிய நேரம் இது. ஆனால் நிர்வாகம் சீர்குலைந்து கிடக்கிறது. மக்கள் கடும் சினத்துடன் இருக்கிறார்கள்" என்றார் அந்த உணவக உரிமையாளர்.

இதற்கு பிரதமரைத் தவிர வேறு யாரும் காரணமில்லை என்கிறார் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கௌரவ் கபூர்.

"அவர்தான் பொறுப்பு. கடந்த ஒரு மாத காலமாக வாரணாசியிலும் நாட்டின் பிற பகுதிகளிலும் நிகழ்ந்திருக்கும் ஒவ்வொரு மரணத்துக்கும் அவர்தான் பொறுப்பு" என்றார் கபூர்

நகரத்தில் வசிக்கும் பிறரைப் போல கபூரும் கொரோனாவால் நிறைய இழந்திருக்கிறார். இரு வாரங்களுக்கு முன்பு அவரது அத்தை, மாமா இறந்துவிட்டனர். இப்போது நண்பரின் சகோதரர் மருத்துவமனையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறார். நான் பேட்டிக்காக தொலைபேசியில் அவரை அழைத்தபோது கொரோனா தொற்று ஏற்பட்டு வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டிருந்தார்.

தொற்று பரவி எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியபோது, படுக்கை கேட்டும், ஆம்புலன்ஸ் கோரியும் கணக்கிலடங்கா அழைப்புகள் வந்ததாகக் கூறுகிறார் கபூர்.

"இப்போது மக்கள் புரிந்து கொண்டார்கள். ஆக்சிஜன் சிலிண்டர்கள் கேட்டு அழைப்புகள் வருகின்றன"

அனைத்து வகையிலும் வாரணாசியின் நிலைமை மோசமடைந்திருக்கிறது. மீள்வதற்கு முன் இன்னும் மோசமடையும் என்றே தோன்றுகிறது. புறநகரங்களிலும் கிராமப்புறங்களிலும் பொருள்களுக்கு தட்ப்பாடு ஏற்பட்டிருக்கிறது. இது மிக மோசம்.

"தங்களிடம் ஆக்சிஜன் அளவைச் சோதிக்கும் ஆக்சிமீட்டர்கள்கூட இல்லை என பல மருத்துவர்கள் என்னிடம் தெரிவித்தனர். அதனால் ஆக்சிஜன் அளவு குறைவது தெரியாமல் தூக்கத்திலேயே நோயாளிகள் இறந்துவிடுகின்றனர்" என்று பரிசோதனை மையம் ஒன்றின் உரிமையாளர் கூறினார்.

"எனது மனைவிக்கும் குழந்தைக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டபோது மருத்துவரை தொலைபேசியில் அழைத்து அவர் கூறிய அறிவுரைகளைக் கேட்டுச் செயல்பட்டேன். ஆனால் கிராமத்தில் கல்வியறிவற்றவர்களால் என்ன செய்ய முடியும்? அவர்கள் எப்படி வாழ்வார்கள் என உங்களுக்கே தெரியும். கடவுளின் கருணையில்தான் அவர்கள் வாழ்கிறார்கள்.."

ஆக்சிஜனுக்கு மக்கள் தவிக்கும்போது ரூ.13ஆயிரம் கோடி விஸ்டா திட்டம் தேவையா! பிரியங்கா காந்தி ஆவேசம்!

 

டெல்லி: நாடே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, ஆக்சிஜனுக்காக அல்லல்பட்டுக்கொண்டிருக்கையில், ரூ.13ஆயிரம் கோடியில் விஸ்டா திட்டம் தேவையா என காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ஆவேசமாக கேள்வி எழுப்பி உள்ளார்.

நாடு முழுவதும் கொரோனாவின் 2வது அலையின் தாக்கம் வீறுகொண்டு பரவி வருகிறது. இதனால், கொரோனா நோயாளிகள் ஆக்சிஜ்ன் மற்றும் மருந்து பற்றாக்குறையால் உயிரிழந்து வருகின்றனர் கொரோனா பரவலை தடுக்க பல மாநிலங்களில் பொதுமுடக்கம், பகுதி நேர முடக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதனால் மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி வருகிறது. இந்த நிலையில், மத்திய அரசு புதிய பாராளுமன்ற கட்டிடம் மற்றும் பிரதமர் மற்றும் எம்.பி.க்களுக்கான வீடுகள் விஸ்டா திட்டம் என்ற பெயரில் கட்டி வருகிறது. இது சர்ச்சையாகி உள்ளது.

நாட்டில் மக்கள் சுவாசிக்க ஆக்சிஜன் இல்லாத நிலையில் மத்திய அரசு சென்ட்ரல் விஸ்டா திட்டத்தை நிறுத்த வேண்டும் என காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில், ஆக்ஸிஜன், தடுப்பூசிகள், மருத்துவமனை படுக்கைகள், மருந்துகள் பற்றாக்குறையால் நாட்டு மக்கள் தவித்துக் கொண்டிருக்கும்போது, மத்திய அரசு ரூ.13 ஆயிரம் கோடி மதிப்பிலான சென்ட்ரல் விஸ்டா திட்டத்தை நிறுத்திவிட்டு அந்தத் தொகையை கொரோனா செலவினங்களுக்குப் பயன்படுத்த வேண்டும்.

புதிய நாடாளுமன்றக் கட்டுமான திட்டம் போன்றவை மத்திய அரசின் முன்னுரிமை எவற்றில் உள்ளது என்பதைக் காட்டுகிறது என பிரியங்கா காந்தி சாடியுள்ளார்.

