Showing posts with label அதிரை மின்வாரியம் முற்றுகை. Show all posts
Showing posts with label அதிரை மின்வாரியம் முற்றுகை. Show all posts

Thursday, August 9, 2012

நள்ளிரவில் சாலைமறியல் செய்த அதிரை இளைஞர்கள்! புகைப்படங்களுடன்...




புனிதமிகு ரமலான் மாதத்தில் வருடம் தோறும் ஏற்படுத்தப்படும் மின்வெட்டு இந்த வருடமும் நேற்று (08/08/2012) இரவு 09:30 மணி முதல் நள்ளிரவு 1:50 மணி வரை மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் அதிரை மக்கள் மிகவும் அவதிக்குள்ளாயினர். இதனை தொடர்ந்து சமூக ஆர்வலர்கள் அதிரை மின் வாரியத்தை தொடர்பு கொண்டபொழுது மதுக்கூரில் மின்சாரம் தடைப்பட்டுள்ளதால் மின்சாரம் எப்பொழுது வரும் என்று தெரியவில்லை என்று மின்வாரிய ஊழியர்கள் கூறினர். இதை உறுதி செய்ய மதுக்கூர் மின்சார வாரியத்தை தொடர்புக்கொண்டு கேட்டபொழுது இங்கு எந்த ஒருவிதமான மின் தடையும் இல்லை என்று கூறினர். 
அலட்சிய போக்குடன் பொய்யான தகவலை கூறிய அதிரை மின் வாரியத்தை கண்டித்து இளைஞர்கள் நமதூர் ECR ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் ECR ரோட்டில் சுமார் ஒருமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுப்பட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்ப்பட்டதால் மறியல் கைவிடப்பட்டது.

Thursday, July 12, 2012

அதிரை மின்வாரியம் முற்றுகை!மின்வாரிய அலுவலகத்தில் நடந்த விவாதம் காணொளி மற்றும் புகைபடம்

அதிரை செக்கடிமேட்டு மின்மாற்றியில் சமிப காலமாக அடிக்கடி  பழுதாவதினால் இப்பகுதிவாழ்  மக்கள் மிகவும் பாதிக்கப்படுவதாக எழுந்த   புகாரை தொடர்ந்து அதிரை பேரூராட்சி தலைவர் தலைமையில் இன்று காலை    10 மனி அளவில் நூற்றுகனக்கானோர் அதிரை மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர். 

                       அதிரை மின்வாரிய அலுவலகத்தில் நடந்த விவாதம்