Monday, November 1, 2010

ஈராக்கில் சர்ச்சிற்குள் பிணைக்கைதிகளாக இருந்த 100 பேர் விடுவிப்பு

பாக்தாத்: ஈராக்கில் சர்ச்சிற்குள் புகுந்த அல்கொய்தா பயங்கரவாதிகள், பெண்கள், குழந்தைகள் உள்பட 100 பேரை பிணைக்கைதிகளாக பிடித்து வைத்துள்ளனர். ஈராக்கின் மத்திய பாக்தாத் நகரில் கராடா பகுதியில் உள்ளது சையத்அல்- நஜாஹ் சர்ச் ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஏராளமானோர் குழந்தைகளுடன் வந்திருந்தனர். அப்போது சர்ச்சிற்குள் திடீரென ஆயதங்களுடன் புகுந்த பயங்கரவாதிகள் அவர்களை பிணைக்கைதிகளாக பிடித்து வைத்தனர். சம்பவம் அறிந்த பாதுகாப்புப்படையினர் சர்ச்சினை முற்றுகையிட்ட போது அவர்கள் தாங்கள் பிடித்துள்ள பிணைக்கைதிகளை கொன்றுவிடுவதாகவும், அவர்களை விடுவிக்க ‌வேண்டுமெனில் ஈராக் , எகிப்து சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள அல்-கொய்தாவினர் விடுதலை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இ‌தனை அல்-பஹாதியா டி.வி. செய்தி ஒளிபரப்பியது. இதுகுறித்து ஈராக் உள்துறை அமைச்சகம் கூறுகையில், சர்ச்சில் முதலில் துப்பாக்கி சத்தம் கேட்டதாகவும், 4 பேர் காயமடைந்ததாகவும் ஈராக்கிய டி.வி. சேனல் செய்தி வெளியிட்டது. பிறகு தான் சர்ச்சில் பயங்கரவாதிகள் ஊடுருவியிருப்பதும் அங்கு பெண்கள்,குழந்தைகள் உள்பட 100 பேரை பிணையக்கைதிகளாக பிடிக்கப்பட்டிருப்பதும் தெரி்யவந்தது என கூறியுள்ளது. இந்நிலையில் ஈராக் ராணுவ செய்தி தொடர்பாளர் காசிம் அல-மெளசாவி தெரிவிக்கையில் பாதுகாப்புப்படையினர் நடத்திய துப்பாக்கி்ச்சண்டையில் 8 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். 37 அப்பாவி மக்கள் பலியாயினர். இந்த சண்டைக்குப்பின் சர்ச்சில் பிணைக்கைதிகளாக இருந்த 100 பேர் மீட்‌கப்பட்டனர் என்றார்.http://www.dinamalar.com/News_Detail.asp?Id=118105

0 comments:

Post a Comment