மோடி அரசின் லட்சிய திட்டமான மத்திய விஸ்டா திட்டத்தன் கீழ் பிரதமரின் வீடு உள்பட பல்வேறு கட்டிடங்கள் கட்டுப்பட்டு வருகிறது. இந்த லட்சிய திட்டம் 2022 டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும் வகையில் விறுவிறுப்பாக பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் மொத்த செலவு ரூ .13,450 கோடி என மதிப்பிடப்பட்டுஉள்ளது.

சிங்கப்பூரிலிருந்து மருத்துவ உபகரணங்களுடன் கிளம்பியது இந்திய கடற்படையில் கப்பல்

 நாடு முழுவதும் கரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வரும் நிலையில் சிங்கப்பூரிலிருந்து மருத்துவ உபகரணங்களுடன் இந்திய கடற்படையின் கப்பல் கிளம்பியுள்ளது.

இந்தியாவில் நாள்தோறும் 4 லட்சம் பேர் வரை கரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும், 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி வருகின்றனர்.

இதனால் நாட்டில் பல மாநிலங்களில் ஆக்ஸிஜன், கரோனா சிகிச்சைக்கு தேவையான மருந்துகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து பல நாடுகளிலிருந்து இந்தியாவுக்கு மருத்துவ உதவிகள் வழங்கி வருகின்றனர்.

அந்த வகையில் சிங்கப்பூரிலிருந்து 3,650 ஆக்ஸிஜன் சிலிண்டர்கள், 8 ஆக்ஸிஜன் டேங்குகள் மற்றும் பல மருத்துவ உபகரணங்களுடன் இந்திய கடற்படையின் ஐ.என்.எஸ். ஐராவத் கப்பல் கிளம்பியுள்ளது.





தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் கண்காணிப்பு குழு ஆய்வு..!

 தூத்துக்குடி ஆட்சியர் செந்தில் ராஜ் தலைமையிலான குழு ஆலையின் மெட்டீரியல் கேட் வழியாக ஆய்வு மேற்கொண்டனர்.

தூத்துக்குடியில் மூடப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய அனுமதி கோரி வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. அப்போது, மத்திய அரசு வழக்கறிஞர் ஆக்சிஜன் உற்பத்திக்காக அனுமதிக்கலாம் என கூறியிருந்தார். இதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்தது.

இதைதொடர்ந்து, ஆக்ஸிஜன் தயாரிக்க ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசே ஏற்று நடத்தலாம் என்று உச்சநீதிமன்றம் யோசனை வழங்கியது. இதனைதொடர்ந்து, அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஆக்சிஜன் உற்பத்திக்காக மட்டும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தற்காலிக 4 மாதங்களுக்கு மட்டும் தமிழக அரசு அனுமதி வழங்கியது.

அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு எடுத்து 5 தீர்மானங்கள் குறித்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் பத்திர தாக்கல் செய்தது. இதைத்தொடர்ந்து, ஆக்சிஜன் தயாரிக்க ஆலையை திறக்க வேந்தாந்தா நிறுவனத்திற்கு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியது. பின்னர், ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தியை கண்காணிக்க 5 பேர் கொண்ட நிபுணர் குழு அமைக்கப்பட்டது.

இந்நிலையில், தூத்துக்குடி ஆட்சியர் செந்தில் ராஜ் தலைமையிலான குழு ஆலையின் மெட்டீரியல் கேட் வழியாக ஆய்வு மேற்கொண்டனர். எஸ்.பி.ஜெயக்குமார், உதவி பேராசிரியர் கனகவேல், ஓய்வு பெற்ற அதிகாரி அமர்நாத், தூத்துக்குடி அனல்மின் நிலைய அதிகாரி பெல்லார்மின் உள்ளிட்டோர் கொண்ட குழு ஆய்வு செய்கின்றனர்.



திருச்சியில் தீ விபத்து; ஒரு கடை முற்றிலும் எரிந்து நாசம்- 2 கடைகளில் சேதம்

 திருச்சி ஒத்தக்கடை பகுதியில் உள்ள வாகன உதிரிபாக விற்பனைக் கடையில், இன்று காலை தீ விபத்து ஏற்பட்டது. இதில், அந்தக் கடை முற்றிலும் எரிந்து நாசமானது. மேலும், அந்தக் கடை அருகே இருந்த மேலும் 2 கடைகளிலும் சேதம் ஏற்பட்டது.

திருச்சி ஒத்தக்கடை பகுதியில் பாரதிதாசன் சாலையில் வாகன உதிரிபாக விற்பனைக் கடை உள்ளது. கார்களுக்கான துணைக் கருவிகள் விற்கும் இந்தக் கடையில் இன்று காலை சுமார் 5.30 மணியளவில் கரும் புகை வெளியேறியது.

இதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் திருச்சி தீயணைப்பு நிலையத்துக்குத் தகவல் அளித்தனர். தீயணைப்பு வீரர்கள் வருவதற்குள் மளமளவெனத் தீ கடை முழுவதும் பரவிவிட்டது. மேலும், அருகில் உள்ள பேக்கரி, ஆட்டோமொபைல் கடையிலும் தீப்பற்றியது. இந்தத் தீ விபத்தால் அந்தப் பகுதியே கரும் புகை மண்டலமாக மாறியது.

