Showing posts with label sources-yarlmuslim. Show all posts
Showing posts with label sources-yarlmuslim. Show all posts

Thursday, November 17, 2011

மாரடைப்பை தடுக்க புதிய ஊசிமருந்து கண்டுபிடிப்பு



ரத்தத்தில் கொழுப்பு சத்து அதிகரிப்பதால் மாரடைப்பு, பக்கவாதம் மற்றும் இருதய நோய்கள் ஏற்படுவதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். எனவே, கொழுப்பு சத்துள்ள உணவு பொருட்களை குறைத்து கொள்ளும்படி வலியுறுத்துகின்றனர்.

இருந்தும் ரத்தத்தில் உள்ள கொழுப்பு சத்தை கட்டுப்படுத்த ஸ்டேடின்ஸ் என்ற ஊசி மருந்தை சிலர் தினந்தோறும் பயன்படுத்தி வருகின்றனர். இந்த மருந்தை இங்கிலாந்தில் மட்டும் 40 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் இது சரிவர செயல்படவில்லை. மேலும் சில பக்க விளைவுகளை எற்படுத்துவதாக கருதி அவற்றை பயன்படுத்துவதை நிறுத்தி வருகின்றனர்.

இதை தொடர்ந்து தற்போது புதிய ஊசி மருந்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அதற்கு மேஜிக் புல்லட் ஜேப் என பெயரிட்டுள்ளனர். இந்த ஊசி மருந்து ரத்தத்தில் கெடுதல் விளைவிக்கும் கொழுப்பு சத்தை குறைத்து நலமான வாழ்வுக்கு வழி வகுக்கிறது. இந்த மருந்தை மனிதர்களிடம் பயன்படுத்துவது குறித்து முதல் கட்ட சோதனை நடத்தப்பட்டது.

இதற்கான ஆய்வு 18 வயது முதல் 45 வயது வரையிலான 54 ஆண்கள் மற்றும் 2 பெண்களிடம் நடத்தப் பட்டது. அதில், நல்ல பலன் கிடைத்துள்ளது. இந்த சிகிச்சை ஏ.எம்.ஜி145 என பெயரிடப்பட்டுள்ளது. இது விரைவில் பயன் பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது

மஸ்ஜித் அமைவிடத்தில் பன்றித்தலை புதைத்து ரத்தம் கொட்டினர் - சுவிஸில் சம்பவம்



மேலைநாடுகளில் “இஸ்லாமோ போபியோ“ என்ற முஸ்லீம் வெறுப்பு மனப்பான்மை பல இடங்களில் தளிர்த்து வருகின்றது. இதன் வெளிப்பாடாக மஸ்ஜித் , திருக்குரான் போன்றவற்றை இழிவுபடுத்தும் செயல்களும் தொடங்கியுள்ளன.

சுவிட்சர்லாந்தில் சோலோதுன் மாநிலத்தில் உள்ள கிராங்கெஸ் மாநகரத்தில் மஸ்ஜித்  கட்டுவதற்கு ஓர் இடம் தேர்வு செய்யப்பட்டது. அந்த இடத்தில் சில இஸ்லாம் வெறுப்பாளர்கள் ஓர் பன்றியையும் நான்கு பன்றிகளின் தலைகலையும் புதைத்து விட்டனர். மேலும் 120 லிட்டர் பன்றி ரத்தத்தையும் அங்கு கொட்டியுள்ளனர்.  முஸ்லீம்களுக்கு பன்றி மத விரோதமான விலங்கு என்பதால் இனி அந்த இடத்தில் மசூதி கட்டப்படமாட்டாது. அந்த இடத்தின் புனிதம் பன்றியால் கெட்டுவிட்டது என்பது இச்செயலைச் செய்தவர்களின் நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் ஆகும். 

