Wednesday, May 5, 2021

நரேந்திர மோதியின் தொகுதியை சிதைக்கும் கொரோனா: கடுஞ்சினத்தில் மக்கள்

ஹிந்துக்களின் புனித நகரமான வாரணாசி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளும் கொரோனா வைரஸின் இரண்டாவது அலையில் சிக்கி மீள முடியாமல் தவித்து வருகின்றன.இத்தகைய கடினமான தருணத்தில் தங்களது எம்பியான பிரதமர் நரேந்திர மோதி எங்கே போனார் என்று பலர் ஆவேசமாகக் கேட்கத் தொடங்கியுள்ளனர்.இரண்டாவது அலையின் தீவிரத்தால் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2 கோடியைக் கடந்துவிட்டது. 2.2 லட்சத்துக்கும் அதிகமானோர் இறந்துவிட்டனர். வாரணாசியில் மருத்துவக் கட்டமைப்பு...

ஆக்சிஜனுக்கு மக்கள் தவிக்கும்போது ரூ.13ஆயிரம் கோடி விஸ்டா திட்டம் தேவையா! பிரியங்கா காந்தி ஆவேசம்!

 டெல்லி: நாடே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, ஆக்சிஜனுக்காக அல்லல்பட்டுக்கொண்டிருக்கையில், ரூ.13ஆயிரம் கோடியில் விஸ்டா திட்டம் தேவையா என காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ஆவேசமாக கேள்வி எழுப்பி உள்ளார்.நாடு முழுவதும் கொரோனாவின் 2வது அலையின் தாக்கம் வீறுகொண்டு பரவி வருகிறது. இதனால், கொரோனா நோயாளிகள் ஆக்சிஜ்ன் மற்றும் மருந்து பற்றாக்குறையால் உயிரிழந்து வருகின்றனர் கொரோனா பரவலை தடுக்க பல மாநிலங்களில் பொதுமுடக்கம், பகுதி நேர முடக்கங்கள்...

சிங்கப்பூரிலிருந்து மருத்துவ உபகரணங்களுடன் கிளம்பியது இந்திய கடற்படையில் கப்பல்

 நாடு முழுவதும் கரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வரும் நிலையில் சிங்கப்பூரிலிருந்து மருத்துவ உபகரணங்களுடன் இந்திய கடற்படையின் கப்பல் கிளம்பியுள்ளது.இந்தியாவில் நாள்தோறும் 4 லட்சம் பேர் வரை கரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும், 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி வருகின்றனர்.இதனால் நாட்டில் பல மாநிலங்களில் ஆக்ஸிஜன், கரோனா சிகிச்சைக்கு தேவையான மருந்துகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.இதையடுத்து பல நாடுகளிலிருந்து இந்தியாவுக்கு மருத்துவ...

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் கண்காணிப்பு குழு ஆய்வு..!

 தூத்துக்குடி ஆட்சியர் செந்தில் ராஜ் தலைமையிலான குழு ஆலையின் மெட்டீரியல் கேட் வழியாக ஆய்வு மேற்கொண்டனர்.தூத்துக்குடியில் மூடப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய அனுமதி கோரி வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. அப்போது, மத்திய அரசு வழக்கறிஞர் ஆக்சிஜன் உற்பத்திக்காக அனுமதிக்கலாம் என கூறியிருந்தார். இதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்தது.இதைதொடர்ந்து, ஆக்ஸிஜன் தயாரிக்க ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசே ஏற்று நடத்தலாம்...

திருச்சியில் தீ விபத்து; ஒரு கடை முற்றிலும் எரிந்து நாசம்- 2 கடைகளில் சேதம்

 திருச்சி ஒத்தக்கடை பகுதியில் உள்ள வாகன உதிரிபாக விற்பனைக் கடையில், இன்று காலை தீ விபத்து ஏற்பட்டது. இதில், அந்தக் கடை முற்றிலும் எரிந்து நாசமானது. மேலும், அந்தக் கடை அருகே இருந்த மேலும் 2 கடைகளிலும் சேதம் ஏற்பட்டது.திருச்சி ஒத்தக்கடை பகுதியில் பாரதிதாசன் சாலையில் வாகன உதிரிபாக விற்பனைக் கடை உள்ளது. கார்களுக்கான துணைக் கருவிகள் விற்கும் இந்தக் கடையில் இன்று காலை சுமார் 5.30 மணியளவில் கரும் புகை வெளியேறியது.இதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் திருச்சி...