தகவலறிந்து வந்த திருச்சி தீயணைப்பு நிலைய வீரர்கள், போராடித் தீயை அணைத்தனர். தீ விபத்தில் வாகன உதிரிபாக விற்பனைக் கடையில் இருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சாம்பலாகின. மேலும், பேக்கரி மற்றும் ஆட்டோமொபைல் கடைகளிலும் தீ விபத்தால் சேதம் ஏற்பட்டது.

மின்கசிவால் இந்தத் தீ விபத்து நேரிட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து கன்டோன்மென்ட் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.




Tuesday, April 20, 2021

தடுப்பூசி என்பது ஒரு மாயை

 


Friday, April 16, 2021

வெளிநாட்டு வாழ்க்கை பற்றி ஒரு சிறிய கட்டுரை.

 உழைக்க வேண்டிய வயசு இதுதான் என்று விமானம் ஏறி வந்தோம். வாழ வேண்டிய

வயதும் இதுதான் என்பதை மறந்து.
வெளிநாடு என்பது ஒரு வினோதமான சிறைச்சாலை அதில் இருப்பவன் வெளியே
வர துடிக்கிறான்...!!!
வெளியே இருப்பவன் உள்ளே வர துடிக்கிறான். வெளிநாட்டில் சம்பாதிக்கும்
குடும்பங்களே ஆடம்பரத்தை குறைத்துக் கொள்ளுங்கள் நீங்கள் செலவு செய்வது
பணம் அல்ல. சம்பாதிப்பவரின் வயதை.
என்னை வளர்த்த பெற்றோரின் கடைசி காலத்திலும் இல்லாமல். நான் பெத்த பிள்ளை வளரும் தருணத்திலும் அருகில்
இல்லாமல்...!!!
என்ன வாழ்க்கை இது. வெளிநாட்டு வாழ்க்கை ஒரு மெழுகுவர்த்தி போல தான்.
தூரத்தில் இருந்து பார்த்தால் ஒளி மட்டும் தெரியும் அருகில் சென்று பாருங்கள் அவர்கள் உருகி கண்ணீர் வடிப்பது தெரியும்.
ஓடி ஓடி உழைத்தாலும். கையும் காலும் விறைத்தாலும் அன்பாக பேச யாருமில்லை.
காசு என்பது நிற்கவில்லை. கடன் தொல்லை தீரவில்லை. சொன்னாலும் யாரும்
நம்பவில்லை...!!!
உழைக்க வேண்டிய வயது என விமானம் ஏறி வந்து. வாழ வேண்டிய வயதை தொலைத்து நிற்பதே இந்த வெளிநாட்டு வாழ்க்கை. உலகில் உள்ள வேதனைகளின் மொத்த உருவம் தான் இந்த வெளிநாட்டு வாழ்க்கை. பிறந்த குழந்தைக்கு ஒரு வயது ஆன பின்னும் அப்பாவை பார் என்று அறிமுகம் செய்யும் அவலம் எங்களுக்கு மட்டும் தான்...!!!
வெளிநாட்டு வாழ்க்கை தலையணையை சரி செய்து சுகமாய் தூங்கிய நாட்களை விட.
சோகம் நிறைந்த அசதியில் தூங்கிய நாட்கள் தான் அதிகம். வாழ்க்கை எனும் பயணத்தில் வேலை தேடி வெளிநாடு
செல்லும். நமக்கு நெருக்கமானவர்களின் பயணம் நம் கல் மனதையும் கரையைச் செய்கின்றது. யாரும் இல்லாமல் கூட
நிம்மதியாக வாழ்ந்து விடலாம். ஆனால் எல்லோரும் இருந்தும் அனாதையாக வாழ்வதே கொடுமை நிறைந்த வாழ்க்கை...!!!
உனக்கென்ன விமானப்பயணம் வெளிநாட்டு ராஜ வாழ்க்கை. என்று ஊருக்கு போனதும் உள்ளூர் வாசிகள் எங்களை
பார்த்து விடும் பெருமூச்சு. வளைகுடா நாட்டின் அரபு நாட்டு வெப்பத்தை விட
சற்று அதிகமாகவே சுடுகிறது. கல்யாணம் முடிந்த பிறகு விடுமுறை முடிந்து. வெளிநாடு போகும் தருணம் என் கருவை சுமக்கும்
மனைவியையும் சேர்த்து. என் நெஞ்சில் சுமந்து கொண்டு தான் விமானம் ஏறுகின்றேன்...!!!
வறுமைக்காக அயல்நாடு சென்று
பணத்தை சேமிப்பதும். விடு முறைக்கு தாய் நாடு வந்து நினைவுகளை சேமிப்பதுமே
வெளிநாட்டு வாழ்க்கை. உள்நாட்டில் அடுப்பு எரிய வெளிநாட்டில் விறகாய் எரியும்
வாழ்க்கை. இதுதான் வெளிநாட்டு வாழ்க்கை. விசாவிற்கு பணத்தைக் கட்டி.
காதலுக்கு சமாதி கட்டி. இளமைக்கு பூட்டு போட்டு. தொடர்கிறது வெளிநாட்டு
பயணம்...!!!
டாலருக்கும் ரியாலுக்கும் வாழ்க்கையை அடகு வைத்துவிட்டு. மீட்க முடியாமல் நீரிலேயே மூழ்கிக் கிடக்கும் மீன் குஞ்சுகள் நாங்கள். பண்டிகை நாட்களில் குடும்பத்தோடு குதூகளிக்க முடியாமல்
தங்களின் வாழ்த்துக்களை மனம் முழுக்க சோகத்தோடு. கைப்பேசியில் கூக்குரலிட்டு கொஞ்சி மகிழ நேரில் இல்லாத காற்றலைகள் நாங்கள்...!!!
இங்கே கண்ணே கனியமுதே என்றெல்லாம் தன் பெற்றக்குழந்தையை. நெஞ்சுருகக் கட்டித்தழுவ முடியாதொரு துர்பாக்கியசாலிகள் நாங்கள். கணிப்பொறியிலும் கைப்பேசியிலும் சொந்த பந்தங்களின் குரல் கேட்டு கேட்டு. எங்கள் பாசம் கூட இங்கு கமர்ஷியல் ஆகிப்போனது தொலைதூர பாசம் செய்தே. காட்டியே தொலைந்து போனவர்கள் நாங்கள்...!!!
நான் இங்கே நல்லா இருக்கேன் என்று. எப்போதும் சொல்லும் இயற்கை நிலை குரலுக்கு சொந்தக்காரர்கள் நாங்கள்.
வியர்வையில் நாங்கள் உழன்றாலும் விடுமுறைக்கு போகும்முன் வாசனைப்பூச்சு வாங்க மறப்பதில்லை நாங்கள். எங்கள் வியர்வையின் வாசம் வீட்டில் உள்ளோர் அறியாமல் இருக்க...!!!
கணிப்பொறிக்குள் அகப்பட்டுக்கொண்ட எலிகள். நாங்கள் கலப்பை பிடிக்கவில்லை ஆனால் நாங்களும் களைத்துத்தான் போகிறோம். எண்ணெய் கிணற்று தவளைகள் நாங்கள். வாயுக்குழாயில் சிக்கிக்கொண்ட வாயில்லா பூச்சிகள் நாங்கள். திரைகடலோடி திரவியம் தேடும் திசைமாறிய பறவைகள் நாங்கள்...!!!
உனக்கென்ன விமானப்பயணம் வெளிநாட்டு ராஜ வாழ்க்கை. என்று ஊருக்கு போனதும் உள்ளூர் வாசிகள் விடும் பெருமூச்சு. வளைகுடா நாட்டின் அரபி நாட்டு வெப்பத்தை விட சற்று அதிகமாகவே சுடுகிறது. ஆரம்பத்தில் முதலீடில்லா தொழில் இது என்று பெருமிதப்பட்டோம். எங்களுக்கே தெரியாமல் எங்கள் இளமையை அல்லவா முதலீடு...!!!
செய்திருக்கின்றோம் இப்போதுதான் புரியத்துவங்கியது சேர்ந்தே நரைக்கவும் துவங்கியது. நாங்கள் முதலீடு செய்தது எங்கள் வாழ்க்கையை வாலிபத்தை.
இழப்பீடு கிடைக்காத இழப்பு இது நஷ்ட்டஈடு கிடைக்காத நஷ்ட்டம் இது...!!!
யாருக்காக...? எதற்காக...? ஏன்...?
தந்தையின் கடன், தங்கையின் திருமணம், தம்பியின் படிப்பு, சொந்தமாய் வீடு குழந்தையின் எதிர்காலம், குடும்பச்சுமை
இப்படி காரணம் ஆயிரம் தோரணம்போல் கண் முன்னே. மனைவியின் கண்சிமிட்டல்/சினுங்கள், அம்மாவின் அரவணைப்பு,
அப்பாவின் அன்பு, குழந்தையின் மழலை, நண்பர்களுடன் அரட்டை இப்படி எத்தனையோ இழந்தோம்...!!!
எல்லாவற்றையும் இழந்த நாங்கள் இன்னும் இங்கே ஏன் இருக்கின்றோம். இழப்பதற்கு ஒன்றுமில்லை என்பதாலா...?
இல்லை இழப்பிலும் சுகம் கண்டு கொண்டதாலா...? சொந்த மண்ணில்
சொந்தங்களோடு சோறு திண்பவன்
யாரடா...? இருந்தால் அவனே
சொர்க்கம் கண்டவனடா...?