இஸ்லாம் மத விடயங்களில் அருவருக்கத்தக்க வகையில் தலையிடுவதும் மத விரோதமான செயல்களில் ஈடுபடுவதும் சுவிஸ்ஸின் இஸ்லாமிய சென்ட்டரல் கவுன்சிலைச் சேர்ந்தர்களுக்கு வருத்தத்தை அளித்தது. இவர்கள் மேலை நாடுகளில் இஸ்லாமிய மதத்தினர் வாழப் பெருந்தடைகள் உருவாக்கப்படுவதாக நம்புகின்றனர். மசூதி கட்ட இருந்த காலி இடம் இருக்கின்ற கிராங்கெஸ் மாநகரத்தின் மேயரான போரிஸ் பங்கா இந்தச் செயலைக் கடுமையாகச் சாட்டினார். “இது மிகவும் கேவலமான, அருவருக்கத்தக்க செயல்” என்று கண்டித்தார். 

சுவிட்சர்லாந்தில் இஸ்லாம் தீவிரமாய் இருப்பதைத் தடுக்கவே இச்செயலில் சிலர் ஈடுபட்டுள்ளனர் என்று காவல்துறை தெரிவிக்கிறது. 

ஒபாமாவுக்கு ஏற்பட்ட பரிதாபம்



மேலைத்தேச நாடுகளில் பெரிய பெரிய பொறுப்புக்கள் வகிக்கும் ஜனாதிபதி, பிரதமர் போன்றோரை கேவலமாக கிண்டலடிப்பது வழமை. அமெரிக்க ஜனாதிபதியாக கடந்த 2009-ல் பதவியேற்ற ஒபாமா, அடுத்த ஆண்டு வரவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்காக தயாராகி வருகிறார்.

அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அமெரிக்க நிறுவனம் ஒன்று மலசல கூடங்களில் பயன்படுத்தும் (Toilet Paper) பேப்பர்களில் அவரது படத்தை அச்சிட்டு வெளியிட்டுள்ளது. www.obamatoiletpaper.com என்ற இணையதளத்தையும் தொடங்கியுள்ளது. ஒரு ரோல் 10 டொலர்.

ஒபாமா ஆட்சியில் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. நாட்டையும் சிறு தொழில்களையும் காப்பாற்ற இந்த Toilet பேப்பரை வாங்குங்கள் என்று விளம்பரம் செய்திருக்கிறார்கள். அமெரிக்காவில் உள்ளாடை, செருப்புகளில் தலைவர்கள், சாமி படங்களை அச்சிட்டு விற்பது சகஜம். இதை மரியாதை குறைவாக அவர்கள் நினைப்பதில்லை. ஆனால், ஒபாமாவை கேவலப்படுத்தும் நோக்கிலேயே Toilet பேப்பரில் அவரது படத்தை அச்சிட்டுள்ளனர்.

சிரியாவில் புதிய திருப்பம் - புதிய மோதல்கள் ஆரம்பம்



சிரிய விமானப் படையின் உளவுப் பிரிவு கட்டடத் தொகுதி மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சிரிய இராணுவத்தில் இருந்து பிரிந்து சென்ற சிரியாவின் சுயாதீன இராணுவப் படை இந்த தாக்குதலை நடத்தியதாக அரச எதிர்ப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் சிரியாவில் அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் ஆரம்பித்து கடந்த 8 மாதங்களில் அந்நாட்டு பாதுகாப்பு படையினர் மீது நடத்தப்பட்ட மோசமான தாக்குதலாக இது பதிவாகியுள்ளது.

சிரிய தலைநகர் டமஸ்கஸ்ஸின் தெற்காக அமைந்துள்ள ஹரஸ்டா பகுதியில் இருக்கும் விமானப் படையின் உளவுப் பிரிவு கட்டடத் தொகுதி மீதே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதன்போது சிரிய இராணுவத்தில் இருந்து பிரிந்த சுயாதீன இராணுவப் படை இந்த கட்டடத் தொகுதி மீது நேற்று அதிகாலை அளவில் எறிகணை மற்றும் இயந்திர துப்பாக்கிகள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலால் மேற்படி உளவுப் பிரிவு கட்டடம் சேதமடைந்துள்ளதோடு பல மணி நேரமாக இரு தரப்புக்கும் இடையில் மோதல்கள் நீடித்ததாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. எனினும் இந்த தாக்குதல் சம்பவத்தால் ஏற்பட்ட சேத விபரங்கள் குறித்து தகவல் தெரியவில்லை.

