Showing posts with label EB. Show all posts
Showing posts with label EB. Show all posts

Wednesday, September 26, 2012

மின்சா(வு)ரவாரியம் முன் ஆர்பாட்டம்-அதிரை சகோதரியின் உருக்கமான பேட்டி!(Video)

அதிரையில் தொடர் மின்வெட்டு காரணமாக அதிரை பேரூராட்சியால் பொதுமக்களுக்கு  முறையாக குடிநீர் சப்ளை செய்ய முடியவில்லை  இதனை தொடர்ந்து குடிநீர்தேக்க தொட்டிகளுக்கு தனியாக மின் பாதை அமைத்து தர வேண்டும் என அதிரை நகர திமுக சார்பாக இன்று காலை சரியாக 10 மனி அளவில் நமதூர் பேருந்து நிலையத்தில் இருந்து பேரணியாக சென்று அதிரை மின்சா(வு)ரவாரியம் முன்பு கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. இதில் பொதுமக்கள் ஏறாலமானோர் கலந்து கொண்டனர்.
அதிரை சகோதரியின் உருக்கமான பேட்டி!
                             


அதிரை பேரூராட்சி தலைவரின் பேட்டி!

                             

Wednesday, July 18, 2012

சகோ. ஜாஹிர் உசேன் குடும்பத்தினருடன் சந்திப்பு...


 அதிரை EBயில் பணிபுரிந்து சமீபத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சகோ. ஜாஹிர் உசேனின் சொந்த ஊரான கூத்தாநல்லூரை அடுத்த அரிச்சந்திரபுரத்தில் அவர்களின் குடும்பத்தினரையும் மற்றும் ஜமாத்தார்களையும் சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியாவின்(SDPI) நிர்வாகிகள் 18/07/2012 அன்று நேரில் சந்தித்து அவர்களின் குடும்பத்தின் தற்போதைய சூழ்நிலை மற்றும் இரு குழந்தைகளின் எதிர்காலம் பற்றியும்  ஆலோசனை நடத்தினர்.
இச்சந்திப்பின் போது SDPI-ன் மாநில செயற்குழு உறுப்பினர் A.அபுபக்கர் சித்திக் SDPI-ன் தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் Z.முகமது இலியாஸ் SDPI-ன் அதிரை நகர செயலாளர் சேக் இல்முதீன் அதிரை நகர துணைத் தலைவர் இப்ராஹிம் அதிரை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் நகர தலைவர் M.அகமது சலீம் மற்றும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் திருவாரூர் மாவட்ட தலைவர் புலிவலம் அப்துல் லத்திப் அத்திக்கடை கிளை தலைவர் சுல்தான், அத்திக்கடை கிளை நிர்வாகிகள் மற்றும் ஜமாத்தார்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

ஜமாத்தார்களுடன் ஆலோசனை நடத்தும் காட்சி


சகோ. ஜாஹிரின் குடும்பத்தினர் மற்றும் குழந்தையுடன் SDPI-யினர்