இன்றைய கோழி கறி வித்யாசம் விலை பட்டியல் அதிரைக்கும் & பட்டுக்கோட்டைக்கும் ???

     நமது ஊரில் வாழும் மக்களின் 80% பேர் வெளிநாடு கம்பெனியில் வேலை பார்த்து பணம் சம்பாத்தியம் செய்து வருகிறார்கள். ஆனால் கடந்தவருடம் முதல் கொரோன காரணமாக சம்பளம் சரியாக பல நபர்களுக்கு கிடைக்கவில்லை. கடந்த வருடம் முதல் கொரோனவை காரணம் காட்டி தற்போது வரை ஒரு சில வியாபாரிகள் அன்றாட வீட்டுக்கு தேவையான உணவு பொருட்களின் விலையை அதிக லாபம் பெரும் நோக்கத்தில் அதிக விலைக்கு விற்பனை செய்து வருகிறார்கள். ஆனால் நமது அருகாமையில் உள்ள பட்டுக்கோட்டை, மதுக்கூர், முத்துப்பேட்டை ஆகிய ஊர்களில்   விற்கும் விலையைவிட நமதூரில் பல மடங்கு விற்பனை ஏன் ?  இப்படிபட்ட வியாபாரிகளை தயவு கூர்ந்து வணிக சங்கமும் மற்றும் நுகர்வோர் நீதிமன்றமும் தக்க நடவடிக்கை எடுக்குமாறு அதிரை மக்களின் கோரிக்கையாக இருக்கிறது.

இன்றைய கோழி விலை பட்டியல் அதிரை & பட்டுக்கோட்டை ?