சிரியாவில் நேற்று முன்தினம் எதிர்ப்பாளர்களுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையில் ஏற்பட்ட வன்முறைகளில் 70 பேரளவில் கொல்லப்பட்டுள்ளனர்.  இச்சம்பவத்திற்கு பின்னரே உளவுப் பிரிவு தளத்தின் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சிரியாவில் இராணுவ மற்றும் விமானப்படை உளவுப் பிரிவுகள் சுதந்திரமாக இயங்கி வருகின்றன. இந்த இரு பிரிவுகளும் ஜனாதிபதி பஷர் அல் அசாத்துக்கு எதிரான மக்கள் கிளர்ச்சியை ஒடுக்க முக்கிய பங்கு வகித்து வருகின்றன.

இதில் சிரிய பாதுகாப்புப் படை ஜனாதிபதி பஷர் அல் அசாத்தின் சகோதரர் மஹரின் கட்டுப்பாட்டில் உள்ளது. இதில் முக்கிய பதவிகளில் ஷியா முஸ்லிம்கள் இருந்து வருகின்றனர். இதனால் அருதிப்தியடைந்த இராணுவத்தினரின் பெரும்பான்மையினரைக் தொண்ட சுன்னி முஸ்லிம்கள் சிலர் பிரிந்து எதிர்ப்பாளர்களுடன் செயற்பட்டு வருவதாக தெரியவருகிறது. ஏற்கனவே சிரிய அரசு, ஆயுதம் ஏந்திய தீவிரவாதிகள் செயற்பட்டு வருவதாக குறிப்பிட்டுள்ளது. இந்த தீவிரவாதிகள் 1,100 இராணுவத்தினரை கொன்றுள்ளதாகவும் சிரிய அரசு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, சிரியாவை அரபு லீக் அமைப்பு தடை நீக்கம் செய்ததைத் தொடர்ந்து அந்நாட்டின் மீதான சர்வதேச அழுத்தங்களும் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் சிரியாவுக்கு விநியோகித்துவரும் மீன்சாரத்தை தடை செய்யப் போவதாக அயல்நாடான துருக்கி எச்சரித்துள்ளது.

துருக்கியின் வலு சக்தி அமைச்சர் டனர் யில்டிஸ் துருக்கியின் அனடோலியன் செய்திச் சேவைக்கு அளித்த பேட்டியில், “நாம் சிரியாவுக்கு தற்போது மின் சாரத்தை வழங்கி வருகிறோம். சிரியா தொடர்ந்து இவ்வாறே செயற்பட்டால் அவர்களுக்கு மின்சாரம் வழங்குவது பற்றி மீள் பரிசீலனை செய்யவேண்டி இருக்கும்” என குறிப்பிட்டார்.

இதேபோன்று சிரியா கத்தினுனியில் நடந்து வருவதாக துருக்கி பிரதமர் ரிசப் தய்யிப் எர்டோகான் எச்சரித்துள்ளார். அத்துடன் சிரிய ஜனாதிபதியின் செயற்பாடுகள் அவரையும் ரத்தம் உண்ணும் தலைவராக மாற்றிவிடும் என குறிப்பிட்டார். இந்நிலையில் சிரியாவிலும் மற்றுமொரு சிவில் யுத்தம் உருவாகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக ஐ.நா. எச்சரித்துள்ளது. ஐ.நா.வின் மனித உரிமை ஆணையர் நவனீதன் பிள்ளை அண்மையில் வெளியிட்ட அறிக்கையில், பொது மக்களின் அமைதியான கோரிக்கைகளுக்கு வன்முறையால் பதலளிக்க முற்படும் நிலையில் அவர்களும் மேலும் ஒரு கிளிர்ச்சிக்கு செல்ல வாய்ப்பு உள்ளது. இவ்வாறுதான் லிபியாவிலும் ஏற்பட்டது. சிரியாவிலும் இது நிகழவாய்ப்பு இருக்கிறது என்று குறிப்பிட்டார்.

இதனிடையே சிரியா விவகாரம் குறித்து ஆலோசிக்க அரபு லீக் அமைப்பின் அவசரக் கூட்டம் நேற்றும் மொரோக்கோவில் நடைபெற்றது. எனினும் இந்த கூட்டத்தை சிரிய அரசு புறக்கணித்தது.