அதிரையில் கோழி விலை இன்று :

கோழி கறி விலை 1kg : 260/- முதல் 280/- வரை 


பட்டுக்கோட்டையில் 

கோழி கறி விலை இன்று 1kg : 200/- முதல் 220/-வரை. 

இது ஒரு எடுத்துக்காட்டு மட்டும். இதை போல் பல உணவு பொருட்களின் விலை வித்யாசம் ஏற்படுகிறது. நமது ஊர் மக்களின் நலன் கருதி இந்த பதிவு.

Daily Rates link : https://rates.goldenchennai.com/chicken-price/pattukkottai-chicken-price-today/





Wednesday, April 14, 2021

முஸ்லிம் லீக்கின் வேட்பாளராக டாக்டர் அம்பேத்கர்!

 



1946ம் ஆண்டு சுதந்திரத்திற்கு முன்பாக நடைபெற்ற அரசியல் நிர்ணய சபை தேர்தலில் பம்பாயில் இருந்த பாபா சாகேப் டாக்டர் அம்பேத்கர் அவர்களை காங்கிரஸ் கட்சி கைவிடாது, அரசியல் நிர்ணய சபை உறுப்பினர் ஆவதற்கு நிச்சயம் வாய்ப்பு அளிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் உறுப்பினர் தேர்விற்கான பட்டியலில் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் பெயர் (அன்றைக்கு இருந்த சனாதன சக்திகளின் சூழ்ச்சியால்) காங்கிரஸ் பட்டியலில் இடம் பெறவில்லை. அவரை காங்கிரஸ் கண்டு கொள்ளவில்லை என்ற செய்தி காங்கிரஸ் வெளியிட்ட வேட்பாளர் பட்டியலில் இருந்து தான் தெரியவந்தது.
இந்த செய்தி அறிந்த முஸ்லிம் லீக் தலைவர்கள் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் அறிவும் ஆற்றலும் நாட்டுக்கு பயன்பட வேண்டும் என்ற நன்னோக்கில் வங்காளத்திற்கு அழைத்து முஸ்லிம் லீக்கிற்கான ஒதுக்கீட்டில் முஸ்லிம் லீக்கின் வேட்பாளராக அறிவித்து, வெற்றிப் பெறச் செய்து அண்ணல் அம்பேத்கர் அவர்களை அரசியல் நிர்ணய சபை உறுப்பினர் ஆக்கினர் என்பது மறுக்கவோ, மறைக்கவோ முடியாத வரலாறு.
ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, சிறுபான்மை உள்ளிட்ட சமூக மக்களுக்காக போராடிய அண்ணலை கொண்டாடும் நாம் நெஞ்சத்தில் பதிந்து வைக்க வேண்டிய மிக முக்கியமான வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வு ஆகும் அது.
-ஏப்ரல் 14, அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்த தினம்.

முடிவுறுமா? தொடருமா?




கொரோனா இரண்டாம் அலை மிக வேகமாகப் பரவி வருவதாகச் சொல்லப்படுகிறது. முதன் முதலில் கொரோனா விமானத்தில் வந்தது. அப்போது விமானப் பயணிகள் காரணமாகவே கொரோனா பரவியதாகச் செசால்லப்பட்டது. இப்போது அதன் இரண்டாம் அலை என்று பரவலாகச் சொல்லப்படுகிறது. சரி, இந்த இரண்டாம் அலையோடு முடிந்துவிடுமா என்றால், முடியாது என்பதுதான் பதில்.
அடுத்து மூன்றாம் அலை, நான்காம் அலை எனத் தொடரும் என்றுதான் தெரிகிறது. ஏனென்றால் மக்களைச் சுதந்திரமாக வாழவிடுவதைவிடப் பயத்தோடு வாழ வைப்பதுதான் ஆட்சியாளர்களுக்கு வசதியாக இருக்கிறது. எப்படி வேண்டுமானாலும் ஆட்சி செய்யலாம். எதிர்த்துக் கேட்க ஆள் இருக்காது. போராட்டங்களே இல்லாமல் செய்துவிடலாம். பிடிக்காதவர்களை கொரோனா பெயரைச் சொல்லி சமாதி கட்டிவிடலாம்.
யூதர்களின் திட்டம் என்னவென்றால், தஜ்ஜாலை வரவேற்க இவ்வுலகைத் தயார் செய்வதே ஆகும். அதற்கு மக்கள் ஒருவருக்கொருவர் வெறுத்தொதுக்கும் நிலையை உருவாக்குதல், வாயையும் மூக்கையும் மறைக்கச் செய்தல், ஒருவருக்கொருவர் ஒட்டாதவாறு இடைவெளியை ஏற்படுத்துதல் ஆகியவற்றைச் செய்தல்.
இதையெல்லாம் எப்படிச் செய்வது? அதற்காக உருவாக்கப்பட்டதுதான் இந்த கொரோனா. அதாவது பயத்தை ஏற்படுத்திவிட்டால் மக்கள் ஒருவருக்கொருவர் வெறுக்கத் தொடங்கிவிடுவார்கள். அதனால்தான் இப்போது யாரும் யார் வீட்டிற்கும் செல்ல விரும்புவதில்லை. யாராவது வருவதாகச் சொன்னாலும் கொரோனாவைக் காரணம் காட்டி, வரவேண்டாம் என்று சொல்லிவிடுகிறார்கள்.
கூட்டமாக இருப்பதை ஷைத்தான் விரும்புவதில்லை. அதனால்தான் சமூக இடைவெளி அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்விடத்தில் நபிமொழி ஒன்றை நினைவூட்டுகிறேன். “நீங்கள் சமுதாயக் கூட்டமைப்புடன் சேர்ந்திருங்கள். பிரிந்துவிட வேண்டாம் என நான் உங்களை எச்சரிக்கிறேன். ஏனெனில் ஷைத்தான் (பிரிந்து வாழும்) தனிமனிதனுடன்தான் இருக்கிறான். அவன் (இணைந்திருக்கும்) இருவரைவிட்டுத் தொலைவில் சென்றுவிடுவான்...” (திர்மிதீ: 2091)
இப்போது புரிகிறதா? மனிதர்கள் கூட்டம் கூட்டமாக இருப்பதை ஷைத்தான் விரும்புவதில்லை. அவர்கள் தனித்தனியாக இருப்பதையே விரும்புகிறான். அதை செல்ஃபோன் மூலம் ஏற்கெனவே அவன் செய்துவிட்டான். இருப்பினும் பயத்தை அள்ளிப்போட்டால் இன்னும் கொஞ்சம் அதிகமாகப் பிரிந்துகிடப்பார்கள். அதுதான் அவனது எண்ணம்.
காலம் செல்லச் செல்ல அதைவிட மோசமான காலம்தான் வருமே தவிர வசந்த காலம் திரும்ப வராது. அதனால் இப்போது நாம் வாழும் காலமே நம்மைப் பொருத்த வரை பொற்காலம். இனி வரும் காலமெல்லாம் இதைவிட மோசமாகவே இருக்கும். அதுவெல்லாம் வறண்ட காலம்.
கொரோனா என்பது நோயல்ல. அது ஒரு பேரச்சம். அந்த அச்சம் யாருடைய மனதிற்குள் புகுந்துகொண்டதோ அவரெல்லாம் அதற்கு இரையாகிவிடுவார். யார் அல்லாஹ்வுக்கு மட்டும் அஞ்சி, மற்ற எதைக் கண்டும் அஞ்சாமல், எது வந்தபோதிலும் “அல்லாஹ் எங்களுக்கு விதித்ததைத் தவிர வேறொன்றும் எங்களைத் தீண்டாது” என்று உரக்கச் சொல்கிறாரோ அவரை எதுவும் தீண்டாது. அவர் நிம்மதியாக வாழ்வார்.
ஐவேளை தொழுகையைக் கடைப்பிடிப்போம்.
அல்லாஹ்வையே அஞ்சுவோம்.
எல்லா நிலைகளிலும் நிம்மதியாக வாழ்வோம்.

நோன்பை முறிக்கும் காரியங்கள் விஷயங்கள் யாவை.?




01) நோன்பை முறிக்கும் விஷயங்கள்:
உடலுறவில் ஈடுபடுதல்
சாப்பிடுவது, குடிப்பது
மாதவிடாய் ஏற்படுதல்
பிரசவ கால இரத்தம் வெளியேறுதல்
வேண்டுமென்றே வாந்தியெடுப்பது
முத்தமிடுதல், சுய இன்பம் போன்றவற்றின் மூலம் இந்திரியம் வெளிப்படுத்துவது
நரம்பு வழியாக சத்தூசி போன்றவற்றை உட்கொள்ளுதல்
இரத்ததானம் போன்றவற்றிக்காக இரத்தம் வெளியேற்றுதல்

02) நோன்பை முறிக்காத செயல்கள் யாவை?
A) நோன்பை முறிக்காத செயல்கள்:
வேண்டுமென்று என்றில்லாமல் மறதியாக சாப்பிடுவது, குடிப்பது
கணவின் மூலம் விந்துவெளிப்படுதல்
இரத்தப் பரிசோதனைக்காக குறைவான இரத்தம் எடுத்தல்
சுயவிருப்பமின்றி காயம், பல் பிடுங்குதல் மற்றும் மூக்கிலிருந்து இரத்தம் தானாக வெளியாகுதல் (மேற்கண்டவைகளை மறதியானால் அல்லாமல் வேண்டுமென்றே செய்தால் நோன்பு முறிந்துவிடும்.)
குளித்தல், நீந்துதல்
வெப்பத்தைத் தனித்துக்கொள்வதற்காக தண்ணீரை உடலில் தெளித்துக்கொள்வது
பல் துலக்குதல் (விரும்பத்தக்கது)
வாய் வழியாக உட்கொள்ளாத வகையில் வைத்தியம் செய்துகொள்வது (உ.ம். ஊசி போடுவது, கண், மூக்கு, காது ஆகியவற்றிக்கு சொட்டு மருந்து இடுதல்)
வயிற்றுக்குள் சென்றுவிடாத வகையில் உணவை ருசிபார்ப்பது
வாய்கொப்பளிப்பது
வயிற்றினுள் தண்ணீர் சென்றுவிடாத வகையில் பக்குவமாக நாசிக்கு தண்ணீர் செலுத்துவது.
வாசனைப் பொருட்களை உபயோகிப்பது, அவற்றை நுகர்வது
நேரம் தெரியாது, சூரியன் மறைந்துவிட்டதாக எண்ணி, சூரியன் மறைவதற்கு முன்னரோ, அல்லது பஜ்ரு நேரம் வரவில்லை என்று எண்ணி, பஜ்ர் நேரம் வந்ததற்குப் பின்னரோ, சாப்பிட்டு விட்டால் நோன்பு முறியாது. எனினும் சரியான நேரத்தை தெரிந்து விட்டால், உடனே உணவை நிறுத்திக் கொள்ள வேண்டும்.
கண்ணுக்கு சுருமா இடுதல்
03) நோன்பின் சுன்னத்துக்கள் யாவை?
1) ஸஹர் செய்தல்
2) விரைந்து நோன்பு துறத்தல்
3) துஆச் செய்தல்
04) ஸஹர் செய்வதன் சிறப்பு யாது?
A) நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் ‘ஸஹர் செய்யுங்கள்; ஏனெனில் ஸஹர் உணவில் பரக்கத் உள்ளது’ (புகாரி, முஸ்லிம்)
இரவின் கடைசி வரை ஸஹர் செய்வதை பிற்படுத்துவது சுன்னத்தாகும்.
05) நோன்பின் நிய்யத்தை எப்போது வைக்க வேண்டும்?
பர்ளான நோன்பு நோற்கும் விசயத்தில் பஜ்ர் உதயமாவதற்கு முன் நோன்பிற்குரிய நிய்யத்தை வைத்துக்கொள்வது கடமையாகும்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ‘யார் நோன்பு நோற்க பஜ்ருக்கு முன்னால் நிய்யத்தை சேர்த்து வைக்கவில்லையோ அவரது நோன்பு கூடாது’ (அறிவிப்பவர் : ஹஃப்ஸா (ரலி), ஆதாரம் : அபூதாவுது, திர்மிதி, நஸயீ)