அவுஸ்திரேலியாவிலும் அமெரிக்க படைகள் - சீனா எதிர்ப்பு



அமெரிக்க மரைன்ஸ் படையினர் இரண்டாயிரத்து ஐநூறு பேர் வரையிலானவர்கள் தங்கக்கூடிய இராணுவ தளம் ஒன்று ஆஸ்திரேலிய மண்ணில் உருவாக்கப்படுவதற்கு சீனாவிடம் இருந்து விமர்சனமும் எதிர்ப்பும் கலந்த பதில் வந்திருக்கிறது. ஆஸ்திரேலியாவில் அமெரிக்கா இராணுவ ரீதியில் பங்களிப்பு செய்வதென்பது கணிசமான அளவில் அதிகரிக்கப்போகிறது என்பதை அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கோடிகாட்டியுள்ளார்.

ஆஸ்திரேலியத் தலைநகர் கான்பெர்ரா வந்திறங்கி உரையாற்றிய அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, ஆசிய பசிஃபிக் வட்டகை முழுமைக்குமான தமது கவனம் அக்கறையெல்லாம் இனி அதிகரிக்கப்படும் என்று தெளிவுபடுத்தினார். ஆஸ்திரேலியாவின் வட பகுதியில் புதிதாக அமைக்கப்படவுள்ள இராணுவ தளத்தில் முதலில் சில நூறு மரைன்ஸ் படையினர் இருப்பார்கள். பின்னர் இந்த எண்ணிக்கை இரண்டாயிரத்து ஐநூறாக அதிகரிக்கும்.

ஆஸ்திரேலியாவில் ஏற்படுத்தப்படுகின்ற இந்த புதிய வசதிகளையெல்லாம் அமெரிக்க இராணுவ விமானங்களும் போர்க் கப்பல்களும் பயன்படுத்திக்கொள்ளும். இராணுவ ரீதியில் பார்த்தால் இவையெல்லாம் சின்ன ஆரம்பம்தான் என்றாலும், இதன் மூலம் வெளியிடப்படும் அரசியல் சமிக்ஞைகள் பெரியவை என்று சொல்லலாம்.

கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாக ஆப்கானிஸ்தான், மத்திய கிழக்கு போன்ற பகுதிகளில் குவிந்துவிட்டிருந்த அமெரிக்காவுடைய கவனம் தற்போது மீண்டும் ஆசிய பசிபிக் வட்டகைக்கு திரும்புகிறது என்ற செய்தியை உலகுக்கு சொல்ல ஒபாமா நிர்வாகம் ஆர்வமாக இருக்கிறது என்று கூறலாம். அமெரிக்காவுடைய இந்த நகர்வுக்கு சீனா எச்சரிக்கையாக அதேநேரம் எதிர்ப்பு காட்டும் வகையில் பதில் தருந்துள்ளது.

தெற்கு சீனக் கடற்பரப்பில் எழுகின்ற எல்லைத் தகராறுகளை அப்பகுதி நாடுகள் ஒருவரை ஒருவர் மிரட்டாமல் சுமூகமாகப் பேசித் தீர்த்துக்கொள்ள வேண்டும் என ஃபிலிப்பைன்ஸ் சென்றுள்ள அமெரிக்க ராஜாங்கச் செயலர் ஹில்லாரி கிளிண்டன் கூறியதற்ககு சீனா தெரிவித்துள்ள பதில் அதிகம் கவனிக்கப்பட வேண்டிய ஒரு விஷயம் ஆகும்.

இந்தப் பிரச்சினையில் சம்பந்தப்படாதவர்கள் தலையிடுவது எந்த வகையிலும் பிரச்சினையைத் தீர்க்க உதவப்போவதில்லை என சீன வெளியுறவுத்துறை சார்பாகப் பேசவல்ல ஒருவர் கூறியிருந்தார்.