06) நோன்பின் நிய்யத்தை எவ்வாறு வைக்க வேண்டும்?
நிய்யத் (எண்ணம்) வைப்பது உள்ளத்தில் தான்! வாயால் அல்ல!

07) நோன்பாளிகள் தவிர்ந்துக்கொள்ள வேண்டியவைகள் யாவை?
யார் கெட்ட, பொய் பேச்சுக்களையும், அதை செயல்படுத்துவதையும் விட்டுவிடவில்லையோ அவன் நோன்பு நோற்று அவனது சாப்பாட்டையும் குடிப்பையும் விட்டு பசியில் இருப்பதனால் அல்லாஹ்வுக்கு எந்த தேவையும் இல்லை!’ (புகாரி)
08) நோன்பாளி நோன்பு திறக்கும் நேரத்தில் கேட்கும் துஆ ஏற்றுக்கொள்ளப்படுமா?
A) “நோன்பாளி நோன்பு திறக்கும் நேரத்தில் கேட்கும் துஆ மறுக்கப்படமாட்டாது” (இப்னுமாஜா)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ” மூன்று துஆக்கள் ஏற்றுக் கொள்ளப்படும். நோன்பாளியின் துஆ, அநீதியிழைக்கப்பட்டவனின் துஆ, பயணியின் துஆ” (பைஹகி)
09) நோன்பு திறந்தவுடன் கூறவேண்டிய துஆ எது?
A) ‘தஹபள் ளமவு வப்தல்லதில் உரூக் வஸபதல் அஜ்ரு இன்ஷா அல்லாஹ்’
பொருள்: தாகம் தனிந்தது. நரம்புகள் நனைந்தன. அல்லாஹ் நாடினால் கூலியும் கிடைத்துவிடும்.
10) எதைக்கொண்டு நோன்பு திறக்க வேண்டும்?
A) கனிந்த பேரித்தம் பழம் மூலம் நோன்பு திறப்பது சுன்னத் ஆகும். அது கிடைக்காவிடில் காய்ந்த பேரீத்தம் மூலமும் அதுவும் கிடைக்காவிடில் தண்ணீர் மூலமும் அதுவும் கிடைக்காவிடில் கிடைப்பதைக்கொண்டு நோன்பு திறப்பது சுன்னத்தாகும்.
11) ரமலான் இரவுத் தொழுகையின் (தராவீஹ்) சிறப்பு என்ன?
A) ‘எவர் ரமலான் இரவில் ஈமானுடனும் நற்கூலி கிடைக்கும் என்ற எண்ணத்துடனும் நின்று வணங்குகிறாரோ அவரது முன் சென்ற பாவங்கள் அவருக்கு மன்னிக்கப்படுகின்றன’ என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (புகாரி, முஸ்லிம்)
அதிகமாகவே அறியாத மக்களும் இருக்கின்றார்கள் அவர்களுக்காகவும் பகிர்ந்து அறியபடுத்துவோம்.
16
33 Shares

Tuesday, April 13, 2021

அடுத்த மாதம் சர்வதேச விமானங்களை மீண்டும் தொடங்குவதற்கான ஏற்பாடுகள் குறித்து சவுதியா(Saudi Arabian Airlines) ஆலோசனை.



போக்குவரத்து அமைச்சர் Saleh Al-Jasser தலைமையிலான சவுதி அரேபிய ஏர்லைன்ஸ் கார்ப்பரேஷனின் இயக்குநர்கள் குழு, அடுத்த மாதம் சர்வதேச விமானங்களை மீண்டும் தொடங்குவதற்கான முன்னேற்பாடுகளை விரைவுபடுத்த வலியுறுத்தியுள்ளது.

https://www.saudigazette.com.sa/article/605417/SAUDI-ARABIA/Saudia-discusses-preparations-for-resumption-of-international-flights-next-month


தகவல்:
:earth_africa: சவூதிவாழ் தமிழ் மன்றம்

மக்கா மதீனாவில், ரமலானில் தவக்கல்னா மூலம் அனைத்து விதமான Permitம் Check செய்வார்கள்


 ரமலான் மாதத்தில் அனுமதியின்றி உம்ரா செய்தால் 10,000ரியால் அபராதம்.


மேலும் அனுமதியின்றி மஸ்ஜிதுல் ஹரம் உள்ளே நுழைபவர்களுக்கு 1000ரியால் அபராதம் என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மக்கா மதீனாவில்,
ரமலானில் தவக்கல்னா மூலம் அனைத்து விதமான Permitம் Check செய்வார்கள்...
விதிமீறலில் ஈடுபடுபவர்களுக்கு 1000ரியால்கள் அபராதம்..
ரமலானில் தவக்கல்னா மூலம் அனைத்து விதமான Permitம் Check செய்வார்கள்...
விதிமீறலில் ஈடுபடுபவர்களுக்கு 1000ரியால்கள் அபராதம்..





சவூதியிலிருந்து தமிழகம் செல்லும் விமான பயணிகள் கவனத்திற்கு.

கீழ் உள்ள விண்ணப்பங்களை கட்டாயமாகப் பூர்த்தி செய்து பிரின்ட் அவுட் எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும் இல்லை எனில் உங்களுக்கு போர்டிங் பாஸ் (Boarding Pass) கொடுக்க மாட்டார்கள்..

*Air Suvidha*(Upload PCR Test report),
*TN ePass*ஆன்லைன் formஇல் register.
*PCR Report* கட்டாயம்(72Hrs Validity),
:white_check_mark: 2Copy Print எடுத்து கையில் வைத்து கொள்ளவும்.

:point_down:ONLINE Registration form Link:

:beginner: *Air Suvidha* :
https://www.newdelhiairport.in/airsuvidha/apho-registration

:beginner: *TN ePass* :
https://tnepass.tnega.org/#/user/pass



Monday, April 12, 2021

உலக மருத்துவத்தைத் திரும்பிப் பார்க்க வைத்த சென்னை மருத்துவம்!

 பல உலக நாடுகளின் மருத்துவத்தால் தீர்க்க முடியாத டின்னிட்டஸ் எனும் காது சார்ந்த பிரச்சனைக்குச் சென்னையைச் சேர்ந்த தனியார் மருத்துவமனை தீர்வளித்துள்ளது.

உலக அளவில் 15% முதல் 20% சதவீத மக்கள் மட்டுமே டின்னிடஸ் எனும் காது சார்ந்த நோயால் பாதிக்கப்படுகின்றனர். இந்த நோயின் காரணமாகப் பாதிக்கப்பட்டோரின் இரு காதுகளிலும் இரைச்சல் (ringing sound in ear) சத்தம் எந்நேரமும் கேட்டுக்கொண்டே இருக்கும். இதனால் பாதிக்கப்பட்டவருக்கு இரவு நேரங்களில் தூக்கமின்மை ஏற்படுகிறது. மேலும் இந்த குறிப்பிட்ட பிரச்சனைக்கு இதுவரை உலக நாடுகளால் தீர்வு காணமுடியவில்லை. இந்நிலையில் சென்னையைச் சேர்ந்த தனியார் மருத்துவமனை ஒன்று இந்த நோயால் பாதிப்படைந்த 26 வயது இளைஞர் ஒருவரை மைக்ரோவாஸ்குலர் டிகம்பரஷ்ஷன் எனும் அறுவை சிகிச்சையின் மூலம் குணப்படுத்தியுள்ளது.

2 வருட காலமாக டின்னிடஸ் நோயால் பாதிக்கப்பட்ட இளைஞரின் இரு காதுகளிலும் ரிங்கிங் ஒலியானது கேட்டுக்கொண்டே இருந்துள்ளது. இதனைச் சரிசெய்ய பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டும் சரியாகாத நிலையில் தற்போது மைக்ரோவாஸ்குலர் டிகம்பரஷ்ஷன் அறுவை சிகிச்சை செய்ததின் மூலம் சரியாகியுள்ளது. மேலும் உலக நாடுகளே டென்னிட்டஸ் நோய்க்கு இதுவரை தீர்வு காணாத நிலையில் சென்னையைச் சேர்ந்த எம்ஜிஎம் மருத்துவமனை தற்போது தீர்வுகண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.



கொரோனா பரவல் அதிகரிப்பு: முதல்வர் இன்று அமைச்சர்களுடன் ஆலோசனை!

 தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று முக்கிய ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பரவல் இரண்டாவது அலையின் தாக்கம் கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. இதையடுத்து கடந்த 10ஆம் தேதி முதல் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று மதியம் 12 மணி அளவில் தலைமைச் செயலகத்தில் மூத்த அமைச்சர்கள், சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தலைமை செயலாளர் ராஜிவ் ரஞ்சன், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முக்கிய ஆலோசனை மேற்கொள்கிறார். இந்த ஆலோசனையின்போது கொரோனா தடுப்பு பணிகளில் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.



தென் தமிழகம் மற்றும் உள் மாவட்டங்களில் மிதமான மழை!

 வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென் தமிழகம் மற்றும் தமிழகத்தின் உள் மாவட்டங்களின் பல்வேறு இடங்களில் மிதமான மழை பெய்துள்ளது.

மேலும், இன்று காலை முதல் சென்னை, திருநெல்வேலி, திருச்சி,
கன்னியாகுமரி, மதுரை, தென்காசி, கும்பகோணம் போன்ற பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்துள்ளது. கடந்த இரண்டு வாரங்களாக வெயிலின் தாக்கம் மிக அதிகமாக இருந்து வந்த நிலையில், தற்போது மழை பெய்தது, மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

வளிமண்டல சுழற்சியின் காரணமாக டெல்டா மாவட்டங்கள், தென் தமிழக மாவட்டங்களின் ஒரு சில இடங்களில் இன்று மிதமான மழை இருக்கும் எனவும் தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களிலும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், பெரம்பலூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.