அமெரிக்காவுடைய தற்போதைய நகர்வு ஆஸ்திரேலியா போன்ற அதனுடைய கூட்டாளி நாடுகளுக்கு வேண்டுமானால் நம்பிக்கை ஊட்டுவதாக இருக்கலாம், ஆனால் சீனாவுக்கு இதுஎரிச்சலூட்டும் ஒன்றாகவே அமையும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

ஹமாஸும், பதாவும் மீண்டும் பேசுகின்றன


பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ் மற்றும் ஹமாஸ் இயக்கத் தலைவர் காலீத் மெஷல் இருவரும், இம்மாதம் 25ம் தேதி, எகிப்து தலைநகர் கெய்ரோவில் சந்தித்து, சமரச பேச்சு நடத்த உள்ளனர். பாலஸ்தீன விடுதலைக்காக பல்வேறு இயக்கங்கள் போராடி வருகின்றன. இவையனைத்தும், "பாலஸ்தீன விடுதலை கூட்டமைப்பு' (பி.எல்.ஓ.,) என்ற ஒரு பெயரில் ஒன்றுபடுத்தப்பட்டுள்ளன. 

யாசர் அராபத்துடன் கருத்து வேறுபட்ட ஹமாஸ் இயக்கம், 2006 பொதுத் தேர்தலில், காசா நிலப் பகுதியில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. அன்று முதல் ஹமாசுக்கும், பதாவுக்கும் இடையில் ஏழாம் பொருத்தமாகத் தான் இருந்து வருகிறது. இடையில், இருதரப்புக்கும் இடையிலான கருத்து வேறுபாடுகளைக் களையும் வகையில், சமரச பேச்சுவார்த்தைகள் நடந்தும் பயனில்லை. இந்நிலையில், இம்மாதம் 25ம் தேதி கெய்ரோவில், பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாசும், ஹமாஸ் தலைவர் காலீத் மெஷலும் சந்தித்துப் பேச உள்ளனர்.

இதுகுறித்து பி.எல்.ஓ., வெளியிட்டுள்ள அறிக்கையில்,"இந்தப் பேச்சுவார்த்தை மூலம் இருதரப்புக்கும் ஏற்படும் இணக்கம், பொதுத் தேர்தலுக்கு வழிவகுக்கும். மேலும், பிளவுபட்டுள்ள பாலஸ்தீனம், ஐ.நா.,வில் முழு உறுப்பினர் அந்தஸ்து எவ்வாறு பெற முடியும் என்ற சந்தேகத்திற்கு விடையும் அளிக்கும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தாலியில் இப்படியும் ஒரு அரசியல் விளம்பரம்,



இத்தாலி நாட்டை சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று வெளியிட்டுள்ள விளம்பரம் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இத்தாலி நாட்டைசேர்ந்த ஆடைகள் தயாரிக்கும் நிறுவனம் பெனிட்டன். இந்த நிறுவனம் உலகம் முழுவதும் தன்னுடைய வர்த்தகத்தை விளம்பரப்படுத்துவதற்காக கடந்த 1990-ம் ஆண்டிலிருந்து பத்திரிகை மற்றும் தனது இணையதளத்தில் புதுமையான விளம்பரங்களை வெளியிட்டு வந்துள்ளது. 

இந்த விளம்பரங்களால் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் பாலஸ்தீன அதிபர் முகம்மது அப்பா‌ஸை உதட்டுடன் உதடு முத்தம் தரும் போட்டோவை வெளியி்ட்டுள்ளது. மேலும் பிரான்ஸ்அதிபர் நிகோலஸ் சர்கோஸியும் ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்கல் ஆகியோர் மேற்கண்டவாறு முத்தம் தரும்படியும் போட்டோவை வெளியிட்டிருந்தது. 

தற்போது சீன அதிபர் ஹூ ஜிண்டாவ் மற்றும் அமெரி்க்க அதிபர் ஒபாமாவும் உதடுடன் உதடு சேர்த்து முத்தம் தருவது போன்று படத்‌தை வெளியிட்டுள்ளது. நிறுவனத்தி்ன் இத்தகைய விளம்பரத்தை நிறுத்த வேண்டுமென இத்தாலியின் கத்த‌ோலிக்‌க தொலைக்காட்சி நிறுவனம் கண்டித்துள்ளது குறிப்பிட்டுள்ளது.